என் மலர்tooltip icon

    கடலூர்

    • வாலிபர் ஒருவர் பெண்ணுக்கு லிப்ட் தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
    • திடீரென்று அந்த வாலிபர் வாழப்பட்டு பகுதியில் உள்ள கரும்புத்தோப்புக்குள் அழைத்து சென்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே பில்லாலி தொட்டி சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் பண்ருட்டி ராசாப்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வர வேண்டி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் பெண்ணுக்கு லிப்ட் தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது திடீரென்று அந்த வாலிபர் வாழப்பட்டு பகுதியில் உள்ள கரும்புத்தோப்புக்குள் அழைத்து சென்றுள்ளார். ஏற்கனவே அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    இதனை தொடர்ந்து பெண்ணை 3 பேர் சேர்ந்து தவறாக நடக்க முயன்று, செல்போனில் படம் பிடித்து உள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெண் அலறினார். அப்போது அந்த 3 பேரும் தப்பி ஓடினார்கள். பின்னர் அந்த பெண் அங்கிருந்து தப்பித்து வெளியில் வந்துள்ளார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராசாபாளையம் சேர்ந்த விக்கி, அண்ணா நகர் சேர்ந்த வேலு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பேருந்தின் பின் படிக்கட்டு அருகே குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் தலைக்குப்புற கைக்குழந்தையுடன் சாலையில் அலறி கொண்டு கீழே விழுந்தார்.
    • போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் அதிவேகமாக வந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்தார்.

    அப்போது பேருந்தின் பின் படிக்கட்டு அருகே குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் தலைக்குப்புற கைக்குழந்தையுடன் சாலையில் அலறி கொண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் குழந்தையையும், பெண்ணையும் மீட்க ஓடினர். இதனை கவனிக்காத ஓட்டுநர் மீண்டும் பஸ்சைஇயக்கத் தொடங்கினார்.

    அப்போது அங்கு இருந்தவர்கள் கூச்சலிடத்தால் பஸ்சை நிறுத்தினார். அந்த குழந்தையையும் தாயையும் அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றி லேசான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு அந்தப் பெண் புகார் எதுவும் கொடுக்காமல் சென்று விட்டார்.

    இந்த நிலையில் இந்த பெண் பஸ்சில் இருந்து தலைக்குப்பற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தர விட்டதை தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெண் யார் என தேடி வந்தனர்.

    நேற்றிரவு இந்த பெண் கடலூர் மாவட்டம் சின்னப்பகண்டை கிராமத்தை சேர்ந்த சித்தானந்தன். இவரது மனைவி ரம்யா (வயது30). இவர்களது பெண் குழந்தை கீர்த்தனா (வயது 3) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண் வீட்டிற்கு சென்ற போலீசார் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

    அப்போது அதிவேகமாக பேருந்து வந்த நிலையில் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் கையில் குழந்தை வைத்திருந்த நிலையில் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு தான் வெளியில் விழுந்ததாக அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் சித்தானந்தன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பஸ்சை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியது மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாக 2 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஒரே நாளில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தொரப்பாடி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவுப்படி தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் தீவிர சூதாட்ட வேட்டை நடந்தது.

    மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 40 பேர் கைது செய்யப்பட்டனர். பண்ருட்டி புதுப்பேட்டையில் டி.எஸ்.பி. சபியுல்லா மேற்பார்வையில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர வேட்டை நடந்தினர். அப்போது தொரப்பாடி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தக்க அறிவுரை வழங்கினார். இந்த சூதாட்ட வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

    • சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழி சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனிவேல் தனது தாய் அசோதைக்கு சாப்பாடு போடாமல் ஜீவனாம்சம் தராமல் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்.
    • அசோதை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் அசோதை (வயது 85). இவரது மகன் பழனிவேல் (வயது 50). இந்த நிலையில் பழனிவேல் தனது தாய் அசோதைக்கு சாப்பாடு போடாமல் ஜீவனாம்சம் தராமல் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்.

