என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடலூர் அருகே பரபரப்பு ஆக்கிரமிக்கப்பட்ட  18 வீடுகளை இடிக்க சென்ற அதிகாரிகள்
  X

  ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

  கடலூர் அருகே பரபரப்பு ஆக்கிரமிக்கப்பட்ட 18 வீடுகளை இடிக்க சென்ற அதிகாரிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த பல ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா இடமாக வழங்கினர்.
  • மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

  கடலூர்:

  கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா இடமாக வழங்கினர். இதனை தொடர்ந்து மீதமுள்ள இடத்தை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது‌. இந்த நிலையில் அந்த இடத்தை அரசுக்கு விற்பனை செய்த உரிமையாளருக்கு வழங்காமல் 18 குடும்பத்தினர் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

  இந்த நிலையில் இது தொடர்பாக நில உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வீடுகளை அகற்றி உரிமையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை 18 வீடுகளை இடிப்பதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் தாசில்தார் பூபாலச்சந்திரன், ஆதி திராவிட துறை தாசில்தார் ஸ்ரீதரன், மண்டல துணை தாசில்தார் அசோகன் வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர் அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்து விடுகிறோம் என உறுதி அளித்தனர்.

  இதனை தொடர்ந்து ஏற்கனவே 18 குடும்பங்களில் 5 குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு பட்டாவுடன் இடம் இருந்து வந்ததால் மீதமுள்ள 13 குடும்பங்களுக்கு சம்பவ இடத்திலேயே பட்டா வழங்குவதற்கு வருவாய் துறை ஏற்பாடு செய்து உடனடியாக பட்டாவும் வழங்கினர். இதனை தொடர்ந்து வீடுகளை இடிக்க சென்ற போது ஒரு வாரம் கால அவகாசம் வழங்கினால் பொருட்களை ஏற்றிக் கொண்டு இடத்தை காலி செய்து விடுகிறோம் என மீண்டும் பொதுமக்கள் அதிகாரியிடம் உறுதியளித்தனர். அதன் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி அங்கிருந்து சென்றனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இதன் காரணமாக அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

  Next Story
  ×