என் மலர்
கடலூர்
- பொது மக்கள்பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
- நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்.
கடலூர்:
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது வீட்டில் பலகாரங்கள் செய்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவர். இதையடுத்து தற்போது பொது மக்கள்பண்டி கையை கொண்டாட தயாராகி வருகின்றனர். கடலூர் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்காக கடலூர் லாரன்ஸ் சாலை மற்றும் கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள துணி கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தீபாவளி நெருங்கும் நாட்களில் கடலூர் நகர் வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் இந்த பகுதியில்அதிகரித்து காணப்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களிடமிருந்து நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். இதனை தடுக்கும் பொருட்டு கடலூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும்போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கடலூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் அருகிலும், கடலூர்-சிதம்பரம் சாலைமற்றும் கடலூர் பஸ் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு கோபுரம்அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் அந்த கண்காணிப்பு கோபுரத்தில்இருந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டே பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் கூட்டத்தில் மர்ம நபர்கள் திருட்டுசெயல்களில் ஈடுபடுகின்றனரா? என்பதையும் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
- பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாககூறியதால்.விசாரணை யில்பண்ரு ட்டி அருகே பகண்டை கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி விவசாயி. இவரதுவீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.
- போக்குவரத்து இடையூறாக உள்ள இடத்தில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என போக்குவரத்து காவலரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
விருத்தாசலம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருத்தாசலம் பஸ் நிலையம், பாலக்கரை ரவுண்டானா, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் காவல்துறையின் சார்பில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து இடையூறாக உள்ள இடத்தில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து தலைமை காவலர் சிவபெருமாள் என்பவர் பொதுமக்களிடையே ஒலிபெருக்கி மூலம், வாகன ஓட்டிகள் இடது புறமாக செல்லவேண்டும். வாகனத்தில் செல்லும்போது செல்போன் பேசக்கூடாது, ஹெல்மெட் அணிய வேண்டும். பெண்கள் தங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், விபத்து ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு என்ன இழப்பு என்பன குறித்து பாடல்களை பாடி அந்த பாடலுக்கு விளக்கம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதனை அப்பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என போக்குவரத்து காவலரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
- ஷாலினி திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- கா சிநாதன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே வரிஞ்சிபக்கம் முருகன் கோவில் தெரு சேர்ந்தவர்காசிநாதன். அவரது மகள் ஷாலினி (வயது 17). இவர்திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுஇரவு 9 மணிக்கு தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை.அதிர்ச்சி அடைந்த காசிநாதன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினர்.
எங்கும் தேடியும் கிடைக்காததால் காசிநாதன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவி ஷாலினியை தேடி வருகிறார்.
- சித்திக் கடலூர் முதுநகரில் தங்கி டிராவல்ஸ் ஒன்றில் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
- சித்திக் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
திருச்சி லால்குடியை சேர்ந்தவர் சித்திக் (வயது 28). இவர் கடலூர் முதுநகரில் தங்கி டிராவல்ஸ் ஒன்றில் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று சித்திக் தனது நண்பர் ஷாகுல் ஹமீது என்பவருடன் கடலூர் சொத்திக்குப்பம் பரவனாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாகுல் ஹமீது மற்றும் சித்திக் ஆகியோர் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக படகில் வந்த மீனவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாகுல் ஹமீதை மீட்க முயற்சித்தனர். ஆனால் சித்திக் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உயிரிழந்த சித்திக் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எரிபொருள் தீர்ந்ததால் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
- போலீசாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது.
கடலூர்:
சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச் சாலையில் கூத்தன் கோவில் அருகே சென்னை அம்பத்தூர் பகுதியில் திருடப்பட்ட கனரக லாரி மர்ம நபர்கள் எரிபொருள் தீர்ந்ததால் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். லாரியில் பொருத்தப்ப ட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் லாரி யின் உரிமையாளர் தொடர்ந்து லாரியை பின் தொடர்ந்து வந்த போது மேற்கண்ட இடத்தில் லாரி நிறுத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சிதம்பரம் போலீசா ருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 100 நாள் வேலையை முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலையை வழங்கி சம்பளம் முழுமையாக வழங்கிட வேண்டும்.
- இன்று காலை மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
கடலூர்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 100 நாள் வேலைக்கு காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலையை முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலையை வழங்கி சம்பளம் முழுமையாக வழங்கிட வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். புதிய பட்டாக்களை குடும்ப பெண்கள் பெயரில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷமும் எழுப்பினர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் தலைமையில் புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவைப் பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் புதுவையில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையில் கொறத்தி கிராமத்தைச் சேர்ந்தநடராஜன், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் , ஆகியோர் என தெரியவந்தது.இவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 120 பாக்கெட் சாராயங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
- குமரி கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யும்.
- கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதிகளில் அதிக மழை பெய்து வந்தது.
கடலூர்:
குமரி கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழக த்தின் கடற்கரை மாவட்ட ங்களில் மழை பெய்யும். மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. நேற்று கடலூர், நெல்லி க்குப்பம், பண்ருட்டி, குறி ஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், எஸ்.ஆர்.சி. குடித்தாங்கி, புவனகிரி , பரங்கிப்பேட்டை, வானமாதேவி, காட்டு மன்னார்கோவில், விருத்தா ச்சலம், சிதம்பரம், அண்ணா மலை நகர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை பணிகளாக மரம் அறுக்கும் கருவி, படகு, உயிர் காக்கும் கருவி போன்றவற்றை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதி கள் மற்றும் பேரிடர் காலத்தில் எங்கெங்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகள் என கண்ட றியப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதிகளில் அதிக மழை பெய்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் எஸ்.ஆர்.சி. குடிதாங்கி என்ற பகுதியில் 13.5 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்த க்கதாகும்.
இதன் காரணமாக அப்பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்த காரணத்தினால் கூடுதல் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளது. இந்த நிலை யில் தற்போது தென்பெ ண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. மேலும் சீதோஷ்ன மாற்றம் காரணமாக பொது மக்களுக்கு உடல் உபாதை கள் ஏற்பட்டு அவதி அடைந்து வருவதை காண முடிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அவசர அவசரமாக நடை பெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக வருகிற தை மாதம் நெல் அறு வடை செய்யப்படும் என விவசாயி கள் தெரிவித்தனர்.
மேலும் மாவட்ட முழு வதும் தொடர் மழை காரண மாக விவசாய பணிகள் ஆங்காங்கே தடை ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட த்தில் மழை அளவு பின்வரு மாறு:- எஸ்ஆர்சி குடிதாங்கி - 135.0, ஸ்ரீமுஷ்ணம் - 68.2, வடக்குத்து - 58.0, ஆட்சியர் அலுவலகம் - 38.8, குறிஞ்சிப்பாடி - 30.0, கடலூர் - 28.0, பண்ருட்டி - 26.0, கொத்தவாச்சேரி - 20.0, மீ-மாத்தூர் - 15.0, புவ னகிரி - 14.0, பெல்லா ந்துறை - 12.0, பரங்கி ப்பேட்டை - 6.2, வானமா தேவி - 4.6, காட்டுமன்னா ர்கோயில் - 4.0, லக்கூர் - 3.2, அண்ணாமலைநகர் - 3.0,. விருத்தாசலம் - 2.0, குப்பநத்தம் - 1.6, சிதம்பரம் - 1.0 என மொத்தம் 470.60 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- 4 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு, செல்போன்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுமாத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலிய மூர்த்தி. அவரது மனைவி சுபிதா (வயது 32), இவர் நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் அங்கு வீட்டின் பின்புறம் சுவரில் செங்கல்களை எடுத்துவிட்டு மர்மநபர்கள் உள்ளே சென்றனர். பின்னர் சுபிதா கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.
அதேபோல் பெரியசாமி வீட்டுக்கு மர்மநபர்கள் சென்றனர். அங்கு அவரது மனைவி ரத்தினாம்பாள் அணிந்திருந்த 6 கிராம் தாலி சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.
அதேபோல் சங்கர் மனைவி சுதாகழுத்திலிருந்து மஞ்சள் கயிறு அறுத்துள்ளனர். தாலி ஏதும் இல்லாததால் அருகில் இருந்த 2 செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் போத்திர மங்கலம் செல்லும் வழியில் சாலையோரம் உள்ள அறிவழகன் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தது. அங்கு அவரது மனைவி லலிதா அணிந்திருந்த 6 கிராம் தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்று உள்ளனர்.
நேற்று இரவு மட்டும் அந்த பகுதியில் 4 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு, செல்போன்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக ஆவினங்குடியை சுற்றி உள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
- தனது வாகனம் மூலம் நெய்வேலிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
- டாட்டா ஏசி ஓட்டி வந்த பாரதிராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சி தில்லை நகர் புறா தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமாரன் .அவரது மகன் பாரதிராஜா (வயது 24). இவர் சொந்தமாக டாட்டா ஏசி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனதுடாட்டா ஏசி வேன் மூலம் காரைக்காலுக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வீட்டு மீண்டும் தனது வாகனம் மூலம் நெய்வேலிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்பொழுது வடக்குத்து போலீஸ் நிலையம் சென்னை - தஞ்சாவூர் சாலையில் வடலூர் நோக்கி வந்த அரசு விரைவு பஸ், டாட்டா ஏ.சி. வேன் மீது அதிவேகமாக மோதியது. இதில் டாட்டா ஏசி ஓட்டி வந்த பாரதிராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து பாரதிராஜா சகோதரர் பிரசாந்த் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






