என் மலர்tooltip icon

    கடலூர்

    1 மாதத்துக்கு பின்னர் வீராணம் ஏரிக்கு காவிரி தண்ணீர் வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த ஏரிக்கு பருவ காலங்களில் பெய்யும் மழை மற்றும் மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். வழக்கமாக மேட்டூர் அணை தண்ணீர் ஜூன் 12-ந் தேதிதான் திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு கடந்த மாதம் 24-ந் தேதியே திறந்துவிடப்பட்டது.

    மேட்டூர் அணை தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து அங்கிருந்து கொள்ளிடம் வழியாக அணைக்கரை வருகிறது. அங்கிருந்து கீழலணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும்.இந்த தண்ணீர் நேற்று மாலை வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது. இதனை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 41.70 அடியாக இருந்தது. ஏரிக்கு வடவாறு வழியாக 625 கனநீர் வந்தது. சென்னை மாநகர் குடிநீருக்காக 58 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இதேபோன்று நீர்வரத்து இருந்தால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
    • குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடலூர்:

    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மரியதாஸ் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் இளங்கோவன் அறிக்கை வாசித்தார். இதில் மாநில செயலாளர் மகாலிங்கம், புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    இதில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் வையாபுரி, இணைச் செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் கோதண்டராமர், கந்தசாமி, ராமதாஸ், சுந்தரராஜ லட்சுமி, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் '2022 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் சவரிமுத்து நன்றி உரை ஆற்றினார்

    • கடலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு ஐ.ஜி ராதிகா நேரில் ஆய்வு செய்தார்.
    • கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதினர்

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர் ( தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று (25- ந்தேதி) தொடங்கியது. இந்த தேர்வு நாளையும் (26 -ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதினர் . முன்னதாக காலையில் தேர்வு எழுதுவதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். பின்னர் கடும் சோதனைக்கு பிறகு தேர்வு எழுதும் மையத்திற்கு போலீசார் அனுமதித்தனர். இன்று காலை பொது எழுத்துத் தேர்வு காலை 10 மணி தொடங்கியதை யொட்டி போலீஸ் ஐ.ஜி ராதிகா தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தேர்வு மையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-  கடலூர் மாவட்டத்தில் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிக்கு தேர்வு எழுதும் 20 பேருக்கு ஒரு போலீசாரும், 5 போலீசாருக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் தேர்வு எழுதும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இத் தேர்வுக்காக 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இன்று மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 03.30 மணிமுதல் 05.10 மணிவரை நடைபெற உள்ளது . மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 2 மணிக்குள் இருக்க வேண்டும் . 26.06.2022 ஆம் தேதி கடலூர் , மையத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள துறைரீதியான தேர்வில் 213 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் . 

    • வீடு வீடாக மக்கும் குப்பையை பிரித்து வாங்கும் பணியை கடலூர் மாநகராட்சியில் மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்.
    • ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    கடலூர்: 

    கடலூர் மாநகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என் நகரம் என் பெருமை எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் குப்பை தரம் பிரித்து பொதுமக்கள் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி கடலூர் குண்டு உப்பலவாடி பத்மாவதி நகரில் வீடு வீடாக சென்று தரம் பிரித்து வைக்கப்பட்டு இருந்த மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை சேகரிக்கும் பணியை மேயர் தொடங்கி வைத்தார். முன்னதாக கடலூர் உழவர் சந்தையில் சுந்தரி ராஜா தலைமையில் துணைமேயர் தாமரைச்செல்வன், நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி முன்னிலையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாணவரணி பாலாஜி, வேளாண்மை துணை இயக்குனர் பூங்கோதை, உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் மகாதேவன், மண்டலத் தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சசிகலா ஜெயசீலன், அருள்பாபு, சுபாஷ்ணிராஜா, கவிதாரகு, பாலசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் ‌.

    • கடலூர் அருகே ரயில் மோதி பெண் இறந்தார்.
    • எதிர்பாராதவிதமாக ரயில் மோதி மூதாட்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் .

    கடலூர் :

    திருப்பதியில் இருந்து மன்னார்குடி நோக்கி எக்ஸ்பிரஸ் ெரயில் நெல்லிக்குப்பம் வழியாக நேற்று மாலை சென்று கொண்டிருந்தது . அப்போது கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே 50 வயது மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதி மூதாட்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் . இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மூதாட்டி உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் . இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
    • ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் கத்தியை எடுத்து காட்டி உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையம் கிராமத்தை ச்சேர்ந்தவர்சஞ்சீவி (வயது 53). இவர் அதே பகுதியில்பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த அர்ஜுணன் என்பவர் வந்தார். அவர் ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்தஅர்ஜுனன் வியாபாரியை சஞ்சீவியை அசிங்கமாக திட்டி கத்தியை எடுத்து காட்டிகொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி புதுப்பேட்டை போலீசில் சஞ்சீவிகொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சப்.இன்ஸ்பெக்ட ர்செல்வம்ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து கொலைமிரட்டல் விடுத்த அர்ஜுனனை தேடிவருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே முந்திரி பயறுடன் காரில் சென்ற வியாபாரியை வழிமறித்து மர்ம கும்பல் தாக்கினார்கள்.
    • தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீரசிங்கன்குப்பம் கிராமத்தைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினர் தவசி. இவருக்கும் அதே பகுதியைசேர்ந்தசங்கர், சரத்குமார் என்பவருக்கும் முந்திரி பணம் கொடுக்கல்-வாங்கலில் முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார், முத்துவேல்என்பவரிடம் 500 கிலோ முந்திரி பயறு எடைபோட்டு வாங்கிக் கொண்டு காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கர் வீட்டு முன்பு சென்று கொண்டிருந்த போது சங்கர், சரத்குமார், ஆனந்தகுமார்உள்ளிட்ட 6 பேர்காரை வழிமறித்து கிருஷ்ணகுமாரை உருட்டு கட்டையால் தாக்கினர். இதனை தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், முந்திரி பயிரையும், தவசி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீஸ்சப்இன்ஸ்பெக்டர் ராஜாராமன்இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து 6பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • இருவரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கீழிருப்புகிழக்குதெருவை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி பானுமதி (வயது 40). இவர்களது மகன் அஜித்குமார்  இவர் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் அனுசுயா என்பவரை ஒருமாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டில்இருந்தனர். நேற்றுமுன்தினம் பானுமதி வீட்டுவாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த அதேஊரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ரவி,பரத்,ஸ்ரீராம்ஆகியோர் பானுமதியை பார்த்து எங்க வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் கொ செய்யலாம் என்று கூறி உருட்டுகட்டையால் தாக்கினர்.

