திட்டக்குடி அருகே இளம்பெண் பலாத்காரம்

வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண் வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு பரிசோதிக்கப்பட்ட போது அந்த பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது.
திட்டக்குடி அருகே  இளம்பெண் பலாத்காரம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வசிஷ்டபுரம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள காட்டுபகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இயற்கை உபாதைக்காக ெசன்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண் வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதே போல மறுநாளும் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு பரிசோதிக்கப்பட்ட போது அந்த பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதனால் அந்த பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி விசாரித்த போது நடந்த விவரத்தை தெரிவித்தார். இதுகுறித்து திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசில் அந்த பெண் தனக்கு மாலைக்கண்நோய் இருப்பதால் தன்னை பலாத்காரம் செய்த வாலிபர் பற்றி தனக்கு தெரியாது என்று போலீசில் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com