search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பரவலாக மழை
    X

    கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பரவலாக மழை

    • பல்வேறு மாவட்ட ங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 22- ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, லால்பேட்டை, எஸ் ஆர். சி, குடிதாங்கி, கீழ் செருவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடலூர் கலெக்டர் அலுவல கம் பகுதியில் மட்டும் 2.8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரம் இடி மின்னலுடன் மழைபெய்த காரணத்தினால் மின்தடை ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மின்சார துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நெல்லிக்குப்பம் பகுதியில் மின்சார சப்ளை வழங்கினர். மேலும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நடவடி க்கையும் மேற்கொண்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து முன்னேற்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 26 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்த ப்பட்டு வருகின்றது இது மட்டும் இன்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்காத வகை யில் விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு:- கலெக்டர் அலுவலகம்- 28.0, எஸ்.ஆர்.சி குடிதாங்கி -20.0, கடலூர்- 16.4, வானமாதேவி-13.0, கீழ்செருவாய்-13.0, வடக்குத்து-8.0, லால்பேட்டை - 4.0, பண்ருட்டி - 2.0, மொத்த மழை - 104.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    Next Story
    ×