என் மலர்tooltip icon

    கடலூர்

    • பண்ருட்டியில் கொரோனாவில் தாயை இழந்து பெண்ணுக்கு ஊரார் திருமணம் நடத்தி வைத்தனர்.
    • தொழிலதிபர் பாக்கியராஜ் என்பவர் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்கள்வாங்க ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டுக் கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா, இவர்,கொரோனாவுக்கு தாயை இழந்தார். பின்னர் பாட்டி வளர்ப்பில்வளர்ந்து வந்த அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. வறுமை மற்றும்போதிய பணவசதி இல்லாததால் இவரது திருமணம் தள்ளிபோனது. அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆசிரியர் செந்தமிழ்செல்வன் ஊர்மக்கள் உதவியுடன் திருமணநடத்த ஏற்பாடு செய்தார்.

    அதே பகுதியை சேர்ந்த தொழிலதி பர்பாக்கியராஜ் என்பவர் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்கள்வாங்க ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். அருகில் இருந்தவர்களும் அவரவர் பங்குக்கு ஒவ்வொரு செலவை ஏற்றுக் கொண்டனர். நேற்று இவருக்கு உறவினர்களால் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் அதே பகுதி உள்ள அரசியம்மன்கோவிலில் பாக்கியராஜ், புகழேந்தி மற்றும்ஊரார்மு ன்னிலையில் திருமணம் நடந்தது

    • சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையர்கள் புகுந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம்அருகே ெஜயம்கொண்டம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக கலைச்செல்வன், விற்பனையாளராக மூர்த்தி, தண்டபாணி ஆகியோர் உள்ளனர்.

    கடை உடைப்புநேற்று இரவு கடையில் வியாபாரம் முடிந்ததும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கடையை பூட்டை உடைத்தனர். பின்னர் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்தனர்.அப்போது கடையில் கண்காணிப்பு காமிரா இருந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இன்று காலை டாஸ்மாக் கடை திறந்து கிடப்பது கண்டு அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து சூப்பர்வைசர் கலைச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கடைக்கு விரைந்தார். அங்கு மதுப்பாட்டில்கள் அப்படியே இருந்தது. எதுவும் கொள்ளைபோகவில்லை.

    இதுகுறித்து மருதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டு விட்டு வந்த பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 59 பேர் பண்ருட்டி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பண்ருட்டி, கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். அவரது மகள் கமலாவதி(வயது28). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்த விழா பேரங்கியூரில் நடைபெற்றது. இதில் மேலிருப்பு,பேரங்கியூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியையொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு உணவு பரிமாறப்பட்டது. இதை சாப்பிட்டு விட்டு உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டு விட்டு வந்த பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 59 பேர் பண்ருட்டி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பண்ருட்டி, கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தகவல் அறிந்த அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, நலம் விசாரித்தனர். நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ருட்டிஅருகே நிச்சயதார்த்த விழாவில் உணவு சாப்பிட்ட 59 பேருக்கு வாந்தி- மயக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தகவல் அறிந்த அதிகாரதிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, நலம் விசாரித்தனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅருகேஉள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். அவரது மகள் கமலாவதி(வயது28). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம்பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவாலிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்த விழா பேரங்கியூரில் நடைபெற்றது. இதில் மேலிருப்பு,பேரங்கியூர் மற்றும் சுற்று வட்டாரகிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை யொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு,அங்குஉணவு பரிமாறப்பட்டது. இதை சாப்பிட்டு விட்டு உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.இந்த நிலையில் நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டு விட்டு வந்த பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 59 பேர் பண்ருட்டி, முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டனர். பண்ருட்டி, கடலூரில்உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.தகவல் அறிந்த அதிகாரதிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, நலம் விசாரித்தனர். நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் 5 வீதியுலா உள்ளிட்டபல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கடலூர்:

    பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் உலக பிரசித்திப்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும் தேரோட்டத்து டன் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுக்களாக கொரோனா தொற்று காரணமாக ஆனிதிருமஞ்ச திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று (27-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள்வீதியுலா நடந்தது. அதன்பின்னர் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் நகரின் 4 வீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர், விநாயகர், சண்டி கேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு 4 மாட வீதிகளிலும் வலம்வரும். அப்போது பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பார்கள். அன்றிரவு தேர் நிலைக்கு வந்தவுடன்நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படுவார்கள் பின்னர் அன்று இரவுலட்சார்ச்சனை நடைபெறும். 6-ந் அதிகாலையில் நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் பல்வேறு அர்ச்சனைகள், திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் 5 வீதியுலா உள்ளிட்டபல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடனமாடியப்டியே வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனமாக காட்சியளித்து சித்சபைக்கு செல்வார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்து வருகிறார்கள்.

