என் மலர்
செய்திகள்

கைதி தப்பியோட்டம்
கடலூரில் போலீசாரின் பிடியில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம்
கடலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைதான கைதி போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் நேற்று மதியம் அவரது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் காளியப்பன் வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அவரது மோட்டார் சைக்கிளை மர்ம மனிதர் யாரோ திருடி சென்று விட்டது தெரிய வந்தது.
காளியப்பன் அவரது மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். அப்போது கடலூர் நேதாஜி சாலைக்கு காளியப்பன் சென்றார். அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் காளியப்பனின் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார்.
உடனே காளியப்பன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஜான்சன் (வயது 24) என்பது தெரிய வந்தது. மேலும் காளியப்பனின் மோட்டார் சைக்கிளை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என ஜான்சனிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்தனர்.
அப்போது ஜான்சன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று போலீசாரிடம் கூறினார். உடனே ஜான்சனை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் ஜான்சனை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து ஜான்சன் தப்பி ஓடினார்.
உடனே போலீசார் அவரை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்களால் ஜான்சனை பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.
தப்பி ஓடிய விசாரணை கைதியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story