என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Art Forums"

    • ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கு கலை மன்றங்கள் தொடக்க விழா நடைபெற்றது.
    • ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

    கடலூர்:

    ஜெயப்பிரியா வித்யா லயா சி.பி.எஸ்.சி மேனிலைப் பள்ளியின் நிர்வாக இயக்குநர் 'அறச்சுடர்' ஜெய்சங்கர் மற்றும் இயக்குநர்.தினேஷ் ஆகியோரின் வழிகாட்டு தலின் பேரில் மாண வர்களின் ஆற்றல் அறிந்து அவர்கள் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக மொழி இலக்கிய கலை மன்றம், பாரம்பரிய கலை மன்றம் , அறிவியல் விஞ்ஞான கலை மன்றம் மற்றும் கணித மன்றங்களின் துவக்க விழா நடைபெற்றது.

    மாணவர்களிடத்தில் தலைமை பண்பை விதைக்கும் விதமாக பள்ளி மாணவத் தலைவர், இணை மாணவத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். விளையாட்டு சார் திறமைகளை ஊக்கு விக்கும் விதமாக மாணவ தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 4 அணிகள் உருவாக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டு தலைமை பொறுப்பேற்றனர். தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கப்படையும் தொடங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து செல்வி. பைரவியின் பாரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்க ளுக்கு இசையோடு கூடிய கயிற்று துள்ளல் பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. வேதாத்திரி மகரிஷி அறிவுத்திருக்கோயில் அமைப்பினர் மாணவர்க ளுக்கு யோகக்கலை பயிற்சியை வழங்கினர். விழாவினைப் பள்ளி முதல்வ ஆர்த்தி கிருஷ்ணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். நிர்வாக மேலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாணவர்களின் தனித்தி றமை பயிற்சிகளின் ஒருங்கி ணைப்பாளர் சூர்யா கண்ணன் கலந்துகொண்டு மாணவர்களிடையே தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார்.

    அதனைத் தொடர்ந்து மற்ற ஆசிரியர்களும் மன்றம் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினர். அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

    ×