என் மலர்
கடலூர்
- சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்ற மீன்வளத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் மீனவர்கள் தடுத்தனர்.
- கடலூர் அருகே தைக்கால் தோனித்துறை பகுதியில் விசைப்படகில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
கடலூர்:
சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என தமிழக அரசு தடை உத்தரவு அறிவித்து உள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் வழங்கப்படாது என கடும் எச்சரிக்கை விடுத்து வந்தார். மேலும் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீனவர்கள் ஏதேனும் மீன் பிடிக்கிறார்களா? என்பதனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர் சதுருதீன், சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர் மயில்வாகனன், காவலர் சாம்பசிவம் ஆகியோர் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கடலூர் அருகே தைக்கால் தோனித்துறை பகுதியில் விசைப்படகில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசைப்படகு மற்றும் வலையை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ராசா பேட்டை சேர்ந்த மீனவர்கள் அதிகாரிகளை அவதூறாக பேசியும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மீனவர் கிராமங்களில் சட்டவிரோத பிரச்சனை ஏற்படுத்த வழிவகுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தும் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதீன் கொடுத்த புகாரின் பேரில் ராசா பேட்டை சேர்ந்த கலைமணி, அய்யனார் உள்ளிட்ட 7 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூர் அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- கிருமி நாசினிக்கொண்டு தூய்மையாக பராமரிப்பு பணியினை தொடர்ந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர்:
புதுச்சேரி-கடலூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை கடலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நடைபெறும் ரூ. 26.8 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் நடைபெறுவகையும் குறிஞ்சிப்பாடி ெரயில்வே கேட் பஸ் நிலையம் அருகிலும், கடலூர் விருத்தாசலம் மேம்பாலம் பணி 24 கோடி மதிப்பீட்டில் 68.3 மீட்டர் நீளம் நடைபெறும் மேம்பால பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி ஆகியவற்றில் விடுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதியின் அறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார், மேலும் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி மாணவர்களுக்கு உணவு தயார் செய்து வழங்கவும், விடுதியில் தங்கும் அறைகள், சமையலறை மற்றும் கழிவறைகள் தொடர்ந்து தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை மருத்துவரிடம் கேட்டறிந்து , சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனை ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும், மருந்தகங்களில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளனவா என்பதனை கேட்டறிந்து, தொற்றாநோய் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்க்கொண்டு மருத்துவமனை வளாகங்களுக்குள் நோய் பரவா வண்ணம் கிருமி நாசினிக்கொண்டு தூய்மையாக பராமரிப்பு பணியினை தொடர்ந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) ரவி, வட்டார மருத்துவ அலுவலர் அகிலா மருத்துவமனை மருத்துவர் கனிமொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- செல்போன் தொடர்ந்து பார்த்து வந்ததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- பள்ளி மாணவி கோபத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார்.
கடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சி நகர் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் அரசு பள்ளியில்ம் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது மகள் சரியாக படிக்காமலும், வீட்டு வேலை செய்யாமலும், எப்போதும் ெசல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரது பெற்றோர்கள் கண்டித்தனர். இதன் காரணமாக பள்ளி மாணவி கோபத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இதனை பார்க்க பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளி மாணவியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பள்ளி மாணவிக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளுக்கு நாள் தொற்று அதிகரிப்பு கடலூர் மாவட்டத்தில் 5 நாளில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பரவலையொட்டி மாவட்ட நிர்வாகம் அதிரடிநடவடிக்கை எடுத்து வருகிறது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் சென்னை மாநாகராட்சி சார்பில் முககவசம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு உத்தர–விடப் பட்டுள்ளது. முக–கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படு கிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுபற்றி விழிப்புணர்வு ஏற்படுபத்தப்பட்டு வருகிறது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 1-ந் தேதி 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களோடு சேர்த்து 43 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வறுகிறார்கள். கடந்த 3-ந் தேதி 13 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.
