என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.
கடலூர் அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
- கடலூர் அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- கிருமி நாசினிக்கொண்டு தூய்மையாக பராமரிப்பு பணியினை தொடர்ந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர்:
புதுச்சேரி-கடலூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை கடலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நடைபெறும் ரூ. 26.8 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் நடைபெறுவகையும் குறிஞ்சிப்பாடி ெரயில்வே கேட் பஸ் நிலையம் அருகிலும், கடலூர் விருத்தாசலம் மேம்பாலம் பணி 24 கோடி மதிப்பீட்டில் 68.3 மீட்டர் நீளம் நடைபெறும் மேம்பால பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி ஆகியவற்றில் விடுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதியின் அறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார், மேலும் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி மாணவர்களுக்கு உணவு தயார் செய்து வழங்கவும், விடுதியில் தங்கும் அறைகள், சமையலறை மற்றும் கழிவறைகள் தொடர்ந்து தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை மருத்துவரிடம் கேட்டறிந்து , சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனை ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும், மருந்தகங்களில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளனவா என்பதனை கேட்டறிந்து, தொற்றாநோய் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்க்கொண்டு மருத்துவமனை வளாகங்களுக்குள் நோய் பரவா வண்ணம் கிருமி நாசினிக்கொண்டு தூய்மையாக பராமரிப்பு பணியினை தொடர்ந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) ரவி, வட்டார மருத்துவ அலுவலர் அகிலா மருத்துவமனை மருத்துவர் கனிமொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






