என் மலர்
கடலூர்
- தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
- கொத்தானராக பணிபுரிந்து வருவதாக தெரியவந்தது.
கடலூர்:
விருத்தாசலம் மணிமுக்தா ஆற்று பால த்தின் கீழ் அடை யாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாலத்தின் மைய பகுதியி லுள்ள தூண் அருகே கிடைத்த உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் பெயர் சக்திவேல் என்பதும் அவர் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், கொத்தானராக பணிபுரிந்து வருவதாக தெரியவந்தது. மேலும் சக்திவேல் எப்படி இறந்தார்? என்பது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோகனாவுக்கு நாளை (8-ந் தேதி) திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம்பெண் மோகனா கடந்த 5-ந் தேதி திடீரென மாயமானார்.
- பெற்றோர் மோகனாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் சின்ன காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாபு. அவரது மகள் மோகனா (வயது 19). இவருக்கு நாளை (8-ந் தேதி) திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம்பெண் மோகனா கடந்த 5-ந் தேதி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மோகனாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மோகனா கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாபுவின் மனைவி மின்னல்கொடி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவில் திருவாமூரை சேர்ந்த ஜெயக்குமார் (26) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், மோகனாவை கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மோகனா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகி றார்கள்.
- சிலர் இது சம்பந்தமாக தட்டிகேட்ட போது இது தரப்பினருக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கடும் மோதலாக மாறியது.
- மோதலில் ஊர் பொதுமக்கள் மற்றும் காலனியை சேர்ந்த 8 பேர் காயம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு காலனி அருகே அய்யனார் கோவில் உள்ளது. நேற்று சஞ்சீவிராயன் கோவில் பகுதி சேர்ந்த ஊர் பொதுமக்கள் கோவிலில் ஊரணி பொங்கல் விழாவை முடித்துவிட்டு ஊர்வலமாக தங்களது ஊருக்கு நடுவீரப்பட்டு காலனி வழியாக சென்றபோது ஒரு குறிப்பிட்ட ஜாதி பாடலை ஒலி பெருக்கிக் கொண்டு ஒரு சில வாலிபர்கள் ஆடிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்த சிலர் இது சம்பந்தமாக தட்டிகேட்ட போது இது தரப்பினருக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கடும் மோதலாக மாறியது. இதன் காரணமாக இரு தரப்பினரும் மாறி மாறி கல் வீசி தாக்கிக் கொண்டனர். இதனை கண்டித்துஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மோதலில் ஊர் பொதுமக்கள் மற்றும் காலனியை சேர்ந்த 8 பேர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நடுவீரப்பட்டு காலனி தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் சஞ்சீவிராயன் கோவில் சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று போலீசார் சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் இருந்த 8 நபரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த பாமக மாவட்ட தலைவர் தட்சிணா மூர்த்தி தலைமையில் பொதுமக்கள், பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். அப்போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பி ரண்டு சபியுல்லா பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்கள் கூறுகை யில், இந்த மோதல் சம்பவத்தில் இருதரப்பி னரும் பாதிக்கப்பட்டு ள்ளனர். ஆனால் போலீ சார் ஒரு தரப்புக்கு வழக்கு பதிவு செய்து சம்பந்தமில்லாத நபர்களை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் சென்றது ஏற்புடையதல்ல. நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்.
மேலும் தற்போது பிடித்து வைத்துள்ள நபர்களை விடுவிக்க வேண்டும் என கூறினர். இதனை தொடர்ந்து போலீசார் நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது பிடித்து வரப்பட்ட நபர்களை உரிய விசாரணை செய்து அவர்கள் மீது குற்றம் இல்லாத பட்சத்தில் விடுவி க்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அதி காலையில் பிடித்து சென்ற வெளி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேரை போலீ சார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அதிகாலையில் மீண்டும் 4 பேர்களை போலீசார் பிடித்து விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் சஞ்சீவிராயன் கோவில் தரப்பு சேர்ந்தவர்கள் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருவதோடு, ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் பகுதி முழுவதும் பதற்றமாக காணப்பட்டு வருகின்றது.
- நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்களை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
- மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
கடலூர்:
கடலூர் திடீர்குப்பம் எம்.ஜி.ஆர் நகர் சேர்ந்தவர் சூர்யா (வயது 29). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஸ்வீட் கடையில் செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் சூர்யா தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் திடீரென்று சூர்யா கழுத்தில் இருந்த வெள்ளி செயின் மற்றும் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்தனர். அப்போது சூர்யா மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற 3 பேரில் ஒருவரை ஆடை பிடித்து இழுத்த போது 3 பேரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் மூன்று வாலிபர்களையும் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 வாலிபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி யதில் கடலூர் தேவனா ம்பட்டினம் சேர்ந்தவர் கோகுல் (வயது 19), ஆகாஷ் (வயது 21), மணிகண்டன் (வயது 19) என தெரியவந்தது. மேலும் இந்த வாலிபர்கள் வேறு எங்கேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? அல்லது வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளதா? என்பதை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
- பண்ருட்டி பகுதியில் கைவரிசை காட்டிய பிரபல மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- நன்னி குப்பம் வழியாக சென்றபோது பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தகவல் கொடுத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே நன்னிகுப்பம் கிராமத்தில் புதிய மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் பண்ருட்டி அருகே மாளிகை மேடு எஸ்.கே.பாளையத்தைசேர்ந்த சுந்தர வேல்(வயது21) மோட்டார்சைக்கிள்திருடன் என்று தெரியவந்தது. இவன் பண்ருட்டி உள்ளிட்ட பலஇடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது இவனை தொடர்ந்து விசாரித்த போது கடந்த மாதம் 4-ந் தேதி சேந்தநாடு அருகே நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டுஅதனை ரெட்டிபாளையம் கிரா மத்தில் மாணிக்கம் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தினான்.
பின்னர் மாணிக்கத்திற்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் வாகனத்தை திருடிக் கொண்டு நன்னி குப்பம் வழியாக சென்றபோது பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தகவல்கொடுத்தனர். அதன் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார்வழக்குப்பதிவு செய்து அவனிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றி சுந்தரவேலை கைது செய்தனர்.
- பண்ருட்டி பிரதான சாலையில் போதை ஆசாமி வீசிய துண்டு பீடியால் வீடு தீப்பிடித்து எரிந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டியில் பிரதான சாலையான ராஜாஜி சாலையில் பாழடைந்த ஓட்டு வீடு ஒன்று போதை ஆசாமி ஒருவன் புகைத்து விட்டு வீசிய துண்டு பீடியால் தீப்பிடித்து எரிந்தது. தீமளமளவென எரிந்து அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்பரமேஸ்வர பத்மநாபன்,சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், தலைமை காவலர் சுப்பிரமணி, மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்று அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர்.
இது பற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புநிலைய அலு வலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீமேலும் பரவாமல் அணைத்தனர்.போலீசாரின்உடனடிநடவடிக்கையால்அந்த பகுதியில்பெரும்தீவிபத்துதடுக்கப்பட்டது. சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.
- அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்துவரும் 10-ம் வகுப்பு மாணவருடன் பிளஸ்-1 மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- நாளடைவில் அவர்கள் காதல் வயப்பட்டுள்ளனர். அப்போது அடிக்கடி தனிமையில் சந்தித்ததால் மாணவி கர்ப்பமானார்
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியில் குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் உள்ள கழிவறை அருகே தொப்புள் கொடியுடன் ஆண் சிசு இறந்து கிடந்தது. இதனை பார்த்த பள்ளி மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் பள்ளிக்கு விரைந்தனர். இறந்து கிடந்த சிசுவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசு பள்ளியில் படித்து வரும் 11-ம் வகுப்பு மாணவி கழிப்பறையில் பிரசவித்துள்ளார். குறைமாதமாக இருந்ததால் அந்த சிசு இறந்தநிலையில் காணப்பட்டது. அந்த சிசுவை மாணவி முட்புதரில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது.
