என் மலர்
கடலூர்
- கடலூர் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
- அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் இணையதளத்தில் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் நெய்வேலி தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022 ஆம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.
இதற்காக இணையதளம் வாயிலாக கடந்த 24- ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் இணையதளத்தில் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இதே இணையதளத்தில் வெளியிடப்படும். தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 - உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் பொருட்டு கைக்கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய ஜூலை 20 ந்தேதி கடைசி நாளாகும்.
இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- பண்ருட்டியில் பொதுமக்களுடன் இணைந்து தீவிர சுகாதார பணியில் ஈடுபட வேண்டும் என நகராட்சி தலைவர் பேசினார்.
- தெருக்களை பெருக்கி, குப்பை சேகரித்ததோடு, சுவர்கள் மற்றும் தூண்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து சுத்தம் செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி நகராட்சியில் எனது குப்பை, எனது பொறுப்பு'என்கிற விழிப்புணர்வு பிரச்சாரம் 4-வது வார்டில் நடந்தது. இதில் பண்ருட்டி நகராட்சி தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
எல்லோரும் சுத்தத்தைப் பற்றி பேசலாம்; ஆனால் செயல் என்று வரும்போது,ஒவ்வொரு நகரிலும் வீட்டுக் குப்பையை தெருவில் எறிகிறவர்களாகதான் இருக்கிறோம் இதனால் நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாய் மாறிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதில் மாற்றத்தை விதைக்கின்ற விதத்தில் நகரங்களில் துாய்மைக்கான மக்கள் இயக்கத்தை தமிழக முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ் வாறு அவர் பேசினார்.
கமிஷனர் மகேஸ்வரி, அரசு பள்ளிபெற்றோர் ஆசிர்யர் கழக தலைவரும்,தொழில் அதிபருமான ஜாகீர் உசேன்,வார்டு கவுன்சிலர் சாந்தி செந்தில், அரிசி மண்டி அதிபர்ரகுஉள்ளிட்டோர்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தெருக்களை பெருக்கி, குப்பை சேகரித்ததோடு, சுவர்கள் மற்றும் தூண்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து சுத்தம் செய்தனர்.
தொடர்ச்சியாக, 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தில், பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டிய அவசியம் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தரப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்,
- ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கு கலை மன்றங்கள் தொடக்க விழா நடைபெற்றது.
- ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
கடலூர்:
ஜெயப்பிரியா வித்யா லயா சி.பி.எஸ்.சி மேனிலைப் பள்ளியின் நிர்வாக இயக்குநர் 'அறச்சுடர்' ஜெய்சங்கர் மற்றும் இயக்குநர்.தினேஷ் ஆகியோரின் வழிகாட்டு தலின் பேரில் மாண வர்களின் ஆற்றல் அறிந்து அவர்கள் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக மொழி இலக்கிய கலை மன்றம், பாரம்பரிய கலை மன்றம் , அறிவியல் விஞ்ஞான கலை மன்றம் மற்றும் கணித மன்றங்களின் துவக்க விழா நடைபெற்றது.
மாணவர்களிடத்தில் தலைமை பண்பை விதைக்கும் விதமாக பள்ளி மாணவத் தலைவர், இணை மாணவத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். விளையாட்டு சார் திறமைகளை ஊக்கு விக்கும் விதமாக மாணவ தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 4 அணிகள் உருவாக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டு தலைமை பொறுப்பேற்றனர். தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கப்படையும் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செல்வி. பைரவியின் பாரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்க ளுக்கு இசையோடு கூடிய கயிற்று துள்ளல் பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. வேதாத்திரி மகரிஷி அறிவுத்திருக்கோயில் அமைப்பினர் மாணவர்க ளுக்கு யோகக்கலை பயிற்சியை வழங்கினர். விழாவினைப் பள்ளி முதல்வ ஆர்த்தி கிருஷ்ணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். நிர்வாக மேலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாணவர்களின் தனித்தி றமை பயிற்சிகளின் ஒருங்கி ணைப்பாளர் சூர்யா கண்ணன் கலந்துகொண்டு மாணவர்களிடையே தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து மற்ற ஆசிரியர்களும் மன்றம் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினர். அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
- கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைந்துள்ளது.
- வாரந்தோறும் ஞாயிற் றுக்கிழமை அன்று அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சிகள் வாங்குவது வழக்கம்.
