என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடலூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி உடல் மீட்பு
  X

  கடலூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி உடல் மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜோதி நேற்று அந்த பகுதியில் ஓடும் மலட்டாற்றில் தனது மாட்டினை குளிப்பாட்ட சென்றார்.
  • வெள்ளத்தில் மூதாட்டி ஜோதி அடித்து செல்லப்பட்டார்.

  கடலூர்:

  கடலூர் அருகே நல்லாத்தூர் மணவெளியை சேர்ந்தவர் ஜோதி (வயது 60). இவர் நேற்று அந்த பகுதியில் ஓடும் மலட்டாற்றில் தனது மாட்டினை குளிப்பாட்ட சென்றார். அப்போது ஆற்றில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் மூதாட்டி ஜோதி அடித்து செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ஆற்று வெள்ளம் அவரை அடித்து சென்றது.


  இதுகுறித்து தூக்கனாம்பாக்கம் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் விைரந்து வந்து மூதாட்டியை தேடினர். ஆனால் இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இன்று காலையும் தேடும் பணி நடந்தது. அப்போது மூதாட்டி ஜோதி சேற்றுக்குள் புதைந்து பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×