என் மலர்tooltip icon

    கடலூர்

    • பண்ருட்டியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் திடீர் மாரடைப்பால் இறந்தார்,
    • ஓபிஎஸ் ஆதரவாக பண்ருட்டி 4 முனை சந்திப்பில் குடும்பத்துடன் உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டவர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிக்கம்பட்டு ஊராட்சி புது பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 45), அ.தி.மு.க. மேலவை அமைப்புபிரதிநிதி.இவர் ஓ.பி.எஸ். ஆதரவாளர். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை ஓரம் கட்டுகிறார்கள் என நினைத்து இவர் கடந்த 2 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

    நேற்று காலைஅ.தி.மு.க. பொதுக்குழுகூட்டத்தை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இதற்கு முன்பு ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது ஓபிஎஸ் ஆதரவாக பண்ருட்டி 4 முனை சந்திப்பில் குடும்பத்துடன் உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடலூர் மாவட்டத்தில் 2 நாள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது.
    • தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி சார்பு ஆய்வாளர் ( தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை (25 -ந்தேதி) மற்றும் 26- ந்தேதி 2 நாட்கள் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 9278 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் . நாளை 25- ந் தேதி காலை பொது எழுத்துத் தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடைபெற உள்ளது . மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 08.30 மணிக்குள் இருக்க வேண்டும். 25.06.2022 ஆம் தேதி மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 03.30 மணிமுதல் 05.10 மணிவரை நடைபெற உள்ளது .

    மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 02.00 மணிக்குள் இருக்க வேண்டும் . 26.06.2022 ஆம் தேதி கடலூர் , மையத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள துறைரீதியான தேர்வில் 213 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 08.30 மணிக்குள் இருக்க வேண்டும் . இந்த நிலையில் தேர்வு எழுதும் மையங்களில் வரிசை எண் எழுதும் பணி, தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், மேஜைகள் வரிசைப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடலூர் அருகே பட்டாசு குடோன் வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    • விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்.புதூரில் தனது மாமனார் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி, வாண வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பட்டாசு குடோனில் வேலை பார்த்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி என்பவரின் மனைவி சித்ரா (வயது 37), வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா (,50), மூலக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (32) ஆகியோர் உடல்சிதறி பலியானார்கள்.

    மேலும் இந்த விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது  ஆஸ்பத்திரியில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி வனிதாவை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து உரிய நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
    • எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் பது குறித்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் அருகே எம்.புதூர் பட்டாசு ஆலைவெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், படுகாய மடைந்தவர்களுக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  

    எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் பது குறித்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிமம் பெற்று பட்டாசு ஆலை இயங்கியதா?, உரிமம் இன்றி இயங்கி யதா? என்பது குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • குறிஞ்சிபாடியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டார்.
    • முன்பு செந்தில்குமார் கடலூரில் வாடகை வீட்டில் குடியேறி, தனது குழந்தைகளை அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 65) இவரது மகன் செந்தில்குமார் (40) தந்தை-மகன் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தனர். செந்தில்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் .கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் கடலூரில் வாடகை வீட்டில் குடியேறி, தனது குழந்தைகளை அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார். இவர் கடலூர் அருகே குருவிநத்தம் கரும்பு தோட்டத்தில் செந்தில்குமார் மது பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். .

    இது குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்- இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து ஓடிய மோப்ப நாய், சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் வல்லுனர்கள் முக்கிய தடயங்களை கைப்பற்றினர். புதுவை போலீஸ் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

    இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய குமார், நந்தகுமார் ரமேஷ் தலைமையிலான தனிப்படை குறிஞ்சிப்பாடி, கம்மியம்பேட்டை, குருவிநத்தம், சோரியாங்குப்பம் பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் டவர்களை கொண்டு விசாரணையை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் முடுக்கி விட்டுள்ளார். முதல் கட்ட விசாரணையில் செந்தில் குமார் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் அந்த கள்ளக்காதலியுடன் பல லட்சம் ரூபாய் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது தெரியவந்தது. அதனால் கூலிப்படையை கொண்டு கள்ளக்காதலி செந்தில் குமாரை கொலைசெய்து இருக்கலாமா? என்ற கோணத்திலும், மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் சோரியாங்குப்பம், குருவிநத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் குமாரை விரட்டி சென்று கொலை செய்திருக்கக் கலாமா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது.
    • இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்.புதூரில் தனது மாமனார் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார்.

    இந்த குடோனில் நாட்டு வெடி, வாண வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பட்டாசு குடோனில் வேலை பார்த்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி என்பவரின் மனைவி சித்ரா (வயது 37), வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா (,50), மூலக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (32) ஆகியோர் உடல்சிதறி பலியானார்கள்.

    மேலும் இந்த விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    ஆஸ்பத்திரியில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி வனிதாவை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த ஜனவரி மாதத்தில் நெல் சாகுபடி செய்தனர்.
    • இந்த நெற்பயிர் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7 மணி முதல் திடீரென மழை பெய்தது.

    இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. கடலூர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில பரவலாக மழை பெய்தது.

    கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த ஜனவரி மாதத்தில் நெல் சாகுபடி செய்தனர். இந்த நெற்பயிர் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. ஒருசில இடங்களில் அறுவடை நடந்து வருகிறது. சில பகுதியில் நெற்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் தற்போது பெய்யும் மழையால் நெல்மணிகள் கீழே சாயும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்தமுறை வீசிய சூறாவளி காற்றால் கடலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழை சேதமானது. தொடர்ந்து விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

    எனவே, தமிழக அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கடலூரில் வாழைத்தார் விலை மிகவும் உயர்ந்து காணப்பட்டது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

    கடலூர்:

    கடலூர் அருகே ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை , சாத்தான்குப்பம், கீரப்பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளையம் உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக்கான ரூபாய்கள் பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப்பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறுவடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லாமல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


    இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 700 ரூபாய்க்கும், பூவன்பழம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் 500 ரூபாய்க்கும், ஏலக்கி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் 300 ரூபாய்க்கும், ரஸ்தாலி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விலை அனைத்தும் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் வாழைப்பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலையில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பண்ருட்டியில் அரசு பள்ளியில் ரகளை செய்த மாணவர்களால் பரபரப்பு நிலவியது.
    • மாணவர்கள் முன்பக்க வாசல் வழியாக வெளியே சென்று அங்கிருந்த வீடுகளில் புகுந்து அங்கும் ரகளையில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி: 

    பண்ருட்டி காந்தி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கே 500-க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு நேற்று மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எவ்வாறு உடை உடுத்த வேண்டும். எவ்வாறு முடிதிருத்தம் செய்து வர வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர் பூவராக மூர்த்தி அறிவுரை கூறிமாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார்.

    தலைமையாசிரியரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாண வர்கள் வகுப்பறையில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர். அருகில் இருந்த கழிவறை கதவு களை உடைத்தனர் . ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் முன்பக்க வாசல் வழியாக வெளியே சென்று அங்கிருந்த வீடுகளில் புகுந்து அங்கும் ரகளையில் ஈடுபட்டனர். 

    வீட்டுஉரிமையாளர்கள் கழி எடுத்து கொண்டு மாணவர்களை துரத்தினர் தப்பி ஓடியமாணவர்கள் பள்ளிக்குள் புகுந்தனர். வீட்டு உரிமையாளர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். தலைமை ஆசிரியர் இது சம்பந்தமாக பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றினர். மாணவர்களின் பெற்றோ ருக்கு தகவல் தெரிவித்து ள்ளனர் . இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.
    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.

    கடலூர் எம்.புதூரில் உள்ள சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    இந்நிலையில், கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • கடலூரில் தீபாவளி சீட்டு 310 பேரிடம் ரூ. 48 லட்சம் வசூல் பொது மக்கள் முற்றுகை- போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பணம் வசூல் செய்தது தொடர்பாக போலீசாரிடம் உரிய முறையில் புகார் அளித்தும் இதுநாள் வரை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை‌.

    கடலூர்:

    கடலூர் திடீர்குப்பம் சேர்ந்தவர் ராஜா. இவர் பொதுமக்களிடமிருந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்த நிலையில் ஒரு நபரிடம் 15,600 ரூபாய் என்ற கணக்கில் 310 பேரிடம் சுமார் 48 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. சில மாதத்திற்கு முன்பு ரா‌ஜாவுக்கு அதிக கடன் ஏற்பட்டதால், திடீரென்று தற்கொலை செய்தார். இதன் காரணமாக அவரிடம் பணம் கட்டிய அனைவரும் அதிர்ச்சி அடைந்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பணம் கட்டியவர்களிடம் பணம் வழங்குவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பணம் கொடுத்த நபர்கள் பணம் தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் கேட்டு வந்தனர். ஆனால் இதுநாள் வரை பணம் சரியான முறையில் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இறந்த ராஜா வீட்டிற்கு இன்று காலை நேரில் சென்றனர். பின்னர் தங்களுக்கு பணம் உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறி இறந்த ராஜா மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கூறுகையில், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்து உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து பணம் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்று போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பணம் வசூல் செய்தது தொடர்பாக போலீசாரிடம் உரிய முறையில் புகார் அளித்தும் இதுநாள் வரை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை‌. எங்கள் பணம் தொடர்பாக கேட்கிறோம் என தெரிவித்தனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வீட்டிலிருந்த இறந்த ராஜாவின் மனைவியை போலீசார் மீட்டு அவர்களது உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடலூர் அருகே இன்று பயங்கரம் பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து 3 பேர் பலியானர்.
    • தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே எம்.புதூரில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் குடோன் உள்ளது. இன்று காலைஊழியர்கள் பணியில் இருந்தனர். இங்கு இன்று மதியம் திடீர் என குடோனில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தம் 2 கி.மீ. தூரத்துக்கு கேட்டது. அதோடு அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது போல் வீடுகள் குலுங்கியது. அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சத்தம் வந்த திசை நோக்கி சென்றனர். அப்போது நாட்டு வெடிகள் வைத்திருந்த குடோன் இடிந்து தரைமட்டமாகி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில்காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.

    விசாரணையில் இந்த குடோனில் 7பேர் வேலை பார்க்க வந்தனர். 2 பேர் மதிய உணவுக்கான சென்று விட்டனர். மீதமுள்ள 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனே தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 3 பேர் பலியாகி இருந்தனர். மற்ற 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்த ஒருவரின் உடல் சிதறி கிடந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×