அந்த மாணவியிடம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்துவரும் 10-ம் வகுப்பு மாணவருடன் இந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்கள் காதல் வயப்பட்டுள்ளனர். அப்போது அடிக்கடி தனிமையில் சந்தித்ததால் மாணவி கர்ப்பமானார். நாளடைவில் மாணவியின் வயிற்றில் சிசு வளரத் தொடங்கியது.
சம்பவத்தன்று மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அந்த மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அங்கு அவருக்கு குறை மாதத்துடன் குழந்தை இறந்தே பிறந்தது தெரியவந்தது. அந்த சிசுவை மாணவி முட்புதரில் வீசி சென்றுள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்தது.
இதுபற்றி அறிந்த தனிப்படை போலீசார் 10-ம் வகுப்பு மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நடந்த சம்பவம் குறித்து மாணவன் போலீசாரிடம் தெரிவித்தார். இதனை போலீசார் ரகசியமாக பதிவு செய்துள்ளனர். மாணவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மரபணு பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த பின்னர் மாணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது.
- ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (25), கூலி தொழிலாளி. இவருக்கும், 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து பாலு, அவரது தந்தை பாக்கியநாதன், தாய் மஞ்சுளா, உறவினர்கள் சங்கர், கோதை ஆகியோர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று சுபாசின் மனைவி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
- தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். சம்பவத்தன்று சுபாசின் மனைவி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையி லான போலீசார் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
- தடை செய்யப்பட்ட 9 கேரளா லாட்டரி டிக்கெட்டுகள், 300 ரூபாய் ரொக்கம் வைத்திருந்தனர்.
கடலூர்:
திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையி லான போலீசார் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கோழியூர் மேலத் தெருவை சேர்ந்த சவுந்த ர்ராஜன் (62) என்பவரிடம் தடை செய்யப்பட்ட 9 கேரளா லாட்டரி டிக்கெட்டுகள், 300 ரூபாய் ரொக்கம் வைத்திருந்ததை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதே போல திட்டக்குடி பெரிய கோவில் தெருவைச் சேர்ந்த லதா (48) என்பவரிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதோடு லதாவை கைது செய்தனர்.
- வேனின் வெளிப்புற அளவிற்கும் உட்புற அளவிற்கும் வித்தியாசம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், வேனை வேப்பூர் போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு சென்றனர்.
- போதை மற்றும் புகையிலை பொருள் மூட்டைகளை வைத்து இரும்பு தகரத்தால் மூடி கடத்தி வந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் வழியாக அரசு தடை செய்த போதைப் பொருள்கள் கடத்தல் நடப்பதாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்படி தனிப்படை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், வேப்பூர் சேலம் சாலையில் விளம்பாவூர் சிப்காட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த பொலிரோ மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், வீடு கட்டுமானப் பணிக்கு தேவையான பொருட்கள் இருந்தது. ஆனால், வேனின் வெளிப்புற அளவிற்கும் உட்புற அளவிற்கும் வித்தியாசம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், வேனை வேப்பூர் போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்
போலீசாரின் சோதனை யில் தப்பிக்க வேனின் பக்க வாட்டில் அறைகள் அமைத்து அதில் போதை மற்றும் புகையிலை பொருள் மூட்டைகளை வைத்து இரும்பு தகரத்தால் மூடி கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், திட்டக்குடி அருகே அருகேரி கிராம த்தில் மளிகைகடை வைத்தி ருக்கும் மகேந்திரன், (வயது35,) அதே கிராமத்தை சேர்ந்த தெய்வமணி (வயது 25), பொலிரோ வேன் டிரைவரான ஆரோக்கிய சாமி (வயது 33), ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். விவசாயி.
- ன்னல் தாக்கிய தில் 2 ஆடுகளும் உயிரிழ ந்தது. வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். விவசாயி. இவர் நேற்று மதியம் பார்வதிபுரம் பாய்பான்குட்டைஏரிக்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த சமயம் மின்னல் தாக்கியதில் ராசாங்கம்படு காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குபரி சோதித்த டாக்டர் ஏற்கனவே ராசாங்கம் உயிரி ழந்ததாக கூறியுள்ளார். மேலும்மின்னல் தாக்கிய தில் 2 ஆடுகளும் உயிரிழந்தது. வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






