என் மலர்
கடலூர்
- சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பள்ளி வளாகத்திற்குள் மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? அவருக்கு வீடியோவை அனுப்பியது யார்? என்பது குறித்துபோலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலுார் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அவருடன் படிக்கும் 3 சக மாணவர்கள் கூட்டுபலாத்காரம் செய்தனர். அதை வீடியோ எடுத்து சிலருக்கு அனுப்பினர்.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் ஆவினங்குடி போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6-ந் தேதி பள்ளியில் இருந்த மாணவியிடம், 2 வாலிபர்கள் மாணவியின் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டினர். இதனால் அந்த மாணவிக்கும், அந்த வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள்அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீடியோ விவகாரம் தெரிந்ததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்களை கைது செய்தனர்.
எனினும் பள்ளி வளாகத்திற்குள் வந்து மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? அவருக்கு வீடியோவை அனுப்பியது யார்? என்பது குறித்துபோலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- விஷம் குடித்து பஞ்சாயத்து துணை தலைவர் தற்கொலைக்கு முயன்றார்.
- சஞ்சய் காந்தியிடம் ரூ. 2 லட்சம் பணத்துக்கு ரூ. 15 லட்சம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேகாக்கொல்லை ஊராட்சி வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்காந்தி (வயது 31). முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர்.இவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்தவர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கி வருகிறார். கடன் கொடுத்த நபர் நிலத்துக்கான பத்திரத்தை வேறு ஒருவருக்கு வழங்கி உள்ளார்.
அந்த நபர் சஞ்சய் காந்தியிடம் ரூ. 2 லட்சம் பணத்துக்கு ரூ. 15 லட்சம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த சஞ்சய்காந்தி வீட்டில் இருந்த போது திடீர் என விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானது. உடனே சஞ்சய்காந்தி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடலூர் அருகே மனைவியுடன் தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
- வாசுதேவன் தனது வயலில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.
கடலூர்:
கடலூர் அருகே பெத்த நாயக்கன் குப்பம் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வாசு தேவனுக்கும் வளர்மதிக்கும் தங்களது மகன் கல்லூரியில் சேர்ப்பது தொடர்பாக குடும்ப சண்டை நடந்து ள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த வாசுதேவன் தனது வயலில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.
இதனை தொடர்ந்து வாசுதேவனை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வாசுதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் மக்கள் பணியை மும்முரமாக செய்து வருகிறேன்.
- நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன்.
கடலூர்:
கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அய்யப்பன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி வேகமாக பரவியது. இதுகுறித்து அய்யப்பன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசு மற்றும் தி.மு.க.வில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் மக்கள் பணியை மும்முரமாக செய்து வருகிறேன். தற்போது சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. அது முழுக்க முழுக்க வதந்திதான். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் 4 பேரை போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
- அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் ஆவினங்குடி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக் குடி அருகே ஆவினங் குடி பகுதியை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி தேதி அவருடன் படிக்கும் மாணவன் ஒருவருக்கு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தன்னுடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது.
இதில் சம்பந்தப்பட்ட மாணவி கேக் வெட்ட சென்றிருந்த நிலையில் அவருடன் கேக் வெட்டிய மாணவன் இருப்பது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டு சக மாணவர்கள் 3 பேர் அந்த மாணவியை சமூக வலைதளத்தில் புகைப்படத்தை விட்டு விடுவதாகவும் அந்த மாணவியின் வீட்டில் கூறி விடுவதாக மிரட்டி–யுள்ளனர். அதற்கு பயந்த அந்த சிறுமியை கடந்த 1 -ந் தேதி 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதில் பயந்துபோன சிறுமி சம்ப–வத்தை யாரிடமும் தெரிவிக் கா–மல் இருந்துள் ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் சகமாண வர் களுக்கும் தெரியவந்து–ள்ளது. இதில் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவத்தை அவருடைய தாயிடம் தெரி வித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் ஆவினங்குடி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ், திட்டக் குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பள்ளிக்குச்சென்று இச்சம் பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தீவிர விசாரணை செய்து அவர்கள் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது மாணவி குறித்து புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக 3 மாணவர் களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் மாணவியுடன் புகைப்படத்தில் இருந்த சிறுவனையும் போலீசார் அழைத்து வந்தனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ் நேரில் விசாரணை செய்து 4 பேரையும்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அவரது தாயுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆவினங்குடி பஸ் நிலையம், பட்டூர் நிறுத்தம் ஆகிய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் சென்னை மாநாகராட்சி சார்பில் முககவசம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு உத்தர–விடப் பட்டுள்ளது. முக–கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.
அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுபற்றி விழிப்புணர்வு ஏற்படுபத்தப்பட்டு வருகிறது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 1-ந் தேதி 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்தபடி உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் சுகாதார பணியினை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள உத்தரவில் பொது இடங்களில் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் ஆட்டு சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- பருவமழை போதிய அளவு இல்லாததாலும் விவசாயத்தில் வருமானம் இன்றி ஆடு வளர்ப்பது அதிகப்படியான தொழிலாக செய்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது.