கடலூர்:
வங்க கடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும் என்பதால் விசைப்படகுகள் நடுக்கட லுக்கு செல்ல கூடாது என்று உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. அதன்படி மீன் பிடி தடைகாலம் ஜூன் 15-ந் தேதி முடிந்தவு டன் மறுநாளில் இருந்து கடலூரை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு களில் கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து விட்டு கடந்த 19-ந் தேதி கரை திரும்பினர். ஆனால், போதுமான மீன்கள் சிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் மீன் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாரந்தோறும் ஞாயிற் றுக்கிழமை அன்று அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சிகள் வாங்குவது வழக்கம். அதன்படி மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கடலூர் துறைமுகம் பகுதிக்கு சென்றனர். ஆனால், மீன்கள் வரத்து ஓரளவு இருந்தது. இருந்தாலும் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்தது. இன்று விற்பனை விலை கிேலாவில் வருமாறு:- வஞ்சரம் - ரூ.880, வவ்வால் - ரூ.600, பாறை - ரூ.350, கடல் விரால் - ரூ.600, வெள்ளை கிழங்கா - ரூ.400, நெத்திலி - ரூ.150, இறால் - ரூ.500, பண்ணி சாத்தான் - ரூ.400. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் ஆகும். 28-ந் தேதி அமாவாசை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் உள்ளதால் மீன்கள் விலை குறைந்துள்ளது என்றார்.
- கடலூரில் பரபரப்பு சாலையில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பி பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
- மின்கம்பி அறுந்து விழுந்த இடத்தில் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
கடலூர்:
கடலூர் நகரத்தின் மையப் பகுதியாக மஞ்சகுப்பம் நேதாஜி சாலை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களும் நடை பாதைசாரிகளும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் ஒரு தனியார் கடை உள்ளது. இக்கடையின் கட்டிடம் மீது உயரத்தில் விளம்பரப் பலகை இருந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் விபத்து ஏற்படும் அபாயம் கருதி உடனடியாக அகற்ற வேண்டும் என கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.
அதன் பேரில் இன்று காலை கட்டிடத்தின் மேலே இருந்த விளம்பர பலகையை கடை ஊழியர்கள் அகற்ற முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராமல் விளம்பரப்பலகை உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது. இதன் காரணமாக மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது பொதுமக்கள் இதனை பார்த்து அலறி அடித்து ஓடினார்கள். மேலும் மின்கம்பி அறுந்து விழுந்த இடத்தில் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தை மீது விழாமல் அருகாமையில் விழுந்ததால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
பின்னர் மின்சாரத்துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) கணேசன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- கிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மேல்சிகிச்சைக்காக 4 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் கிருஷ்ணா மருத்துவ மனைகளின் குழும இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீ கிருஷ்ணா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் பரங்கிப்பேட்டை ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சி துணை சுகாதார நிலையத்தில் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் முகாம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் ஹேமாவதி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், முதுநிலை மருந்தாளுநர்கள் கலந்துகொண்டு 126 நபர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் மேல்சிகிச்சைக்காக 4 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் துணை தலைவர் சுதா சுப்பிரமணியன், செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஞானஸ்கந்தன், கிராம சுகாதார செவிலியர் கிருபா லட்சுமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திட்டக்குடி தொகுதி வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
- மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் விருத்தாசலத்தில் இருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்படுவது வழக்கம்.
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் இருந்து 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் விருத்தாசலத்தில் இருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்படுவது வழக்கம் அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதியதாக தேர்தலில் பயன்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டு அதில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து வருகின்றது.
திட்டக்குடி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரம் 305, வாக்குப்பதிவு எந்திரம் 306 ,கட்டுப்பாட்டு கருவி 305 மொத்தம் 916 மின்னணு வாக்கு எந்திர பெட்டிகளை திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் , தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
- சேத்தியாத்தோப்பு அருகே மகள் வீட்டுக்கு வந்த தந்தை விபத்தில் பலியானார்.
- சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது
கடலூர்:
நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துலிங்கம். விவசாயி.இவரது மகள் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் உள்ளார். இவரது வீட்டுக்கு முத்துலிங்கம் வந்தார். அப்போது சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலிங்கம் இறந்தார். இது பற்றி சேத்தியாத்ேதாப்பு போலீசார் விசாரிக்கிறார்கள்.
- விருத்தாசலம் அருகே சத்துணவு பெண் ஊழியரை குத்திக்கொன்றது ஏன் என்று சரண் அடைந்த கணவன் பரபரப்பு தகவல் அளித்தார்.
- ராஜலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலுார்:
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், (வயது32), கொத்தனார். அவரது மனைவி ராஜலட்சுமி (வயது 25). ராஜலட்சுமி, கம்மாபுரம் அரசு தொடக்க பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்தார். எனவே கணவன்-மனைவி கம்மாபுரத்தில் உள்ள ராஜலட்சுமியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில், இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்றும் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை உருவானது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிப்போனது.