    இது குறித்து தாய் அசோதை தனது மகன் பழனிவேல் (வயது 50), மருமகள் உஷா (வயது 42) ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே: ரூ.5 லட்சம் பணம், 40 பவுன் நகை வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • ரூ. 5 லட்சம் ரொக்க பணம் வரதட்சணையாக கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் நீ என்னை விவாகரத்து செய்து விடு என்று மிரட்டியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஆனத்தூர் கம்பர் தெருவை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. இவரது மகள் லட்சுமி 32. இவருக்கும் அவையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் மகன் வெங்கடேசன் என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

    இவர்கள் இருவருக்கும் இதுவரை குழந்தை இல்லை. திருமணமான நாளிலிருந்து கணவன் வெங்கடேசன் மற்றும் அவரது தாய் சாந்தா மற்றும் அவரது உறவினரான ஆறுமுகம் மனைவி குமாரி 3பேரும் பேரும் சேர்ந்து கொண்டு லட்சுமியை பார்த்து நீ ஏன் தாலி சரடு போட்டுக் கொண்டு வரவில்லை.

    நீ போட்டு வந்த 15 பவுன் நகை போதாது. இன்னும் 40 பவுன் நகை உன் வீட்டில் இருந்து வாங்கி வந்தால் தான் இங்கு குடும்ப நடத்த முடியும். நீ ஒரு குழந்தை பெற்று கொடுக்க முடியாத மலடி. இதையும் மீறி இங்கு நீ குடும்பம் நடத்த வந்தால் உன்னை கொன்று புதைத்து விடுவோம் என்று அடிக்கடி மிரட்டி உள்ளனர்.

    உயிருக்கு பயந்த லட்சுமி கடந்த 4 வருடங்களாக தாய் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். கடந்த வாரம் லட்சுமி பண்ருட்டி கடை தெருவுக்கு வந்துவிட்டு பேருந்து நிலையத்தில் தனியாக பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த வெங்கடேசன் இன்னும் உன் வீட்டில் இருந்து ரூ. 5 லட்சம் ரொக்க பணம் வரதட்சணையாக கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் நீ என்னை விவாகரத்து செய்து விடு என்று மிரட்டியுள்ளார்.

    இது தொடர்பாக லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது.

    கடலூர்:

    மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணையிலிருந்து நீர் வரத்து வர தொடங்கியதால் கடலூர்மாவட்டம்பண்ருட்டி, எனதிரிமங்கலம், கண்டரக்கோட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது.

    இந்தஅணையின் மூலம் 100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரம் கிடைப்பதோடு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

    மேலும் பல்வேறு பகுதி்களுக்குசாத்தனூர்அணையின் மூலம்கூட்டு குடிநீர் திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால்சாத்தனூர் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்பெண்ணைஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், இன்ஸ்பெக்டர் நந்தகுமார், துணை தாசில்தார் சிவக்குமார் நேரில்பார்வையிட்டுஆய்வுசெய்தனர் .

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் பெண்ணை ஆற்று நீரில் இறங்கி குளிக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என அறிவித்துள்ளனர்.

    • பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • பண்ருட்டி போலீஸ் டி.எஸ்பி. சபியுல்லா உத்தரவின் பெயரில் புதுப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்பி. சபியுல்லா உத்தரவின் பெயரில் புதுப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பொன்னங்குப்பம் கிராமத்திற்கு மேற்கே உள்ள மந்தவெளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சாக்கு பையில் மணல் இருவர் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்ட அவர்கள் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போலீசார் அவர்கள் பொன்னகுப்பம் பகுதியை சேர்ந்த ஏழுமலை 55 என்பவரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய சுபாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மாமனாரை வேனை ஏற்றி கொல்ல முயன்ற மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சிலம்பரசன், கார்த்திகேயன் ஆகிய 3 சேர்ந்து அவர்கள் இருவரையும் தடியால் அடித்து, கல்லால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே துண்டுக்காடு வடக்கு தெருவை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது53). அதே கிராமத்தை சேர்ந்த மாயவேல் என்பவர் சேகர் மகள் உஷா என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேகரும் அவரது இரண்டாவது மகள் சுஜாதா என்பவரும் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதற்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மருமகன் மாயவேல் என்பவர் வேனை எடுத்து வந்து அவர்கள் மீது மோத வந்துள்ளார். இதில் சுதாரித்து ஒதுங்கிக்கொண்ட அவர்கள் ஏன் எங்கள் மீது வேனை ஏற்ற வருகிறாய் என்று கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாயவேல் மற்றும் அவரது நண்பர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன் ஆகிய 3 சேர்ந்து அவர்கள் இருவரையும் தடியால் அடித்து, கல்லால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் கழுத்து, தலை, கண்ணம் போன்ற பகுதிகளில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காடாம்புலியூர் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நேற்று 4-ம் சனிக்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கடலூர் மீன் பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் குவிய தொடங்கினர்.
    • புரட்டாசி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை நிறைவடையும் நிலையில் சனிக்கிழமைகள் அனைத்தும் முடிந்துவிட்ட காரணத்தினால் பொதுமக்கள் அதிக அளவில் மீன் வாங்குவதற்காக குவிந்தனர்.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் கடைசி வார சனிக்கிழமை நேற்று முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்து ஆர்வமுடன் மீன் வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் துறைமுகத்தில் மீன்கள் விலை மிகக் குறைவாக இருக்கும் என்பதால் கடலூர் மட்டுமல்லாமல் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு மீன் வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம்.

