என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் போக்சோ கைதி தப்பி ஓட்டம்

    விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் இருந்து போக்சோ கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாதா கோவில் திருவிழாவிற்கு ரேடியோ சவுண்ட் சர்வீஸ் வேலைக்காக வந்த அரசகுழி கிராமத்தைச் சேர்ந்த அஜித் (25) என்பவர் அந்த சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கடத்தி சென்றார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் அஜீத் மீது விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அஜித்தை பிடித்து விருதாச்சலம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் இருந்த அஜித் காலையில் கழிவறைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர், அங்கிருந்து தப்பி ஓடினார். போலீஸ் நிலையத்தில் இருந்த விசாரணைக் கைதி தப்பி ஓட்டம் பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் தனித்தனிப் பிரிவாகப் பிரிந்து தப்பி ஓடிய அஜித்தை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×