என் மலர்
கடலூர்
- யூரியாவிற்கு கைரேகை மற்றும் ஆதார் அட்டை மூலம் விற்பனை முனையத்தின் படி ரசீது வழங்குவதில்லை.
- அவர்களது வயிற்றில் பால் பார்க்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
கடலூர்:
புவனகிரி பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் உரம், யூரியா அரசு நிர்ணயத்தை விலையை விட ரூபாய் 50 முதல் 80 வரை கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு எந்த ஒரு கைரேகை பதிவு செய்து கொடுக்கப்படவில்லை. ஒரு சில கடைகளில் மீறி கேட்டால் உங்களுக்கு உரம், யூரியா போன்ற பொருள்கள் உங்களுக்கு கிடையாது என்று கூறுகின்றனர். விவசாயிகள் தனியார் கடைகளில் வாங்கும் உரம் யூரியாவிற்கு கைரேகை மற்றும் ஆதார் அட்டை மூலம் விற்பனை முனையத்தின்படி ரசீது வழங்குவதில்லை. இதனைப் போக்க மாவட்ட ஆட்சியர்,வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து அதிக விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களது லைசன்ஸை ரத்து செய்து விவசாயிகளுக்கு இதனை வெளிப்படுத்தி அவர்களது வயிற்றில் பால் பார்க்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஒவ்வொரு கடைகளிலும் டி.ஏபி.உரம் , யூரியா, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகியவர்களின் இருப்பு பட்டியல் மற்றும் விலைப்பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி விலைப் பலகையில் எழுதி வெளியில் வைக்க வேண்டும். அதில் முறைகேடுகள் நடந்தால் யாருக்கு புகார் அளிக்க வேண்டும் என்று அந்த தொலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிட வேண்டும். இந்த முறைகேட்டை போக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து உரங்களையும் வரவைத்து விவசாயிகளிடம் ஆதார் அட்டை மற்றும் அடங்களை வாங்கிக் கொண்டு ரொக்க விலைக்கும் விற்பனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கு பலனாகவும் நாட்டில் முதுகெலும்பான விவசாயத்தை முற்றிலும் பாதுகாக்க நேரிடும். இதனை தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்து அனைத்து கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு கொடுத்தால்அரசுக்கு நற்பெயர் உண்டாகும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
- பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், பண்ருட்டி டிஎஸ்பிசபியுல்லா உத்தரவுபடி பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்(பொறுப்பு), மற்றும் போலீசா ர்ப ண்ருட்டிபகுதியில்தீவிர ரோந்துபணியில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பண்ருட்டி கந்தன் பாளையம், காமாட்சிஅம்மன் கோவில் தெருபெருமாள்-55 என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவரிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.
- சிறுமி கடந்த 12 -ந்தேதி தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றார்.
- சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 12 -ந்தேதி தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சிடைந்த பெற்றோர்கள் சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது வாலிபர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கலைவாணன் என்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து தொலைபேசி மூலம் தேடி வருகின்றனர்.
- வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண் வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
- ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு பரிசோதிக்கப்பட்ட போது அந்த பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வசிஷ்டபுரம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள காட்டுபகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இயற்கை உபாதைக்காக ெசன்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண் வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதே போல மறுநாளும் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு பரிசோதிக்கப்பட்ட போது அந்த பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதனால் அந்த பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி விசாரித்த போது நடந்த விவரத்தை தெரிவித்தார். இதுகுறித்து திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசில் அந்த பெண் தனக்கு மாலைக்கண்நோய் இருப்பதால் தன்னை பலாத்காரம் செய்த வாலிபர் பற்றி தனக்கு தெரியாது என்று போலீசில் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- அதிக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
- மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வடமலை. இவரது மனைவி அங்காளம்மாள் (வயது 21). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது. குழந்தைஇல்லாததால் அங்காளம்மாள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும், மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டதால் அதிக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும்கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் மன ம்உடைந்த அங்காளம்மாள் முந்திரி தோப்பில்தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அங்காளம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் மலர் கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திட்டக்குடி அருகே வெளி மாவட்டத்திற்கு கடத்த இருந்த 8 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- டி.எஸ்.பி., காவியாவுக்கு இரவு 9 மணி அளவில் ரகசிய தகவல் கிடைத்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்காவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகே பரமசிவம் என்பவர் வீட்டு வராண்டாவில் வெளி மாவட்டத்திற்கு கடத்த இருந்த 8 டன் ரேசன் அரிசி 100 கிலோ எடையுள்ள மூட்டைகள் 42, 50 கிலோ எடையுள்ள மூட்டைகள் 55 என தனித்தனியாக அடிக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திட்டக்குடி டி.எஸ்.பி., காவியாவுக்கு இரவு 9 மணி அளவில் ரகசிய தகவல் கிடைத்து. இது குறித்து அவர் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் அங்கு வீட்டு வராண்டாவில் அடிக்கடி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர் . வீட்டின் உரிமை யாளர் பரமசிவம் தலைம றைவானதால் இது குறித்து வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை உணவு பாதுகாப்பு துறை வழங்கல் துறையிடம் ஒப்படைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேரு யுவகேந்திரா சார்பில் கடலூர் தனியார் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை கண்டித்தும், இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கடலூர் புதுப்பாளையம் நேரு யுகேந்திரா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர்
அதன்படி ஒருங்கிணைப்பாளர் திருமார்பன் தலைமையிலும் தலைவர் குழந்தைவேலனார் முன்னிலையிலும் தி.க பொதுச்செயலாளர் துரை சந்திரசேகர், மாவட்ட செயலாளர் சிவகுமார், திமுக மாநகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்பினர் திரண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அங்கு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, உடனடியாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காரணத்தினால் போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று மனு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடலூரில் நடைபெற உள்ள பேச்சு போட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- விதவை பெண்ணின் கண வருக்கு ஒறையூர்கிராமத்தில் சொந்தமானகாலி மனை உள்ளது.