    இதேபோல் கடலூர் மட்டுமல்லாமல் பல்வேறு சுற்று பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக மீன் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதத்தின் 3-ம் சனிக்கிழமை கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கும், இறைச்சி வாங்குவதற்கும் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் திரண்டனர். மேலும் புரட்டாசி தொடங்கிய முதல் இருந்த மீன் விலை கடந்து வாரம் ஞாயிற்றுக்கிழமை கணிசமாக உயர்ந்தது.

    ஆனாலும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.

    நேற்று 4-ம் சனிக்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கடலூர் மீன் பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் குவிய தொடங்கினர். புரட்டாசி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை நிறைவடையும் நிலையில் சனிக்கிழமைகள் அனைத்தும் முடிந்துவிட்ட காரணத்தினால் பொதுமக்கள் அதிக அளவில் மீன் வாங்குவதற்காக குவிந்தனர்.

    இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் வழக்கமாக மீன் விற்கப்படும். இன்றும் மீன்கள் விற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வழக்கமாக கூட்டம் அதிகரிக்கும் தினங்களில் மீன் விலை கணிசமாக உயர்ந்து காணப்படும்.

    ஆனால் இன்று வஞ்சிரம் மீன் கிலோ 700 ரூபாயும், கருப்பு வவ்வால் கிலோ 300 ரூபாயும், சங்கரா மீன் 350 ரூபாய்க்கும் கிடைத்ததால் பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர். இதே போல் இறால் மற்றும் நண்டு போன்றவையும் 300 ரூபாயில் இருந்து கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி செல்ல முடிந்தது.

    மேலும் இறைச்சி கடையில் இன்னும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்து தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதையும் காணமுடிந்தது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாகர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • பதறிய சுதாகர் உயிர் பிழைக்க அபயகுரலிட்டார்.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் போலீஸ் சரகம் வடக்கு கஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). தி.மு.க. பிரமுகர்.

    இவர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதியில் ஓடும் வடலாற்றுக்கு சென்றார். அப்போது ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    இதனை கவனிக்காமல் சுதாகர் ஆற்றில் இறங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பதறிய சுதாகர் உயிர் பிழைக்க அபயகுரலிட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனாலும் சுதாகரை காப்பாற்ற முடியவில்லை. அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவரது கதி என்ன? என்று தெரியவில்லை.

    இன்று காலையும் சுதாகரை தேடும்பணி நடந்தது. அப்போது கஞ்சன்கொல்லை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சுதாகரின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. அந்த உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

    பின்னர் சுதாகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • பொது தீட்சிதர்கள் செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.
    • கோவில் தீட்சிதர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை செய்வதற்காக குழந்தைகளுக்கு தீட்சிதர்கள் திருமணம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.

    அந்த புகார்களின் அடிப்படையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை திருமணம் செய்த தாய், தந்தை என பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

    இதை கண்டித்து நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஹேம சபேசனை விடுதலை செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏ டி எஸ் பி அசோகன் மற்றும் போலீசார், சாலை மறியல் ஈடுபட்ட தீட்சிதர்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். 


    பலமுறை வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் தொடர்ந்ததால், தீட்சிதர்களை குண்டு கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, தீட்சிதர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.

    ×