என் மலர்
கடலூர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் மாவட்ட மாணவர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் மாவட்ட மாணவர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் முகேஷ் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் கடல் கார்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் ராம்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். இந்த விலையை குறைக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் அன்பழகன், ராமதுரை, சாமி, ஆறுமுகம், தாமோதரன், மங்கலட்சுமி, சுந்தர், ஆனந்தன், விக்கி, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் அருகே சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் சப்- இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதுநகர் பகுதியில் சாராயம் விற்றதாக சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(வயது 47), செந்தில்(35), பீமாராவ் நகரை சேர்ந்த வனிதா(47), குயவன்குளம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ்(30), மணக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன்(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 380 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், பிறந்து 8 நாளே ஆன ஆண்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஒரத்தூர் போலீஸ் சரகம் காக்கங்குடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை என்கிற ராஜி (வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி சிவரஞ்சனி (24). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவரஞ்சனிக்கு கடந்த வாரம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் சிவரஞ்சனியை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் சிவரஞ்சனி அவரது குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார்.
கணவர் ராஜி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். எதற்காக இப்படி குடித்துவிட்டு வருகிறீர்கள் என்று சிவரஞ்சனி அவரது கணவரிடம் கேட்டார். அதற்கு அவர் நாம் இருவரும் கருப்பாக உள்ளோம். குழந்தை மட்டும் எப்படி கலராக பிறந்தது என்று மனைவியிடம் கேட்டார். இதனால் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜி அவரது மனைவி சிவரஞ்சனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். அதன் பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டில் தூங்கினர்.
நள்ளிரவில் கண்விழித்த ராஜி வீட்டின் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த பச்சிளங்குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல் வீட்டில் படுத்து தூங்கினார்.
காலையில் கண்விழித்த சிவரஞ்சனி அவரது குழந்தை தொட்டிலில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதபடி குழந்தை இறந்த சம்பவத்தை அவரது கணவர் ராஜியிடம் கூறினார். அப்போது ராஜி கூறிய பதில்கள் சிவரஞ்சனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஒரத்தூர் போலீசில் சிவரஞ்சனி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
குழந்தையின் இறப்பு தொடர்பாக ராஜியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் ராஜியை போலீஸ்நிலையத்துக்கு அழைத்த சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராஜி தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக கூறினார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ராஜியை கைது செய்தனர். பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் ஆண்குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா கடலூரில் நடந்த வீரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
பண்ருட்டி:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் வீரா என்கிற வீரங்கையன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை-கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
கடலூர் உழவர்சந்தை அருகே ரவுடி வீராவுக்கு சொந்தமான பழக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீரா வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் வீராவை பின்தொடர்ந்து சென்றனர். இதனை வீரா கவனிக்கவில்லை.
சுப்பராயலு நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் வீரா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் வீராவை சுற்றி வளைத்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அரிவாளால் வீராவை வெட்டினர். இதில் வீரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் ஆத்திரம் தணியாத அந்த கும்பல் வீராவின் தலையை துண்டித்தது. பின்னர் வீராவின் தலையை அருகில் குப்பங்குளம் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் முன்பு வீசி விட்டு சென்றனர்.
வீரா கொலை செய்யப்பட்ட தகவல் கடலூர் பகுதியில் இரவு நேரத்தில் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
வீராவை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடந்தது. இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
வீராவை வெட்டிக்கொன்ற கும்பல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் மலட்டாறு பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீசார் அவர்களை விரட்டி சென்று சுற்றி வளைத்தது.
அப்போது அந்த மர்ம கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. இதில் போலீசார் தாக்கப்பட்டனர். அதில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் போலீசாரையும் அரிவாளால் வெட்ட முயன்றார்.
உஷாரான போலீசார் ஒருவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது சுருண்டு விழுந்து இறந்தார்.
போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டவரின் பெயர் கிருஷ்ணா( 30). அவர் கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஆனார்.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா நேற்று இரவு கடலூரில் நடந்த வீரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட வீராவுக்கும், தற்போது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதன் பேரில்தான் வீரா கொலை செய்யப்பட்டுள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரவுடி கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டதும் அவரது வந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர்.
உஷாரான போலீசார் அவர்களில் 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் கடலூர், பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக சானிட்டரி நாப்கின் எந்திரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் வழங்கி தொடங்கி வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட பெண் போலீசார், பெண் அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் பணியின் போது ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், அவர்கள் பயன்படுத்தும் வகையில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் எந்திரத்தை அறிமுகம் செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முடிவு செய்தார்.
