என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே பரபரப்பு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி

- கடலூர் அருகே பரபரப்பு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்.
- தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்கு விரைந்தனர். அப்போது மாணவியின் நிலையை கணடு கதறி துடித்தனர்.
கடலூர்,ஜூன்.24-
கடலூர் மாவட்டம் புவனகிரி வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் பிரவீணா, (வயது 18). இவர் கடலூர் அருகே எஸ்.குமாரபுரம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு தங்கி படித்து வந்தார். இன்று காலை கல்லூரி விடுதியில் மாணவி பிரவீணா தூக்கில் பிணமாக தொங்கினார். அதனை பார்த்த அங்கிருந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்கு விரைந்தனர். அப்போது மாணவியின் நிலையை கணடு கதறி துடித்தனர்.
தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் இறந்த நிலையில் இருந்த மாணவிபிரவீணாவை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி பிரவீணா இறந்தது தொடர்பாக போலீசார் அங்குள்ள மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி இறந்த காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் அருகே கல்லூரி மாணவி விடுதியில் தூக்கில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.