என் மலர்
கடலூர்
- கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது.
- மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
கடலூர், அக்.20-
மத்திய கிழக்கு வங்கக்க டல் மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 22- ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று புயலாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது. இந்த மழை இரவு நேரங்களில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, லால்பேட்டை, எஸ் ஆர். சி, குடிதாங்கி, கீழ் செருவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவ லாக மழை பெய்தது. நேற்று இரவு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் மழை பெய்து வந்தது. இன்று காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் 3 நாட்களில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை எதிர்பார்த்திருக்கும் சாலையோர பட்டாசு வியாபாரிகள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான சிறு சிறு கடை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 26-ந் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்காத வகை யில் விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது.
- முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றி உள்ள ராமநத்தம், வாகையூர், பாளையம், கீழ்ச்செருவாய், ஆவினங்குடி, பெண்ணாடம் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது. மழையின் காரணமாக திட்டக்குடி நகரில் மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் அதிகாலை 3 மணிக்கு வந்துள்ளது.
இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் சிறுவர்களை வைத்துக்கொண்டு தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். தற்பொழுது இதுபோன்று பகல் நேரங்களிலும் எந்த முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
- 3 பேரும் புள்ளட்டில் நேற்று இரவு அரசூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
- மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத் (வயது 35), மோகன் (23), பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜய் (23). இவர்கள் நண்பர்கள் ஆவர். இவர்கள் 3 பேரும் புள்ளட்டில் நேற்று இரவு அரசூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். மணம்தவழ்ந்த புத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோகன், வினோத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஜய் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் விஜயை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்தனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- அ.தி.மு.க .சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்ததற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
- ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர்.
கடலூர்:
சட்டமன்றத்தி ல்எதிர்கட்சி துணைத்தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரி அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க .சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்ததற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர்சாலை மறியல் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் 4 முனை சந்திப்பில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், யூனியன் தலைவர் பக்கிரி, பகுதி செயலாளர்கள் மாதவன், பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தஷ்ணா, வினோத், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பி கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அ.தி.மு.க.வினர் தங்கள் போராட்டத்தை கைவிடாததால் போலீசார் 70 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பாக காணப்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர்.
- சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் கீழ் அருங்குணம்பகுதியை சேர்ந்தவர் கவியரசு(வயது 23).இவரது தந்தை தங்கவேலுவை கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நபர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்தனர். இதனை தொடர்ந்து பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர். இதன் காரணமாக2 தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கவியரசு, அவரது உறவினர் ராஜதுரை ஆகியோர் குச்சிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததனர். மேலும் சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த மோதலில் ராஜதுரை மற்றும் அமிர்தலிங்கம் ஆகியவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் கீழ் அருங்குணம் சேர்ந்தவர்கள் சேதுபதி, கண்ணதாசன், ஆகாஷ், ஸ்ரீதர், பாஸ்கர் ஆகியோர் மீதும் அமிர்தலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், ராஜதுரை என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சேதுபதி, கண்ணதாசன், கவியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- பல்வேறு மாவட்ட ங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 22- ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, லால்பேட்டை, எஸ் ஆர். சி, குடிதாங்கி, கீழ் செருவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடலூர் கலெக்டர் அலுவல கம் பகுதியில் மட்டும் 2.8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரம் இடி மின்னலுடன் மழைபெய்த காரணத்தினால் மின்தடை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மின்சார துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நெல்லிக்குப்பம் பகுதியில் மின்சார சப்ளை வழங்கினர். மேலும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நடவடி க்கையும் மேற்கொண்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து முன்னேற்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 26 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்த ப்பட்டு வருகின்றது இது மட்டும் இன்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்காத வகை யில் விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு:- கலெக்டர் அலுவலகம்- 28.0, எஸ்.ஆர்.சி குடிதாங்கி -20.0, கடலூர்- 16.4, வானமாதேவி-13.0, கீழ்செருவாய்-13.0, வடக்குத்து-8.0, லால்பேட்டை - 4.0, பண்ருட்டி - 2.0, மொத்த மழை - 104.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது
- உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.
- கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கர்நாடக மாநிலத்தில் கடும்மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில்தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான120 அடியை எட்டிய நிலையில், உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. பவானிசாகர்பகுதியில் பெய்யும் மழையும், கொள்ளிடம் ஆற்று பகுதியில் பெய்யும் மழை நீருடன் சேர்ந்த உபரி நீரும் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கீழணை யில் 8 அடி தண்ணீ ரை மட்டுமே தேக்க முடியும் என்பதால் நேற்று முன்தி னம் மதியம் விநாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடிதண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனா ல்கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ள நீர் சென்றது. மேலும் கொள்ளிட ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ள நீர் செல்வதால் சிதம்பரம் அருகே தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம்,திட்டுக்காட்டூர்,கீழ குண்டலபாடி ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் வருவாய்,வளர்ச்சித்துறை ஊரக அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். மேலும் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட சிதம்பரம் செயற்பொ றியாளர் காந்தருபன் தலைமையில் உதவி செய ற்பொறியாளர் அணை க்கரை குமார், சிதம்பரம் ஞானசேகர் மற்றும் உதவிப்பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒருவருக்கு ஒருவர் தடி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
- மோதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு காலணியை சேர்ந்தவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கலியபெருமாள். இவரது மனைவி உமையாள் (வயது 56) இவர் நேற்று இறந்தார். அவரது இறுதி ஊர்வலம்நேற்று மாலை நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது மாலையை அதே ஊரை சேர்ந்த கார்த்தி (25) என்பவர், பரத் (25) என்பவர் கழுத்தில் போட்டுள்ளார். இதனால் இருவரு க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சவ ஊர்வலம் முடித்து விட்டு வந்து ஒருவருக்கு ஒருவர் தடி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
இதில் பஞ்சாட்சரம் (55), பரத் (25), வடிவேல்(53), கார்த்தி (25) உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த அனை வரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- எம்ஜிஆர் பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார்.
- காதலனிடம் தன்னை திருமணம் செய்ய கூறி உள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி ,மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்து, கடந்த 2 ஆண்டுகளாக முத்தாண்டி குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். இவர், பக்கத்து ஊரா னமேல்காங்கிருப்பை சேர்ந்த ஜெயபால் என்பவரிடம் பேசி பழகி காதலித்துவந்ததாக கூற ப்படுகிறது
விடுமுறை நாட்களில் முத்தாண்டிக்குப்பம் சின்ன ப்பிள்ளை என்பவரது முந்திரி தோப்பில் சந்தித்து ஜெயபால் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வலுக்க ட்டாயமாக உல்லாசம் கொண்டார். இதனால் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதுபற்றி அந்த பெண் தனது காதலனிடம் தன்னை திருமணம் செய்ய கூறி உள்ளார். ஆனார் ஜெயபால் மறுத்துள்ளார். இது பற்றி அந்த பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்புகாரின் பேரில் போக்சோசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துமேல்காங்கிருப்பை சேர்ந்த ஜெயபாலை வலை வீசிதேடி வருகின்றனர்.
- மாணவி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டதாக தெரிகிறது.
- மாணவி க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் அறிவியல் ஆசிரியர் பாலி யல் தொல்லையில் ஈடுபட்ட தால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று ள்ளார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே விநாயகபுரம் கொழை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 55). இவர் அங்குள்ள அரசு உயர்நிலை ப்பள்ளியில் 10-ம் வகுப்பு அறிவியல் ஆசிரிய ராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பள்ளியில் உள்ள ஆய்வக த்தில் இருந்தபோது, 10-ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது டைய மாணவி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவியிடம் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஏன் என்னுடன் சரியாக பேசு வதில்லை என்று கூறி, மாண விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு சென்ற அவர் பள்ளிக்கூடத்துக்கு வராமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த மாணவி விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி கிடந்த மாணவியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடம் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மாணவி க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மாணவியின் தாய் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தமிழ்ச்செல்வனை ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினர்கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.
- மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (70). இவர் மூங்கில்துறைப்பட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் நிர்வாகியாக இருந்து வருகிறார். ஜெயராமன், சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினா் இதுபற்றி செல்போன் மூலம் ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் ஜெயராமனின் வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த கோவில் பணம் ரூ.35 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- நேற்று கணவன் - மனைவி 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று இருந்தனர்.
- புதுப்பேட்டை போலீசில் கஸ்தூரி புகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடியை சீனிவாசன் நகரை சேர்ந்தவர்முருகப்பன்-கஸ்தூரிதம்பதியினர்.இவர்களது மகள் கோமதி (வயது 15). இவர் புதுப்பேட்டை பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கணவன் - மனைவி 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று இருந்தனர். கோமதிவீட்டி ல்தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைசேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் கோமதியை மயக்கி ஆசைவா ர்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றிபுதுப்பேட்டை போலீசில் கஸ்தூரி புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்த குமார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட பள்ளி மாணவி கோமதியை வலைவீசி தேடி வருகின்றனர்.






