search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dowry issue"

    • பண்ருட்டி அருகே: ரூ.5 லட்சம் பணம், 40 பவுன் நகை வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • ரூ. 5 லட்சம் ரொக்க பணம் வரதட்சணையாக கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் நீ என்னை விவாகரத்து செய்து விடு என்று மிரட்டியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஆனத்தூர் கம்பர் தெருவை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. இவரது மகள் லட்சுமி 32. இவருக்கும் அவையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் மகன் வெங்கடேசன் என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

    இவர்கள் இருவருக்கும் இதுவரை குழந்தை இல்லை. திருமணமான நாளிலிருந்து கணவன் வெங்கடேசன் மற்றும் அவரது தாய் சாந்தா மற்றும் அவரது உறவினரான ஆறுமுகம் மனைவி குமாரி 3பேரும் பேரும் சேர்ந்து கொண்டு லட்சுமியை பார்த்து நீ ஏன் தாலி சரடு போட்டுக் கொண்டு வரவில்லை.

    நீ போட்டு வந்த 15 பவுன் நகை போதாது. இன்னும் 40 பவுன் நகை உன் வீட்டில் இருந்து வாங்கி வந்தால் தான் இங்கு குடும்ப நடத்த முடியும். நீ ஒரு குழந்தை பெற்று கொடுக்க முடியாத மலடி. இதையும் மீறி இங்கு நீ குடும்பம் நடத்த வந்தால் உன்னை கொன்று புதைத்து விடுவோம் என்று அடிக்கடி மிரட்டி உள்ளனர்.

    உயிருக்கு பயந்த லட்சுமி கடந்த 4 வருடங்களாக தாய் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். கடந்த வாரம் லட்சுமி பண்ருட்டி கடை தெருவுக்கு வந்துவிட்டு பேருந்து நிலையத்தில் தனியாக பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த வெங்கடேசன் இன்னும் உன் வீட்டில் இருந்து ரூ. 5 லட்சம் ரொக்க பணம் வரதட்சணையாக கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் நீ என்னை விவாகரத்து செய்து விடு என்று மிரட்டியுள்ளார்.

    இது தொடர்பாக லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வரதட்சணை வாங்கி வராத மனைவிக்கு சாப்பாடு தராமல் பட்டினி போட்ட கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.சுப்புலாபுரம் மேற்கு தெருவை சேர்ந்த கார்த்திக் என்பருக்கும் கடந்த 3.2.2017 தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு பிரீத்தியை கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

    தனியாக வீடு பார்க்க வேண்டும் என சொல்லி பிரீத்தியின் 18 பவுன் நகைகளை அடகு வைத்து விட்டனர். வரதட்சணை வாங்கி வராத ஆத்திரத்தில் பிரீத்திக்கு சரிவர சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளனர்.

    குழந்தை பிறப்பிற்காக பிரீத்தி தனது தாய் வீட்டிற்கு வந்தார். அவரை பார்க்க வநத கார்த்தியின் உறவினர்கள் 5 பவுன் நகை குழந்தைக்கு அணிவித்து வீட்டிற்கு வர வேண்டும் என பேசி உள்ளனர். இதனால் பிரீத்தி கோர்ட்டில் வரதட்சணை புகார் குறித்து மனு அளித்தார்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் கார்த்திக், மாமியார் பிரேமா, உறவினர்கள் ரேணுகா, சுப்பிரமணியம், பானுபிரியா, பெத்துராஜ் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×