என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்-2 பேர் பலி
    X

    பண்ருட்டி அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்-2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 பேரும் புள்ளட்டில் நேற்று இரவு அரசூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
    • மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத் (வயது 35), மோகன் (23), பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜய் (23). இவர்கள் நண்பர்கள் ஆவர். இவர்கள் 3 பேரும் புள்ளட்டில் நேற்று இரவு அரசூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். மணம்தவழ்ந்த புத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோகன், வினோத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஜய் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் விஜயை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்தனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×