- விதவைப் பெண்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஓறையூர்கிராமத்தை சேர்ந்த 47 வயது விதவை பெண் 2 குழந்தைகளுடன் வசித்தார். அவரது கணவர் இல்லாததால் தாய் வீடான மாளிகைமேடு ஏரிப்பா ளையத்திற்கு சென்று விட்டார். விதவை பெண்ணின் கண வருக்கு ஒறையூர்கிராமத்தில் சொந்தமானகாலி மனை உள்ளது.
இந்த மனையை விற்பனை செய்வதற்காக கணவரின் இறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ஓறையூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலத்தை அணுகி உள்ளார். அவரிடம் கிராம நிர்வாக அலுவலர் பாலியல் சீணடலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து விதவைப் பெண்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எம்.ஜி.ஆர் சிலை உடைப்பு குறித்து கிளை அ.தி.மு.க. செயலாளர் ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
- பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டதால் ஆவினன்குடி போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே எம். ஜி.ஆர்., சிலை உள்ளது.
நேற்று இரவு எம்.ஜி.ஆர். சிலையின் இடது கையை மர்மநபர்கள் உடைத்து உள்ளனர். இதனை இன்று பார்த்த அ.தி.மு.க.வினர் அதிரச்சி அடைந்தனர்.
இதுபற்றி கிளை அ.தி.மு.க. செயலாளர் ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் அப்பகுதியில் அதிமுகவினர் தொடர்ந்து குவிந்தவாறு உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டதால் ஆவினன்குடி போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ உடைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை பார்வையிட்டு இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.
- கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகோபால். விவசாயி.
- 8 மாடுகள் இந்த தீ விபத்தில் இறந்தது. 2 மாடுகள் கருகிய நிலையில் தப்பி ஓடிவிட்டது.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகோபால். விவசாயி. இவர் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். சுமார் 10 க்கும் மேற்பட்ட கறவைமாடுகளை வைத்துள்ளார்.
இந்த மாடுகளை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் பராமரித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் மாடுகளை கொட்டகையில் அடைத்த ஜெயகோபால் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றார். இரவு நேரத்தில் கொட்டகையில் திடீரென தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் கொட்டகை பற்றி எரிய தொடங்கியது.
இதனால் அங்கு அடைக்கப்பட்டிருந்த மாடுகள் அனைத்தும் உரக்க கத்தின. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இந்த தகவல் அறிந்த ஜெயகோபாலும் வீட்டுக்கு விரைந்தார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ஆனாலும் 8 மாடுகள் இந்த தீ விபத்தில் இறந்தது. 2 மாடுகள் கருகிய நிலையில் தப்பி ஓடிவிட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலி மருத்துவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- மருத்துவர் பரிந்துரை இன்றி ஊசி, மரு ந்துகளை பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.
கடலூர்:
மருத்துவம் படிக்காமல் மருந்த கங்களில் மருத்துவம் பார்க்கும் போலி மருத்து வர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. உத்தரவி ட்டிருந்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் காவ ல்துறை அதிகாரிகளும் மருத்துவ அதிகா ரிகளும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அதன்பேரில் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்.பால முருகன், இன்ஸ்பெக்டர் (பொ றுப்பு) ராமச்ச ந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் ஆகியோர் இணைந்து திட்டக்குடி பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் 2 மெடிக்கல்களில் மருத்துவர் பரிந்துரை இன்றி ஊசி, மரு ந்துகளை பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து டாக்டர். பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் மெடிக்கல் உரிமையாளர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் இது குறித்து அரசு டாக்டர் கூறுகையில் கருகலைப்பு சிகிச்சை, மருத்துவர் பரிந்துரையின்றி ஊசி போடுதல் போன்ற புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
- பஸ்சின் பின்பக்கம் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணிக்கின்றனர்.
- கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து ஆவட்டி, மங்களூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ் வழக்கம் போல் திட்டக்குடி பஸ் நிலையத்திலிருந்து சென்றது. பெருமுளை சாலையில் சென்ற போது பஸ்சின் பின்பக்கம் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்து உணராமல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயணிக்கின்றனர்.
கல்லூரிக்காக ஏற்கனவே பஸ் ஒன்று இயக்குப்பட்டிருந்தது. தற்போது முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள் இது போன்ற பின்பக்கம் படிக்கட்டில் ஆபத்து உணராமல் தொங்கியவாறு பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்கனவே கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை முறையாக இயக்கினால் இதுபோல மாணவர்கள் பயணம் செய்ய நேரிடாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.






