என் மலர்
கடலூர்
- ஜோதி நேற்று அந்த பகுதியில் ஓடும் மலட்டாற்றில் தனது மாட்டினை குளிப்பாட்ட சென்றார்.
- வெள்ளத்தில் மூதாட்டி ஜோதி அடித்து செல்லப்பட்டார்.
கடலூர்:
கடலூர் அருகே நல்லாத்தூர் மணவெளியை சேர்ந்தவர் ஜோதி (வயது 60). இவர் நேற்று அந்த பகுதியில் ஓடும் மலட்டாற்றில் தனது மாட்டினை குளிப்பாட்ட சென்றார். அப்போது ஆற்றில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் மூதாட்டி ஜோதி அடித்து செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ஆற்று வெள்ளம் அவரை அடித்து சென்றது.
இதுகுறித்து தூக்கனாம்பாக்கம் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் விைரந்து வந்து மூதாட்டியை தேடினர். ஆனால் இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இன்று காலையும் தேடும் பணி நடந்தது. அப்போது மூதாட்டி ஜோதி சேற்றுக்குள் புதைந்து பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பன்னீர்செல்வம் இன்ஜினியரிங் படித்துள்ளார், சந்தியா டிப்ளமோ அக்ரி படித்து முடித்துள்ளார்.
- கணவர், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டு உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் பன்னீர்செல்வம். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகள் சந்தியாவிற்கும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. பன்னீர்செல்வம் இன்ஜினியரிங் படித்துள்ளார், சந்தியா டிப்ளமோ அக்ரி படித்து முடித்துள்ளார்.
நேற்று காலை தனது கணவனான பன்னீர்செல்வம் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சந்தியா குளித்துவிட்டு வருவதாக அவரது அறைக்குள் சென்றார். கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் சந்தியா வெளியே வராததை கண்ட அவரது கணவர் கதவைத்தட்டி உள்ளார். ஆனால் திறக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில்,விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தியாவின் கணவர் பன்னீர் செல்வத்தை காவல்துறையினர் ,கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆன ஒரே வாரத்தில் பெண் மரணம் அடைந்ததால் விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
- தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர்:
மத்திய வங்கக்கடலில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த மழை கடலூர் நகரம், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் நீடித்தது. விடிய விடிய பெய்த மழை இன்று காலையும் தொடர்ந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் அவதிபட்டனர்.
தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
- ஹரி கிருஷ்ணன் திருமணத்துக்கு பிறகு ஷோபனா தேவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
- ஹரிகிருஷ்ணன் ஷோபனா தேவியை, தாக்கி மானபங்கம் படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடலூர்:
கடலூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் சோபனா தேவி (வயது 30). இவருக்கும் சீர்காழி தாலுக்கா செம்மங்குடி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது 35). இவர்களுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருவந்திபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ஹரி கிருஷ்ணன் திருமணத்துக்கு பிறகு ஷோபனா தேவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. மேலும் ஷோபனா தேவி, தனது கணவரான ஹரி கிருஷ்ணனை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அழைத்து உள்ளார். ஆனால் அதனை ஹரி கிருஷ்ணன் மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் ஷோபனா தேவியை, தாக்கி மான பங்கம் படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஹரி கிருஷ்ணன் திருநங்கையாக இருந்து வரும் நிலையில் என்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக சோபனா தேவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் கணவர் ஹரி கிருஷ்ணன், அவரது தாயார் புஷ்பா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் திருநங்கையாக இருந்து வந்த நபர் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த பல ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா இடமாக வழங்கினர்.
- மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா இடமாக வழங்கினர். இதனை தொடர்ந்து மீதமுள்ள இடத்தை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த இடத்தை அரசுக்கு விற்பனை செய்த உரிமையாளருக்கு வழங்காமல் 18 குடும்பத்தினர் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நில உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வீடுகளை அகற்றி உரிமையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை 18 வீடுகளை இடிப்பதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் தாசில்தார் பூபாலச்சந்திரன், ஆதி திராவிட துறை தாசில்தார் ஸ்ரீதரன், மண்டல துணை தாசில்தார் அசோகன் வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர் அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்து விடுகிறோம் என உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஏற்கனவே 18 குடும்பங்களில் 5 குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு பட்டாவுடன் இடம் இருந்து வந்ததால் மீதமுள்ள 13 குடும்பங்களுக்கு சம்பவ இடத்திலேயே பட்டா வழங்குவதற்கு வருவாய் துறை ஏற்பாடு செய்து உடனடியாக பட்டாவும் வழங்கினர். இதனை தொடர்ந்து வீடுகளை இடிக்க சென்ற போது ஒரு வாரம் கால அவகாசம் வழங்கினால் பொருட்களை ஏற்றிக் கொண்டு இடத்தை காலி செய்து விடுகிறோம் என மீண்டும் பொதுமக்கள் அதிகாரியிடம் உறுதியளித்தனர். அதன் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி அங்கிருந்து சென்றனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இதன் காரணமாக அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- கடந்த சிலநாட்களாக காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- கதவை திறந்து பார்த்த போது காந்திமதி பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி காந்திமதி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர். கடந்த சிலநாட்களாக காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் அவர் இருந்தார். நேற்று இரவு வீட்டில் குழந்ைதகள் கண்அயர்ந்து தூங்கினர். அப்போது காந்திமதி திடீர் வீட்டினை உள்புறமாக பூட்டினார். பின்னர் கயிறால் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
காலையில் எழுந்து பார்த்த குழந்தைகள் காந்திமதி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். கதவை திறந்து பார்த்த போது காந்திமதி பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து காந்திமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை ெமயின்ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ். (வயது 48). இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் துரைராஜை கைது செய்து அவர் எங்கிருந்து குட்கா வாங்கி வந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை ெமயின்ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ். (வயது 48). இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார்கள். இவரது கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுச்சத்திரம் போலீசார் விரைந்து சென்று அவரது கடையை சோதனைசெய்தனர்.அப்போது கடையின் பின்புறம் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் துரைராஜை கைது செய்து அவர் எங்கிருந்து குட்கா வாங்கி வந்தார். இதற்கு உடந்தையாக இருப்பது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மர்மமான முறையில் கோழிகள் கொட்டப்படுகின்றன.