இதற்காக தனியார் நிறுவனங்கள் உதவியுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஆயுதப்படை பிரிவு, மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்பட அனைத்து போலீஸ் நிலையங்கள் என 65 இடங்களில் இந்த எந்திரங்கள் வைக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்ட எந்திரங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் பெண் காவலர்கள், அதிகாரிகள் நலனை கருத்தில் கொண்டு இந்த எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையங்களில் பணியின் போது, இந்த எந்திரத்தில் உள்ள நாப்கினை குறைந்த கட்டணத்தில் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல் பாதுகாப்புக்காக வெளியில் செல்லும் போது நடமாடும் கழிவறை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வாகனத்திலும் சானிட்டரி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதை பெண் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

அதன்படி கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக சானிட்டரி நாப்கின் எந்திரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெண் போலீசார், அதிகாரிகள், அந்த எந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு சானிட்டரி நாப்கின் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்ட எந்திரங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் பெண் காவலர்கள், அதிகாரிகள் நலனை கருத்தில் கொண்டு இந்த எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையங்களில் பணியின் போது, இந்த எந்திரத்தில் உள்ள நாப்கினை குறைந்த கட்டணத்தில் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல் பாதுகாப்புக்காக வெளியில் செல்லும் போது நடமாடும் கழிவறை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வாகனத்திலும் சானிட்டரி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதை பெண் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் வட்ட மாட்டுவண்டி விவசாய தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாட்டுவண்டி மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நடந்தது. இதற்கு வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஏதுவாக அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும், மூடப்பட்ட அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஜெயகுரு, தனசேகர், வைத்தியநாதன், மாயவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து, தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து விட்டு சென்றனர்.
விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் இருந்து போக்சோ கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாதா கோவில் திருவிழாவிற்கு ரேடியோ சவுண்ட் சர்வீஸ் வேலைக்காக வந்த அரசகுழி கிராமத்தைச் சேர்ந்த அஜித் (25) என்பவர் அந்த சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கடத்தி சென்றார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அஜீத் மீது விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அஜித்தை பிடித்து விருதாச்சலம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் இருந்த அஜித் காலையில் கழிவறைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர், அங்கிருந்து தப்பி ஓடினார். போலீஸ் நிலையத்தில் இருந்த விசாரணைக் கைதி தப்பி ஓட்டம் பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் தனித்தனிப் பிரிவாகப் பிரிந்து தப்பி ஓடிய அஜித்தை தேடி வருகின்றனர்.

ராமநத்தம் அருகே மான் கறி விற்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநத்தம்:
ராமநத்தம் அருகே தி.ஏந்தல் கிராமத்தில் மான்கறி விற்பனை செய்யப்படுவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மான் கறி விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 40) என்பதும், அவரிடம் மான் கறியை கொடுத்தது பெண்ணாடம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த பிரபு (33) என்பதும் தெரிந்தது.
இதையடுத்து பிரபுவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தி.ஏந்தல் வனப்பகுதி்க்குள் புகுந்து மான் வேட்டை நடத்தியதும், பின்னர் அதன் கறியை விற்பனைக்காக ராமசாமியிடம் கொடுத்ததும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து பிடிபட்ட 2 பேரையும் போலீசார் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரவி, வனவர் சிவகுமார், வனக்காப்பாளர் சங்கர், வனக்காவலர் சிவானந்தம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்ட 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கிலோ மான்கறியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவிலில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 21). இவர், வீரானந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவில் அண்ணாநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தனியாக சென்ற ஒரு பெண்ணிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே சரவணன், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். அவரை பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
பின்னர் இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரவணனை மீட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார்.
இதை பார்த்த போலீசார், அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த பரசுராமன் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் 150 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேர்வு கட்டணத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தியதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் சி.முட்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே கல்லூரியில் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும், தேர்வு எழுதாமலேயே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
அந்த வகையில் திறக்கப்பட்ட சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் மீண்டும் தேர்வு கட்டணத்தை செலுத்தி, தேர்வை எழுத வேண்டுமென கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ-மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் தேர்வு எழுத தாங்கள் தயாராக உள்ளதாகவும், மீண்டும் தேர்வு எழுத கட்டணம் செலுத்த மாட்டோம் எனவும் கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டமானது காலை 11 மணி முதல் மதியம் 12.45 வரை நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தை மீண்டும் கட்ட வற்புறுத்தினால், தாங்கள் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என கல்லூரி நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த வலியுறுத்தியதை கண்டித்து நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் வெண்மலையப்பர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ஆலடி சாலையில் பெரியகண்டியங்குப்பத்தில் வெண்மலையப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஏராளமான மீன்கள் இருந்தன. இந்நிலையில் குளத்தில் உள்ள மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குளத்தின் அருகில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் முந்திரி பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதற்கு தேவையான தண்ணீரை இந்த குளத்தில் இருந்து தான் அவர்கள் எடுத்து செல்கின்றனர்.
அவ்வாறு எடுத்து செல்லும் போது, சிலர் மருந்தை குளத்து தண்ணீரில் கலந்ததாக தெரிகிறது. இதனால் தான் குளத்தில் உள்ள ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.
மீன்கள் செத்து மிதப்பதால் குளத்தில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்தில் கால்நடைகளும் தண்ணீர் குடிக்க வரும். இதனால் அவைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
எனவே இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.