search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1-ஆம் தேதி முதல்  3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும்- ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
    X

    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது.

    1-ஆம் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும்- ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

    • அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
    • குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடலூர்:

    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மரியதாஸ் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் இளங்கோவன் அறிக்கை வாசித்தார். இதில் மாநில செயலாளர் மகாலிங்கம், புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    இதில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் வையாபுரி, இணைச் செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் கோதண்டராமர், கந்தசாமி, ராமதாஸ், சுந்தரராஜ லட்சுமி, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் '2022 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் சவரிமுத்து நன்றி உரை ஆற்றினார்

    Next Story
    ×