வேப்பூரை சுற்றியுள்ள மங்களூர், பெரியநெசலூர், காட்டுமையிலூர், கழுதூர், சிறுப்பாக்கம், கொத்தனூர், தியாகதுருகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
தற்பபோது பருவமழை போதிய அளவு இல்லாததாலும் விவசாயத்தில் வருமானம் இன்றி ஆடு வளர்ப்பது அதிகப்படியான தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனை செய்ய வேப்பூர் வார ஆட்டு சந்தைக்கு எடுத்து வருவது வழக்கம். வருகிற ஞாயிற்றுக்கிழமை (10-ந் தேதி) அன்று பக்ரீத் பண்டிகையை என்பதால் இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க சென்னை, மதுரை, திருச்சி தேனி, நாகை, கோவை , விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும், பக்ரீத் பண்டிகை நேரடியாக முஸ்லிம் சகோதரர்களும் ஆட்டுச் சந்தையில் ஆடு வாங்க பெருமளவில் வந்து குவிந்தனர்.
மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தற்போது கொடி ஆடு, கருப்பாடு, வெள்ளாடு, ஜமுனா பூரி, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளாடு, உள்ளிட்ட 10 விதமான ஆட்டு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆட்டு சந்தையின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் சுமார் 4000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு ஆட்டின் விலை சுமார் 5 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 4 மணி முதல் 7 மணி வரை 4 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
வழக்கத்தைவிட கூடு தல் விலைக்கு ஆடுகள் விற்பனை ஆவதாக ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.வளர்ந்த கிடா ஆடுகள் அதிகப்படியான விற்பனைக்கு வந்தது. இதன் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பன செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
நெய்வேலி அருகே காட்டு கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 27) இவர் நேற்று இரவு நெய்வேலி புதுநகர் 2-வது வட்டம் நேரு சிலை வழியாக என்எல்சி ஆர்ச் கேட்டுக்கு தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது இவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் நெய்வேலி அரசுகுழி பகுதியைச் சேர்ந்த செந்தமிழர் மகன் பிரசாந்த் (19) வந்தார். இருவரும் எதிர்பாராத நேரத்தில் வேகமாக மோதிக்கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சச்சிதானந்தம் பிரசாந்த் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சச்சிதானந்தத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதை பார்த்த அக்கமுக்கு உள்ளவர்கள் அவர்களை மீட்டு என்எல்சி பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சச்சிதானந்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுல் ஹமீர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திட்டக்குடி அருகே சாலை ஓர பள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்தது.
- 12 மற்றும் 10 -ம் வகுப்பு பயிலும் 22 மாணவ, மாணவிகளை தினந்தோறும் ஏற்றி செல்வது வழக்கம்.
கடலூர்:
திட்டக்குடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தில் கலந்து விபத்து அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் மாணவ மாணவிகள் உயிர் தப்பினர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஐவனூர் ,ஆலம்பாடி சாலையில் கழுதூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி பஸ் நெடுங்குளம், சிறுமுளை, பெருமுளை, புலிவலம், ஐயவனூர், ஆலம்பாடி, ஆவட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 12 மற்றும் 10 -ம் வகுப்பு பயிலும் 22 மாணவ, மாணவிகளை தினந்தோறும் ஏற்றி செல்வது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் பெருமுளை கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு பஸ் ஓட்டி வந்தார். கனகம்பாடி கிராமம் அருகே பஸ் அதிவேகமாக சென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதனால் மாணவ- மாணவிகள் அலறினர். சத்தம் கேட்டு பொது மக்கள் ஓடிவந்தனர். விபத்தில் சிக்கிய மாணவ மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தல் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர் . தகவலறிந்து வந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் .இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம் உருக்கமான கடிதம் கிடைத்தது.
- ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது வினோத்பாபு ஜெயபால் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோத்பாபு ஜெயபால் (வயது 33). தி.மு.க.பிரமுகர். இவர் நெய்வேலியில் உள்ள தனியார் ஐ.ஏ. எஸ். அகாடமியில் வேலை பார்த்த வந்தார். நேற்று காலை தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்த வினோத்பாபு ஜெயபால் கூறி விட்டு சென்றார். வேலை முடிந்த பின்னர் பண்ருட்டி திருவதிகை வாடகை வீட்டில் தங்கினார். அப்போது நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்காமல் இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது வினோத்பாபு ஜெயபால் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் உறவினர்கள், வி.சி.க. மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டு சென்னை- கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. அப்போது மறியல் செய்தவர்களிடம் போலீசார் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து நேற்று மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். வினோத்பாபு ஜெயபால் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் தனக்கு பணிசுமை அதிகமாக உள்ளதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் வினோத்பாபு ஜெயபால் தற்கொலைக்கு காரணமான அதிகாரியை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி உறவினர்கள் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வினோத்பாபு ஜெயபால் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அகாடமியின் மேலாளர் குழந்தைவேல் என்பவர் வினோத்பாபு ஜெயபால் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மண்எண்ணை கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பான சூழல் நிலவியது.
- கௌசல்யாவை அதே ஊரை சேர்ந்த ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கினர்
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை கணவன், மனைவி மனு கொடுக்க நேரில் வந்தனர். அப்போது மனுவுடன் மண்எண்ணை பாட்டிலும் கொண்டு வந்தனர். இதனை பார்வையிட்ட போலீசார் அந்த தம்பதியரிடம் இருந்தமண்எண்ணை பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அரசு குடி காலனி சேர்ந்தவர் கருப்பன். இவரது மனைவி கொடியம்மாள் என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று கருப்பன், இவரது மருமகள் கௌசல்யாவை அதே ஊரை சேர்ந்த ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கினர். இது சம்பந்தமாக சிறுபாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சிறுபாக்கம் போலீசார் நாங்கள் கொடுத்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். அப்போது இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.






