பண்ருட்டியில் தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு உறவினர்கள்- வி.சி.க.வினர் மறியல்

பண்ருட்டியில் தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு உறவினர்கள்- வி.சி.க.வினர் மறியல் செய்தனர். மறியல் செய்தவர்களிடம் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.
பண்ருட்டியில் தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு உறவினர்கள்- வி.சி.க.வினர் மறியல்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேஉள்ள அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோத்பாபு ஜெயபால் . (வயது 33). தி.மு.க.பிரமுகர். இவர் நெய்வேலியில் உள்ள தனியார் ஐ.ஏ. எஸ். அகாடமியில் வேலை பார்த்த வந்தார்.

இவர் ஓய்வு எடுப்பதற்காக பண்ருட்டி திருவதிகை ஆயில் மில் பஸ் நிறுத்தம் செட்டிபட்டறையில் வாடகை வீட்டுக்கு வருவது உண்டு. இவருக்கு திருமணமாகி விட்டது.

இன்று காலை வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் வினோத்பாபு ஜெயபால் கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் வழக்கம் போல் பண்ருட்டி திருவதிகை வாடகை வீட்டில் தங்கினார். அப்போது நீண்டநேரம் ஆகியும் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது வினோத்பாபு ஜெயபால் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் உறவினர்கள், வி.சி.க. மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அப்போது வினோத்பாபுஜெயபால் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பண்ருட்டியில் சென்னை- கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன் (பண்ருட்டி) அசோகன் ( நெல்லிக்குப்பம்) நந்தகுமார் (புதுப்பேட்டை) ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்தனர்.

அப்போது மறியல் செய்தவர்களிடம் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com