search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் கொள்ளை"

    • சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • சூட்கேசில் இருந்த 5 பவுன் நகை திருடர்களிடமிருந்து தப்பியது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வண்டிக்கார தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி (33) இவரது மனைவி சரண்யா( 31). இவர்கள் இங்கு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சரண்யா திட்டக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு சரண்யா இரவு காவலர் பணிக்கு சென்றுள்ளார். இவரது கணவர் மனைவிக்கு இரவு உணவு எடுத்துக்கொண்டு கொடுத்துவிட்டு இரவு மனைவியுடன் அங்கேயே தங்கி உள்ளார்.

    இன்று காலை சுமார் 7 மணி அளவில் சத்தியமூர்த்தி தனது வீட்டிற்கு வந்து பார்க்கும்போது முன் பகுதியில் உள்ள பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகிலுள்ள திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த ஐந்தே முக்கால் பவுன் நகை, ,ரூ.40ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது .

    அங்கு வைத்திருந்த சூட்கேசில் இருந்த 5 பவுன் நகை திருடர்களிடமிருந்து தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளை குறித்து கோவில் பூசாரி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • கோவிலை சுற்றிவந்த மோப்பநாய், சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவாமூர் காமாட்சிப்பேட்டையில் ஊருக்கு வெளிப்புற பகுதியில் காளி கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை 6 மணிக்கு கோவிலை திறக்க பூசாரி வந்தார்.

    அப்போது கோவில் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கிராம பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    அவர்கள் வந்தவுடன் கோவிலுக்குள் உள்ள மற்ற பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். இதில் கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன்னாலான பூங்கரகத்தை காணவில்லை. இது தொடர்பாக கோவில் பூசாரி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின்பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்தனர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கோவிலுக்குள் இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். கோவிலை சுற்றிவந்த மோப்பநாய், சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீசார், கோவிலுக்கு வரும் வழிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும், நேற்று இரவு முதல் இன்று காலை வரை கோவில் பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்த தகவல் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • சசிகுமாரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சசிகுமார் கொடுத்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஓரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் நெய்வேலியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் மட்டும் ஓரையூருக்கு வந்து போவது வழக்கம்.

    இந்நிலையில் சசிகுமாரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி சசிகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, மோப்பநாய், கைரேகை நிபுணர்களுடன் அங்கு வந்தார்.

    கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்வக்குமார் வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • பீரோவை பார்த்த போது அதில் இருந்த 32 பவுன் நகை கொள்ளை போயிருப்பதை கண்டு செல்வக்குமார் திடுக்கிட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமா தேவி கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். முந்திரி விவசாயி. இவர் நேற்று கீழ்தளத்தில் உள்ள வீட்டு கதவை காற்றுக்காக திறந்து வைத்தார். பின்னர் குடும்பத்துடன் மாடியில் தூங்கினார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை திருடி கொண்டு தலைமறைவானார்கள். இன்று காலை எழுந்து வந்த செல்வக்குமார் வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 32 பவுன் நகை கொள்ளை போயிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிதுதூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்றனர். அவர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்து தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் வசித்து வந்த ஜெயபாலன், தனது மகனை பார்ப்பதற்காக குஜராத் சென்றார்.
    • இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பன் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 73). இவர் மின்வாரியத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மகன் ரஞ்சித்குமார், குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் வசித்து வந்த ஜெயபாலன், தனது மகனை பார்ப்பதற்காக குஜராத் சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். குஜராத்துக்கு சென்ற ஜெயபாலன் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் அருகே பட்டப்பகலில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழி வண்டிக்குப்பம் சேர்ந்தவர் சேகர் (வயது 50). காண்டிராக்டர். அவரது மனைவி குமுதம் சேகர். கடலூர் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார்.

    நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியில் சென்று இருந்தனர். பின்னர் சேகர் மற்றும் குடும்பத்தினர் சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்ததோடு பின்பக்கம் கதவு உடைந்து இருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த பீரோவும் உடைந்து திறந்திருந்தது.

    இதில் சென்று பார்த்த போது 3 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் அருகே பட்டப்பகலில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×