எனவே கொரோனா பாதிப்பு 56 ஆக உயர்ந்தது. 4-ந் தேதி 15 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறி––யப் பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 11 என நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கியது. நேற்று மட்டும் (5-ந் தேதி) ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 85 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை–யொட்டி மாவட்ட நிர்வாகம் அதிரடிநடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த பகுதியில் கொரோனா பரவுகிறது என கணக்கெடுத்து வருகிறார்கள். அந்த இடங்களை கண்டறிந்து சுகாதார பணிகள் நடந்து வருகிறது. மேலும் முககவசம், சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
- ஆனிதிருமஞ்சன விழாவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏராளமாக பக்தர்கள் குவிந்தனர்.
- சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சிதம்பரம்:
பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ேதரோட்டம் நேற்று நடந்தது. அப்போது கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையை வந்தடைந்ததும் அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சாமிகள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனைக்கு பிறகு மஹா அபிஷேகம், சொர்ணா பிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா இன்று (புதன்கிழமை) நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது. 3 மணி முதல் 4 மணிக்குள் சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்துக்கு புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் 3 முறை முன்னுக்குப்பின்னும் சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆனி திருமஞ்சன தரிசன காட்சி அருள் பாலிப்பார்கள். அதனை தொடர்ந்து சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறுகிறது. நாளை (7-ந் தேதி) முத்துப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. ஆனி திருமஞ்சனத்தை யொட்டி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்தனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் சிவனடியார்கள் தேவாரமும், திருவாசகமும் பாடியபடி இருந்தனர். இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அய்யப்ப சேவா சங்கம், தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
- பயணிகள் கூட்டத்தில் புகுந்த பஸ்-2 பேர் காயம் அடைந்தனர்.
- பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது.
கடலூர்:
பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் நல்லிமுத்து (60) ,அஞ்சம்மாள் (62) ஆகிய இவர்கள் இருவரும் இன்று காலை மேல்பட்டாம்பாக்கம் செல்லமேல் கவரப்பட்டில் பஸ்சுக்காககாத்திருத்தனர். அப்போது பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது.இந்த பஸ், சாலை ஓரத்தில் பஸ்சுக்காக காத்திருந்த நல்லிமுத்து, அஞ்சம்மாள் ஆகியோர் மீது மோதியது. இதனால் இரு பெண்களும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
உடனடியாக அங்கிருந்த கிராம மக்கள் அவர்களை மீட்டுகடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்ஸை சிறை பிடித்தனர்.தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்பி. சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டுள்ளகிராமமக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினர்.சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.அதிகாரிகள் உறுதி அளித்ததால்போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- 4 முறை தற்கொலைக்கு முயன்றவர் மதுவில் விஷம் கலந்து குடித்து பலியானார்.
- அம்ரூஸ் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி நிலையில் இருந்தார்.
கடலூர்:
கடலூர் அருகே வடக்கு வழதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்ரூஸ் (வயது 51). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அம்ரூஸ் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி நிலையில் இருந்தவரை, அவர்களது உறவினர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம் ரூஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் ஏற்கனவே நான்கு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷம் குடித்து இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூரில் பரபரப்பு - ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டாரா? ேபாலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
- கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் அண்ணா பாலம் கீழே கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த கெடிலம் ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்திருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர்.
தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மிதந்திருந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 42) என தெரியவந்தது. இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜா என்பவரை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். பின்னர் ராஜா உயிர் இழந்தார். இந்த வழக்கை கடலூர் புதுநகர் போலீசார் கொலை வழக்காக மாற்றி இறந்த ராஜேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். ராஜேஷ் மர்மமான முறையில் கெடிலம் ஆற்றில் இறந்து கிடந்தார்.
இந்த நிலையில் ராஜேஷ் எப்படி இறந்தார்? யாரேனும் ராஜேஷை கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசினரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பண்ருட்டியில் தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு உறவினர்கள்- வி.சி.க.வினர் மறியல் செய்தனர்.
- மறியல் செய்தவர்களிடம் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேஉள்ள அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோத்பாபு ஜெயபால் . (வயது 33). தி.மு.க.பிரமுகர். இவர் நெய்வேலியில் உள்ள தனியார் ஐ.ஏ. எஸ். அகாடமியில் வேலை பார்த்த வந்தார்.