- அப்பகுதி ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே ஆவினங்குடி அருகாமையில் உள்ள வெள்ளாற்றில் குவியலாக இறந்து கிடைக்கும் பிராய்லர் கோழிகள். இந்த பிராய்லர் கோழிகளை மர்ம நபர்கள் வெள்ளாற்றில் கொட்டி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திற்கு செல்லும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் முகத்தில் துணியை வைத்து மூடிக்கொண்டு துர்நாற்றம் தாங்காமல் சென்று வருகின்றனர். ஒரே சமயத்தில் ஏராளமான கோழிகள் இறந்தது எப்படி அல்லது கோழிகள் நோய் தொற்று ஏற்பட்டு இறந்ததா அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய் காரணமாக என சந்தேகங்கள் எழுந்து உள்ளன.
இதனால் அப்பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்கள் கோழிகள் இழுத்துச் சென்று போடுவதால் தற்போது சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மர்மமான முறையில் கோழிகளை ஆற்றில் கொட்டி சென்றவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து கிடக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதி ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
- புதுவையில் இருந்து கடலூருக்கு கடத்திய 3000 சாராயம் பாக்கெட்டுகள். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் சந்தேகம் அடைந்து அந்த காரை பின் தொடர்ந்து அதிரடியாக சோதனை செய்தனர்.
கடலூர்:
கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எழிலரசிக்கு புதுவை மாநிலத்தில் இருந்து மூட்ட மூட்டையாக சாராயம் பாக்கெட்டுகள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் அருகே பெரிய காரைக்காடு பகுதியில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எழிலரசி தலைமையில் போலீ சார்ரகசியமாக பகுதிமுழுவதும் கண்காணித்திருந்தனர். அப்போது அவ்வழியாக இரண்டு கார் சென்று ஒரு இடத்தில் நின்றது. அப்போது போலீசார் சந்தேகம் அடைந்து அந்த காரை பின் தொடர்ந்து அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது 2 காரிலும் மூட்டையாக சாராய பாக்கெட்டுகள் இருந்தன. இதனை தொடர்ந்து காரில் இருந்த 2 பேர் நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர்2 கார்களிலும் சோதனை செய்த போது சாராய பாக்கெட் 10 மூட்டைகளில் 3000 சாராய பாக்கெட்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இரண்டு கார் மற்றும் 10 மூட்டைகளில் இருந்த சாராயப் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- நிறுவன ஊழியர்கள் கடந்த 3-ந் தேதி குமார் வீட்டிற்கு நேரில் வந்து பணம் கேட்டு அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரிய கண்ணாடி சேர்ந்தவர் குமார் (வயது 47).கூலி தொழிலாளி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் 8 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி 5 மாதம் 2400 ரூபாய் வீதம் தவணை முறையில் செல்போன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் குமார் ஒரு மாதம் தவணை மட்டும் கட்டியுள்ளார். மீதமுள்ள தவணைப்பணம் கட்டாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த 3-ந் தேதி குமார் வீட்டிற்கு நேரில் வந்து பணம் கேட்டு அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 5-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரது வீட்டில் குமார் இறப்பதற்கு முன்பு என் சாவுக்கு தனியார் நிதி நிறுவனம் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்ததாக இறந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து குமார் உடலை குறிஞ்சிப்பாடி போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் லோன் வாங்கி பணம் கட்டாத பெண்ணை மிரட்டியதால் பெண் தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் தனியார் நிறுவன நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தவணைப்பணம் கட்டாத கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிதம்பரத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
கடலூர்:
சிதம்பரம் நகர போலீசார் தில்லை காளி அம்மன் கோவில் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் சிதம்பரம் வேங்கான் தெருவை சேர்ந்த சின்னதுரை (56) என்பவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 10 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