    • கடலூரில் ஊர்க்காவல் படை கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.
    • கடலோர காவல் குழமம் பணிக்கு 35 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊர்க்காவல் படைக்கு 24 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஊர்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் உடற்தேர்வு இன்று கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆட்கள் தேர்வு நடைபெறுவதை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கடலோர காவல் குழமம் பணிக்கு 35 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊர்க்காவல் படைக்கு 24 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடலோர காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை உடற்தேர்வு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், ஊர் காவல் படை துணை வட்டார துணைதளபதி கலாவதி, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், ஊர் காவல் படை சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் காவல் அதிகாரிகள், ஊர் காவல் படை அதிகாரிகள் உடற்தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 316 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல் தலைமை தாங்கினார். வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நீதிபதிகள் தாரணி, சக்திவேல், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகன்யாஶ்ரீ மற்றும் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டனர். வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார்.  மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்து வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு உள்ளிட்ட 316 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு ரூ 3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 121-க்கு தீர்வு காணப்பட்டது.

    • பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாயார் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ஓடிச்சென்று பார்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 62). இவர் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று கையைப்பிடித்து இழுத்து சென்று வீட்டினுள் தாழ்ப்பாள் போட்டு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாயார்மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ஓடிச்சென்று பார்த்தபோது ஜோதியின் வீட்டிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே வெளியே வந்ததாகவும் இதைப்பற்றி கேட்டபோது அசிங்கமாகதிட்டிவிட்டு ஜோதி அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோவில் வழக்கு பதிந்து முதியவர் ஜோதியை கைது செய்தனர். கைதான அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

    • திட்டக்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • தேர் கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் வலம் வந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே பாசார் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலய திருத்தேர் திருவிழாவில் நடந்தது. இதில் சுற்றுவட்டார 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் வலம் வந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 88.74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வினை105 அரசுப் பள்ளிகள், 11 அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 100 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 245 பள்ளிகளிலிருந்து 15,834 மாணவர்கள், 15,740 மாணவிகள் உள்பட மொத்தம் 31574 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 13,146 மாணவர்களும், 14,874 மாணவிகளும் ஆக மொத்தம் 28,020 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் மாணவர்களுக்கு 83.02 சதவீதமும், மாணவிகளுக்கு 94.50 சதவீதமும் மொத்தத்தில் 88.74 சததவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 82.84 சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.05 சதவீதமும், தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் கடந்த ஆண்டில் (மார்ச் 2020ல்) கடை நிலையிலிருந்து உயர்வு பெற்று இந்த ஆண்டில் 22-வது நிலையை அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    • தனியார் தொழிற்சாலைக்கு தீ வைப்பு 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • போலீசார் அப்போது சென்று தொழிற்சாலைக்குள் கொள்ளையர்களை விரட்டுவது அவர்களை கைது செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் சிப்காட் பகுதி-3 சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு ஆலை உள்ளது கடந்த சிலநாட்களாக இந்த தொழிற்சாலைக்குள் இருக்கும் பொருட்களை கொள்ளையர்கள் இரவு பகல் பாராமல் பல்வேறு இடங்கள் வழியாக உள்ளே புகுந்து கொள்ளை அடித்து வந்தனர். இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகம் அளிக்கும் புகாரின் பேரில் போலீசார் அப்போது சென்று தொழிற்சாலைக்குள் கொள்ளையர்களை விரட்டுவது அவர்களை கைது செய்வது மற்றும் பொருட்களை மீட்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் அதிகாலை கொள்ளையர்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து2 குடோன்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீவைப்பு சம்பவத்தால் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கம்பளிமேடு, அன்னதானம்பேட்டை, அகரம் காலனி, கோபாலபுரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், பி.முட்லூர், காயல்பட்டு, குறிஞ்சிப்பாடி உள்ள பகுதிகளைச் சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
    • 6-ந்தேதி சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    கடலூர்

    பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

    உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், நாளை மறுநாள் (புதன்கிழமை) தங்க சூரிய பிறை வாகனத்திலும், 30- ந்தேதி் வெள்ளி பூதவாகனத்திலும், அடுத்த மாதம் ஜூலை 1-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா (தெருவடைச்சான்) உற்சவம், 2-ந் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதியும், அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 6-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பிறகு பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், துணை செயலாளர் சேதுஅப்பா செல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகிறார்கள்.

    ×