என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றும் பணி நடந்தது.
    X
    பண்ருட்டி பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றும் பணி நடந்தது.

    பண்ருட்டியில் 150 டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டது- நகராட்சி ஆணையாளர் அதிரடி

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி ஆணையாளர் மற்றும் ஊழியர்கள் விடிய, விடிய பண்ருட்டியில் அமைக்கப்பட்டிருந்த 150 டிஜிட்டல் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    சென்னையில் டிஜிட்டல் பேனர் விழுந்ததால் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கோர்ட்டு உத்தரவுபடி டிஜிட்டல் பேனர்கள் அதிரடியாக அகற்றும் பணி நடந்தது.

    இதனையொட்டி பண்ருட்டி நகராட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் நகரமைப்பு அலுவலர் செல்வம், துப்புரவு அலுவலர் சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் ஆரோக்கியசாமி, திண்ணாயிரமூர்த்தி, குமார், தேவநாதன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் விடிய, விடிய பண்ருட்டி 4 முனை சந்திப்பு, கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்திரோடு, ராஜாஜி சாலை, மற்றும் பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மற்றும் பெரிய 150 டிஜிட்டல் பேனர்களை அதிரடியாக அகற்றினர். பின்னர் அவற்றை லாரிகள் மூலம் ஏற்றிச் சென்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×