search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்:   4 பேரை போக்சோவில்  கைது செய்ய உத்தரவு
    X

    மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: 4 பேரை போக்சோவில் கைது செய்ய உத்தரவு

    • மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் 4 பேரை போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
    • அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் ஆவினங்குடி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக் குடி அருகே ஆவினங் குடி பகுதியை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி தேதி அவருடன் படிக்கும் மாணவன் ஒருவருக்கு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தன்னுடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது.

    இதில் சம்பந்தப்பட்ட மாணவி கேக் வெட்ட சென்றிருந்த நிலையில் அவருடன் கேக் வெட்டிய மாணவன் இருப்பது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டு சக மாணவர்கள் 3 பேர் அந்த மாணவியை சமூக வலைதளத்தில் புகைப்படத்தை விட்டு விடுவதாகவும் அந்த மாணவியின் வீட்டில் கூறி விடுவதாக மிரட்டி–யுள்ளனர். அதற்கு பயந்த அந்த சிறுமியை கடந்த 1 -ந் தேதி 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதில் பயந்துபோன சிறுமி சம்ப–வத்தை யாரிடமும் தெரிவிக் கா–மல் இருந்துள் ளார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் சகமாண வர் களுக்கும் தெரியவந்து–ள்ளது. இதில் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவத்தை அவருடைய தாயிடம் தெரி வித்துள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் ஆவினங்குடி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ், திட்டக் குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பள்ளிக்குச்சென்று இச்சம் பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தீவிர விசாரணை செய்து அவர்கள் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது மாணவி குறித்து புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.

    உடனடியாக 3 மாணவர் களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் மாணவியுடன் புகைப்படத்தில் இருந்த சிறுவனையும் போலீசார் அழைத்து வந்தனர்.

    இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ் நேரில் விசாரணை செய்து 4 பேரையும்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அவரது தாயுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆவினங்குடி பஸ் நிலையம், பட்டூர் நிறுத்தம் ஆகிய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×