என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் 550 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், மணிலா, எள், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் 550 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், மணிலா, எள், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை நேற்று காலை 10.45 மணி வரை பெய்தது. அதன்பிறகு மழை இல்லை. இருப்பினும் விடிய, விடிய காற்றுடன் பெய்த கன மழையால் கடலூரில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.
இதனால் விவசாயிகள் பயிரிட்டிருந்த வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளது. கடலூர் அருகே உச்சிமேடு, ஞானமேடு, சுபஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டிருந்த மிளகாய், கத்திரிக்காய், வெங்காயம், வெண்டை, மணிலா வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுமார் 200 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் வீணாகும் நிலை உள்ளது.
அதேபோல் கிளிஞ்சிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டிருந்த 100 ஏக்கர் மணிலா வயல்களிலும், குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள 200 ஏக்கர் எள் வயல்களிலும் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இது தவிர தாமதமாக நடவு செய்து, அறுவடைக்கு தயாராக இருந்த நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம், திருவந்திபுரம், வானமாதேவி ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. சில இடங்களில் வயல்களே தெரியாத அளவுக்கு நெற்பயிர்கள் மூழ்கி கிடக்கிறது. இதை வடிய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் மழைநீர் முழுமையாக வடிந்த பிறகே சேத விவரம் தெரிய வரும். இருப்பினும் மழைநீர் வயல்களில் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
கடலூர்:
தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சிக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
இதனையடுத்து தமிழக தேர்தல் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக கடந்த 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 2 நாள் பயணமாக சென்னை வந்தனர். அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர்கள், தேர்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று கடலூர் வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் குறைந்தது 4 அலுவலர்கள் தேவை. இப்பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதால், அவர்களது நிலை குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது. இதுதவிர ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
அதே வேளையில் தமிழகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. கடலூரில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புதிதாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் குறித்து, அனைத்து கட்சியினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் இடங்களே தேர்வு செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றுக்கான காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை. எனவே வாக்காளர் அடையாள அட்டைகளில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
மேலும் புதிதாக சுமார் 21 லட்சம் இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் என்ற சம்பவம் நடைபெறவில்லை. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது என்பது, தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது. மேலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து உள்ளூர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பல்வேறு போட்டிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 24 ஆயிரத்து 721 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 287 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
நேற்று மட்டும் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 399 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 53 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 33 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் அருகே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு மருதமலை, நகர்க்குழு பால்கி, ஆனந்த், தமிழ்மணி, வெங்கடேசன், ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளுக்கு பூ வைத்தும், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில், கியாஸ் சிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டும், மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே காடாம்புலியூாில் உள்ள கும்பகோணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு முந்திரி கொட்டையின் மேல் உள்ள தோட்டில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் இந்த எண்ணெயில் இருந்து மாற்று பொருளாக பவுடர் தயாரிக்கப்படுகிறது. இந்த பவுடர் பெயிண்ட், வாகன டயர்கள், பிரேக்லைனர் போன்றவைகள் தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று காலை வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 11 மணியளவில் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்து, வெளியே வந்தனர். தொழிற்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முந்திரி தோடு மூட்டைகள், முந்திரி எண்ணெய் ஆகியவை தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம், கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை நோில் பார்வையிட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் முதுநகரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 40). மீனவர். இவருடைய மனைவி மாலதி. சுந்தரமூர்த்திக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மாலதிக்கும், சுந்தரமூர்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும், கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று காலை பெய்த பலத்த மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களின் வெளியே விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுக்குப்பம், தேத்தாம்பட்டு, கண்டியான்குப்பம், பேரூர், மதகளிர் மாணிக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்தமழை கொட்டியது. சுமார் 2 மணிநேரம் பெய்த கன மழையின் காரணமாக அந்தபகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து சென்றனர்.
அங்கு நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவிலான நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு வெளியே அடுக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த திடீர் மழையின் காரணமாக விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமடைந்தன.
இதேபோல் கூடலையாத்தூர், எசனூர், குணமங்கலம், டி.ஆதிவராகநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களின் வெளியே விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நெல் கொள்முதல் நிலையங்களில் இடம் அமைத்து தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்தாண்டிகுப்பம், புதுக்குப்பம், கண்டரகோட்டை, அண்ணாகிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 11 மணி அளவில் சாரல் மழை பெய்தது. இந்த மழை அதிகாலைவரை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்தது.
இன்று காலையும் லேசாக சாரல் மழை பெய்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றனர். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழைபெய்து வருகிறது.

கடலூர் உள்பட 4 ஒன்றியங்களை சேர்ந்த 1,754 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதிஉதவியை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
கடலூர்:
கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய 4 ஒன்றியங்களை சேர்ந்த 1754 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 19 லட்சத்து 25 ஆயிரம் நிதிஉதவியும், தலா 8 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 14 கிலோ 32 கிராம் தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கும் விழா கடலூரில் நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 1754 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவிகளை வழங்கினார்.
முன்னதாக சமூக நல அலுவலர் அன்பழகி வரவேற்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், ஒன்றிய குழு தலைவர் பக்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் நகரசபை தலைவர் குமரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட இணை செயலாளர் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன், மாவட்ட அவை தலைவர் முத்துலிங்கம், பேரவை பொருளாளர் ஆறுமுகம், நகர துணை செயலாளர் கந்தன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் சுரேஷ், தஷ்ணா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வினோத் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட குத்துச்சண்டை பயிற்சி மேடையை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, பயிற்சியாளர்கள் ஹரிபிரசாத், சிவராஜ் மற்றும் ஆர்.வி. செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் அருகே சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி மற்றும் போலீசார் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனையிட்டனர். அதில் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் கடத்திய கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை (வயது 50) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சாராயம் கடத்தியதாக புதுப்பாளையத்தை சேர்ந்த சரவணன் (48), பாஸ்கர் (42) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 65 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
திட்டக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் விடுதி மாணவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி:
திட்டக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திட்டக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கி, படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மதியம் விடுதி ஊழியர்கள் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டும் உணவு கொடுத்து விட்டு, மீதமுள்ள உணவை கால்நடைகளுக்கு கொட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் விடுபடாமல் உணவு வழங்கக்கோரி விடுதி முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அனைத்து மாணவர்களுக்கும் சரியான முறையில் உணவு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, விடுதியில் உள்ள தங்களது அறைகளுக்கு சென்றனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே செல்போனில் குழந்தைகளின் ஆபாச படம் பார்த்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழ்கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 30), எலக்ட்ரீசியன். இவர் தனது செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்த்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சென்னை சைபர் செல் போலீசார், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியராஜை கைது செய்தனர்.
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டத்தை 2-ஆக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கக்கோரி விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். வக்கீல் அம்பேத்கர் தலைமையில் பூமாலை குமாரசாமி, பட்டி முருகன், தங்க.தனவேல், சிவாஜிசிங், ஸ்டீபன், புஷ்பதேவன், சிவக்குமார், ரவி உள்பட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சாலையோரம் ஒருவரையொருவர் கைகளை கோர்த்தபடி நீண்டவரிசையில் நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) விருத்தாசலத்தில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்களும் ஆதரவு தரவேண்டும். எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கும் வரை நாங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறி எச்சரிக்கை விடுத்தனர்.