    இதில் பானுமதி, அவரது மகன் அஜித்குமார்ஆகியோர்காயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து காடாம்புலியூர் போலீஸில் புகார் செய்தனர்.காடாம்புலியூர்போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர்பூவராகவன் ஆகியோர்வழக்குப்பதிவு செய்து 5பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடலூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் இறந்த மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலலில் ஈடுபட்டனர்.
    • இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினர் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்.இவரது மகள் பிரவீனா (வயது 18). இவர் கடலூர் அருகே எஸ்.குமராபுரம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று காலை கல்லூரி மாணவி பிரவீனா விடுதியில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார் . தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கல்லூரி மாணவியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  நேற்று மாலை இறந்த மாணவியின் பெற்றோர்கள் , உறவினர்கள் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தடா.தட்சணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். .அப்போது அவர்கள் கூறுகையில் , கல்லூரி மாணவி இறந்ததில் மர்மம் உள்ளது . ஆகையால் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர் . அப்போது போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் . இதன் காரணமாக கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே பரபரப்பு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்கு விரைந்தனர். அப்போது மாணவியின் நிலையை கணடு கதறி துடித்தனர்.

    கடலூர்,ஜூன்.24-

    கடலூர் மாவட்டம் புவனகிரி வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் பிரவீணா, (வயது 18). இவர் கடலூர் அருகே எஸ்.குமாரபுரம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு தங்கி படித்து வந்தார். இன்று காலை கல்லூரி விடுதியில் மாணவி பிரவீணா தூக்கில் பிணமாக தொங்கினார். அதனை பார்த்த அங்கிருந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்கு விரைந்தனர். அப்போது மாணவியின் நிலையை கணடு கதறி துடித்தனர்.

    தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் இறந்த நிலையில் இருந்த மாணவிபிரவீணாவை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி பிரவீணா இறந்தது தொடர்பாக போலீசார் அங்குள்ள மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி இறந்த காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் அருகே கல்லூரி மாணவி விடுதியில் தூக்கில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் அருகே திருமணமாகி 3 வருடத்தில் தீயில் கருகி பெண் இறந்தார்.
    • அஸ்வினி தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே அழகியநத்தம் சேர்ந்தவர் திவ்யகுமார். அவரது மனைவி அஸ்வினி (வயது 22). இருவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணமாகி 7 மாதத்தில் அனுஸ்ரீ பெண் குழந்தை இருந்து வருகின்றது.  சம்பவத்தன்று அஸ்வினி வீட்டில் விளக்கு ஏற்றி சாமிக்கு பூ போட்டு கொண்டிருந்தபோது நைட்டியில் திடீரென்று தீப்பிடித்த காரணத்தினால் அஸ்வினி அலறி கதறி துடித்து உள்ளார்‌. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் தீயை அணைத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்‌. பின்னர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் அஸ்வினி தனது தந்தை வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அஸ்வினியை பரிசோதனை செய்த டாக்டர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்‌. இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 7 வருடத்திற்குள் அஸ்வினி இறந்ததால் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

    • பண்ருட்டி நாகாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 10 மணியளவில் சிம்ம லக்னத்தில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி செக்குமேட்டு தெருவில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு நாகாத்தம்மன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலையில் யாகசாலை பூஜை நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்றது.

    இன்று காலை இரண்டாம் கால பூஜை நாடி சந்தானம் தத்துவார்ச்சனை,மகா பூர்ணாஹூதி,யாத்ரா தானம் செய்யப்பட்டு9 45 மணிக்கு கடம் புறப்பட்டு திருக்கோவிலை வலம் வந்து 10 மணியளவில் சிம்ம லக்னத்தில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இன்று இரவு அம்மன் வீதிஉலா காட்சி நடைபெறவுள்ளது/ இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா கோவிந்தசாமி முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் ,நாகாத்தம்மன் ஆலய விழா குழுவினர், செக்குமேடு வீதி நகரவாசிகள் ஆலய குருக்கள் சேகர் சிவம் இதற்கான ஏற்பாடு களை சிறப்பாக செய்திருந்தனர்

    ×