என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி திருட்டை தடுக்க கடலூர் நகர் பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு
    X

    திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்திலிருந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதை படத்தில் காணலாம்.

    தீபாவளி திருட்டை தடுக்க கடலூர் நகர் பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொது மக்கள்பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
    • நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்.

    கடலூர்:

    நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது வீட்டில் பலகாரங்கள் செய்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவர். இதையடுத்து தற்போது பொது மக்கள்பண்டி கையை கொண்டாட தயாராகி வருகின்றனர். கடலூர் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்காக கடலூர் லாரன்ஸ் சாலை மற்றும் கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள துணி கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    தீபாவளி நெருங்கும் நாட்களில் கடலூர் நகர் வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் இந்த பகுதியில்அதிகரித்து காணப்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களிடமிருந்து நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். இதனை தடுக்கும் பொருட்டு கடலூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும்போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, கடலூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் அருகிலும், கடலூர்-சிதம்பரம் சாலைமற்றும் கடலூர் பஸ் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு கோபுரம்அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் அந்த கண்காணிப்பு கோபுரத்தில்இருந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டே பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் கூட்டத்தில் மர்ம நபர்கள் திருட்டுசெயல்களில் ஈடுபடுகின்றனரா? என்பதையும் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×