search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடியில்  லாட்டரி  டிக்கெட் விற்ற 2 பேர் கைது
    X

    திட்டக்குடியில் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் கைது

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையி லான போலீசார் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
    • தடை செய்யப்பட்ட 9 கேரளா லாட்டரி டிக்கெட்டுகள், 300 ரூபாய் ரொக்கம் வைத்திருந்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையி லான போலீசார் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கோழியூர் மேலத் தெருவை சேர்ந்த சவுந்த ர்ராஜன் (62) என்பவரிடம் தடை செய்யப்பட்ட 9 கேரளா லாட்டரி டிக்கெட்டுகள், 300 ரூபாய் ரொக்கம் வைத்திருந்ததை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதே போல திட்டக்குடி பெரிய கோவில் தெருவைச் சேர்ந்த லதா (48) என்பவரிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதோடு லதாவை கைது செய்தனர்.

    Next Story
    ×