search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dangerous journeys"

    • போதிய பஸ் வசதி இல்லாததால் இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, குட்டியானை போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
    • பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதுபோன்ற விபரீத பயணங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதுபோன்ற பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, குட்டியானை போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுதவிர சிறுமலை போன்ற மலைகிராமங்களில் இருந்து விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டுவருவதற்கும், அவசர தேவைகளுக்கு செல்வதற்கும் ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் ஏராளமான ஆட்டோக்களில் பள்ளி மாணவ-மாணவிகள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். ஓரு ஆட்டோவிற்கு 5 மாணவர்கள் மட்டுமே அழைத்துச்செல்லப்பட வேண்டும் என போக்குவரத்துறை அறிவித்து இருந்தாலும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மூட்டைகள் போல அடுக்கி வைத்து அழைத்துச்செல்கின்றனர்.

    இதேபோல குட்டியானை வாகனங்களில் மாணவ-மாணவிகளும், கூலித்தொழிலாளர்களும் அதிகளவு ஏற்றிச்செல்லப்படுவது தினசரி நிகழ்வாக உள்ளது.

    பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதுபோன்ற விபரீத பயணங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஸ்சின் பின்பக்கம் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணிக்கின்றனர்.
    • கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்க வேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து ஆவட்டி, மங்களூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ் வழக்கம் போல் திட்டக்குடி பஸ் நிலையத்திலிருந்து சென்றது. பெருமுளை சாலையில் சென்ற போது பஸ்சின் பின்பக்கம் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்து உணராமல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயணிக்கின்றனர்.

    கல்லூரிக்காக ஏற்கனவே பஸ் ஒன்று இயக்குப்பட்டிருந்தது. தற்போது முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள் இது போன்ற பின்பக்கம் படிக்கட்டில் ஆபத்து உணராமல் தொங்கியவாறு பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்கனவே கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை  முறையாக இயக்கினால் இதுபோல மாணவர்கள் பயணம் செய்ய நேரிடாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    ×