என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒரே நாளில் 4 பெண்களிடம் நகை பறித்த கொள்ளையர்கள்
    X

    நகை பறிப்பு நடந்த பெண்ணின் வீட்டை படத்தில் காணலாம்.


    ஒரே நாளில் 4 பெண்களிடம் நகை பறித்த கொள்ளையர்கள்

    • 4 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு, செல்போன்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுமாத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலிய மூர்த்தி. அவரது மனைவி சுபிதா (வயது 32), இவர் நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் அங்கு வீட்டின் பின்புறம் சுவரில் செங்கல்களை எடுத்துவிட்டு மர்மநபர்கள் உள்ளே சென்றனர். பின்னர் சுபிதா கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.

    அதேபோல் பெரியசாமி வீட்டுக்கு மர்மநபர்கள் சென்றனர். அங்கு அவரது மனைவி ரத்தினாம்பாள் அணிந்திருந்த 6 கிராம் தாலி சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.

    அதேபோல் சங்கர் மனைவி சுதாகழுத்திலிருந்து மஞ்சள் கயிறு அறுத்துள்ளனர். தாலி ஏதும் இல்லாததால் அருகில் இருந்த 2 செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர்.

    பின்னர் போத்திர மங்கலம் செல்லும் வழியில் சாலையோரம் உள்ள அறிவழகன் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தது. அங்கு அவரது மனைவி லலிதா அணிந்திருந்த 6 கிராம் தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்று உள்ளனர்.

    நேற்று இரவு மட்டும் அந்த பகுதியில் 4 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு, செல்போன்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக ஆவினங்குடியை சுற்றி உள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×