search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிஞ்சிபாடியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கள்ளக்காதல் தகராறில் கொலை
    X

    குறிஞ்சிபாடியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கள்ளக்காதல் தகராறில் கொலை

    • குறிஞ்சிபாடியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டார்.
    • முன்பு செந்தில்குமார் கடலூரில் வாடகை வீட்டில் குடியேறி, தனது குழந்தைகளை அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 65) இவரது மகன் செந்தில்குமார் (40) தந்தை-மகன் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தனர். செந்தில்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் .கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் கடலூரில் வாடகை வீட்டில் குடியேறி, தனது குழந்தைகளை அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார். இவர் கடலூர் அருகே குருவிநத்தம் கரும்பு தோட்டத்தில் செந்தில்குமார் மது பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். .

    இது குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்- இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து ஓடிய மோப்ப நாய், சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் வல்லுனர்கள் முக்கிய தடயங்களை கைப்பற்றினர். புதுவை போலீஸ் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய குமார், நந்தகுமார் ரமேஷ் தலைமையிலான தனிப்படை குறிஞ்சிப்பாடி, கம்மியம்பேட்டை, குருவிநத்தம், சோரியாங்குப்பம் பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் டவர்களை கொண்டு விசாரணையை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் முடுக்கி விட்டுள்ளார். முதல் கட்ட விசாரணையில் செந்தில் குமார் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் அந்த கள்ளக்காதலியுடன் பல லட்சம் ரூபாய் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது தெரியவந்தது. அதனால் கூலிப்படையை கொண்டு கள்ளக்காதலி செந்தில் குமாரை கொலைசெய்து இருக்கலாமா? என்ற கோணத்திலும், மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் சோரியாங்குப்பம், குருவிநத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் குமாரை விரட்டி சென்று கொலை செய்திருக்கக் கலாமா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×