என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பண்ருட்டி அருகே : மாமனாரை வேனை ஏற்றி கொல்ல முயன்ற மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
  X

  பண்ருட்டி அருகே : மாமனாரை வேனை ஏற்றி கொல்ல முயன்ற மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாமனாரை வேனை ஏற்றி கொல்ல முயன்ற மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சிலம்பரசன், கார்த்திகேயன் ஆகிய 3 சேர்ந்து அவர்கள் இருவரையும் தடியால் அடித்து, கல்லால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

  கடலூர்:

  பண்ருட்டி அருகே துண்டுக்காடு வடக்கு தெருவை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது53). அதே கிராமத்தை சேர்ந்த மாயவேல் என்பவர் சேகர் மகள் உஷா என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

  இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேகரும் அவரது இரண்டாவது மகள் சுஜாதா என்பவரும் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதற்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மருமகன் மாயவேல் என்பவர் வேனை எடுத்து வந்து அவர்கள் மீது மோத வந்துள்ளார். இதில் சுதாரித்து ஒதுங்கிக்கொண்ட அவர்கள் ஏன் எங்கள் மீது வேனை ஏற்ற வருகிறாய் என்று கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாயவேல் மற்றும் அவரது நண்பர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன் ஆகிய 3 சேர்ந்து அவர்கள் இருவரையும் தடியால் அடித்து, கல்லால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் கழுத்து, தலை, கண்ணம் போன்ற பகுதிகளில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இது தொடர்பாக சேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காடாம்புலியூர் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  Next Story
  ×