இவர் ஓய்வு எடுப்பதற்காக பண்ருட்டி திருவதிகை ஆயில் மில் பஸ் நிறுத்தம் செட்டிபட்டறையில் வாடகை வீட்டுக்கு வருவது உண்டு. இவருக்கு திருமணமாகி விட்டது.
இன்று காலை வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் வினோத்பாபு ஜெயபால் கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் வழக்கம் போல் பண்ருட்டி திருவதிகை வாடகை வீட்டில் தங்கினார். அப்போது நீண்டநேரம் ஆகியும் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது வினோத்பாபு ஜெயபால் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் உறவினர்கள், வி.சி.க. மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அப்போது வினோத்பாபுஜெயபால் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பண்ருட்டியில் சென்னை- கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன் (பண்ருட்டி) அசோகன் ( நெல்லிக்குப்பம்) நந்தகுமார் (புதுப்பேட்டை) ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்தனர்.
அப்போது மறியல் செய்தவர்களிடம் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
- இன்று மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது.
- நாளை (7-ந்தேதி) முத்துப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.
பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நிலையை வந்தடைந்ததும் அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சாமிகள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனைக்கு பிறகு மஹா அபிஷேகம், சொர்ணா பிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா இன்று (புதன்கிழமை) நடந்தது.
இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
இன்று மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது. 3 மணி முதல் 4 மணிக்குள் சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்துக்கு புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் 3 முறை முன்னுக்குப்பின்னும் சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆனி திருமஞ்சன தரிசன காட்சி அருள்பாலிப்பார்கள்.
அதனை தொடர்ந்து சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறுகிறது. நாளை (7-ந் தேதி) முத்துப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.
ஆனி திருமஞ்சனத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்தனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோவிலில் சிவனடியார்கள் தேவாரமும், திருவாசகமும் பாடியபடி இருந்தனர்.
இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
ஆங்காங்கே பக்தர்களுக்கு அய்யப்ப சேவா சங்கம், தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
- கடலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- என்றாலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் சென்னை மாநாகராட்சி சார்பில் முக கவசம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 1-ந் தேதி 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களோடு சேர்த்து 43 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வறுகிறார்கள். கடந்த 3-ந் தேதி 13 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.
எனவே கொரோனா பாதிப்பு 56 ஆக உயர்ந்தது. 4-ந் தேதி 15 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 11 என நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கியது. நேற்று மட்டும் (5-ந் தேதி) ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 85 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலையொட்டி மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த பகுதியில் கொரோனா பரவுகிறது என கணக்கெடுத்து வருகிறார்கள். அந்த இடங்களை கண்டறிந்து சுகாதார பணிகள் நடந்து வருகிறது. மேலும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
- விருத்தாசலம் அரசு செராமிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு எந்த விதமான அறிவிப்பு இன்றி சேர்க்கை நிறுத்தப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக அரசு செராமிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு எந்த விதமான அறிவிப்பு இன்றி சேர்க்கை நிறுத்தப்பட்டது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடனடியாக செராமிக் கல்லூரிக்கு சென்று கல்லூரி முதல்வர் திருமுருகனிடம் முதலாமாண்டு சேர்க்கை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது கல்லூரி முதல்வர் இந்த கல்லூரி முன்னர் வணிகவரித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டதாகவும், இந்தாண்டு முதல் உயர்கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் மாறிவிட்டதாக தெரிவித்தார், அதனால்தான் மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக சேர்க்கை தொடங்கப்படும் என தெரிவித்தார். இதனை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடனடியாக தொழில்துறை கூடுதல் இயக்குனரை தொடர்பு கொண்டு பேசினார்.அப்பொழுது சேர்க்கையை உடனடியாக தொடங்குவதாக எம்.எல்.ஏ விடம் உறுதி அளித்த கூடுதல் இயக்குனர், மாணவர்களுக்கு சேர்க்கை விண்ணப்பங்களை வழங்குமாறு கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விருத்தாசலம் செராமிக் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு சேர்க்கை தொடங்கியது.