அத்திரமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி ராஜலட்சுமியின் கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். மனைவியை கொலை செய்த கத்தியோடு, அருகில் இருந்த கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் நாகராஜ் சரணடைந்தார். கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து, கணவர் நாகராஜிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடந்த விவரத்தை அவர் தெரிவித்தார்.
- விருத்தாசலம் அருகே பரபரப்பு: நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த பெண் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்
- முயலை குறி வைத்து சுடும் போது அந்த குண்டு சாந்தகுமாரியின் இடுப்பு பகுதியில் பாய்ந்தி ருப்பது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் காசிபிள்ளை. இவரது மனைவி சாந்த குமாரி (வயது 21).இவர்கள் வயல்வெளி யில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். நேற்று வெளியூர் சென்ற கணவன்- மனைவி இரு வரும் நள்ளிரவில் வீடு திரும்பினர்.அப்போது சாந்தகுமாரி, தனது வீட்டு வாசலில் அமர்ந்து காற்று வாங்கி கொண்டிருந்தார். அப்ேபாது திடீரென சாந்த குமாரி பலத்த சத்தத்துடன் கீழே சுருண்டு விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த காசிபிள்ளை வெளியே வந்தார். அப்போது தனது மனைவி ரத்த வெள்ளத்தில் வேதனையால் துடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந் தார்.உடனடியாக உற வினர்கள் உதவியுடன் சாந்தகுமாரியை விருத்தா சலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப்பட் டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.அப்போது சாந்தகுமாரி யின் இடுப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடக் கூடிய நாட்டு துப்பாக்கி குண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக அவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வலசை கிராமங்களில் இரவு நேரங்களில் பறவை மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத்துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் வருவதுண்டு. அவர்கள் முயலை குறி வைத்து சுடும் போது அந்த குண்டு சாந்தகுமாரியின் இடுப்பு பகுதியில் பாய்ந்தி ருப்பது தெரிய வந்தது.எனவே, துப்பாக்கியால் சுட்ட நபர் யார்? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆண்டிபட்டி-உசிலம்பட்டி ரெயில்பாதையில் ஒரு மர்மநபர் தண்டவாளத்தில் கல் வைத்துள்ளார்.
- உரிய நேரத்தில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதை ஊழியர் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆண்டிபட்டி:
மதுரை-தேனி அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து 11 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தேனி மாவட்டத்திற்கு ரெயில் சேவை தொடங்கியுள்ளது. இதனால் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த ரெயில் பயனுள்ளதாக உள்ளது. முதல்கட்டமாக மதுரை-தேனி இடையே சேவை தொடங்கப்பட்டுள்ளது. இப்பாதையை ஆய்வு செய்த ரெயில்வே அதிகாரிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து வருகின்றனர். போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததால் இப்பகுதியில் ரெயில் இயக்குவது சவாலாக உள்ளது என வேதனை தெரிவித்தனர்.
இதனால் ஊழியர்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ஆண்டிபட்டி-உசிலம்பட்டி ரெயில்பாதையில் ஒரு மர்மநபர் தண்டவாளத்தில் கல் வைத்துள்ளார். இதை பார்த்ததும் ரெயில்வே ஊழியர் அவரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார். உரிய நேரத்தில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதை ஊழியர் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
- பண்ருட்டியில் முந்திரி தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது.
- ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முந்திரிதொழிலுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள்குறித்தும்கேட்டறிந்தார்.
கடலூர்:
பாரதீய ஜனதா கட்சி தேசிய உறுப்பினர் கல்யாணராமன் முந்திரி தொழில் வளர்ச்சி குறித்து ஆராய பண்ருட்டி வந்தார்.
பண்ருட்டி, காட்டாண்டி க்குப்பம், கீழக்குப்பம் பகுதியிலுள்ள முந்திரி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு முந்திரி கொட்டை உடைக்கும்பணிகளை பார்வையிட்டார்.
பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்க்கு வருகை தந்த இவரை, பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்நிறுவனத்தின் அதிபர்கள் மாயகிருஷ்ணன், தமிழ்நாடுமுந்திரிஉற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கசெயலாளர் ராம கிருஷ்ணன், தேவநாதன், பாலகிருஷ்ணன், ரவி ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர்மலர்வாசகம், செயலாளர் ராமகிரு ஷ்ணன், பொருளாளர் செல்வமணி, ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முந்திரிதொழிலுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள்குறித்தும்கேட்டறிந்தார்.
இரண்டு நாள் பயணத்தின் மூலம் தான்அறிந்து கொண்டவிவரங்களை அறிக்கையாக தயார் செய்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினை களைத் தீர்க்க உதவ உதவுவதாக கல்யாணராமன் உறுதி யளித்தார்.






