என் மலர்tooltip icon

    கடலூர்

    • டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
    • ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சரவணன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், நாகராஜன், கருணாகரன், ரூபன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சரவணன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் முன்னாள் மாநில தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறி உள்ளது.
    • தொடர் மழை காரணமாக வியாபாரிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

    கடலூர்:

    மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறி உள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

    நேற்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, விருதாச்சலம், புவனகிரி ,வடக்குத்து, வேப்பூர் மற்றும் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை விடிய விடிய தொடர்ந்து காலை வரை மழை பெய்து வந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு சாலை ஓரங்களில் பட்டாசு, துணிகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தொடர் மழை காரணமாக வியாபாரிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

    இது மட்டுமின்றி தற்போது கடலூர் மாவட்டத்தில் நிலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் கணிசமாக உயர்ந்து வருவதும் காண முடிகிறது இதன் காரணமாக விவசாய வேலைகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்திற்கு தொடர் மழை காரணமாக ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும் மாடு ஒன்று இறந்து உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு - வடக்குத்து - 73.0, காட்டுமயிலூர் - 50.0, ஆட்சியர் அலுவலகம் - 49.0, கடலூர் - 48.4, லக்கூர் - 30.0, வேப்பூர் - 30.0, குறிஞ்சிப்பாடி - 26.0 , எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 25.0 , ஸ்ரீமுஷ்ணம் - 23.2, விருத்தாசலம் - 22.0, பெல்லாந்துறை - 20.2, பண்ருட்டி - 17.0, லால்பேட்டை - 16.0, வானமாதேவி - 15.0, குப்பநத்தம் - 14.4, கொத்தவாச்சேரி - 14.0, புவனகிரி - 14.0, சேத்தியாதோப்பு- 12.0, மீ-மாத்தூர் - 12.0, பரங்கிப்பேட்டை - 9.0, காட்டுமன்னார்கோயில் - 8.0, தொழுதூர் - 8.0,. சிதம்பரம் - 7.0,ழ்செருவாய் - 5.0, அண்ணாமலைநகர் - 3.0, மொத்தம் - 551.20 மிமீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம்
    • போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கொக்குபாளையத்தில் ஜெயபால் தென்னந்தோப்பு அருகே கெடிலம் ஆற்றுக்குசெல்லும் வழியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம்தெரியாதஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும்புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டயர்பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பஸ் தறிகட்டு ஓடியது.
    • பஸ்சுக்குள் விழுந்து காயமடைந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி, காடாம்புலியூரிலிருந்து அரசு பஸ்ஒன்றுபண்ருட்டி நோக்கி வந்தது.பண்ருட்டி அருகேபணிக்கன்குப்பம் ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்து கொண்டிரு ந்தபோதுதிடீரென்று முன்பக்க டயர்பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பஸ் தறிகட்டு ஓடியது. இந்த விபத்தில் பெண் பயணி ஒருவர் உள்பட 2 பேர் பஸ்சுக்குள் மயங்கி விழுந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதே போல விருத்தாச்சலத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் தனியார் பஸ் ஒன்று அரசு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் குறிஞ்சிப்பாடிகண்ணாடி சேர்ந்த கிருஷ்ணமூர்த்திஎன்பவர் பஸ்சுக்குள் விழுந்து காயமடைந்தார். அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    • முக கவசம் கண்டறியும் செயலி மூலம் சோதனை நடத்தினர்.
    • முழு விவரம் உடனடியாக தெரிய வருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பொறுப்பு மற்றும் போலீசார் நேற்று இரவு பண்ருட்டி ரயில் நிலையம், பண்ருட்டி பஸ் நிலையம், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மாட வீதி பகுதியில் தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டனர். அப்போது- சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த நபர்களைப் பிடித்து முக கவசம் கண்டறியும் செயலி மூலம் சோதனை நடத்தினர். இந்த முக அடையாளம் காணும் செயலி குறித்து இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கூறியதாவது:- குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், குற்றத் தடுப்புப்பணிகளை செவ்வனேமேற்கொள்ளவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எப்ஆர்எஸ் செயலி சந்தேக நபரின் முழு விவரம் உடனடியாக தெரிய வருவதால் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளுக்கு இந்த செயலி மிகவும் உதவியாக உள்ளதுஎன்றார்.

    • இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
    • அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

    கடலூர்:

    அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24-ந் தேதி புயலாக உருவெடுக்க கூடும் என கூறப்படுகிறது.

    இதையொட்டி இன்று அதிகாலை 2 மணி முதல் விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 7 மணி வரை தொடர்ந்து பெய்த வண்ணம் இருந்தது. மழை காரணமாக அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

    • கடந்த சில நாட்களுக்கு முன் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பாலத்தின் கிழே பெருக்கெடுத்து ஓடியது.
    • கிராம மக்களின் பிரதான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    காட்டுமன்னார்கோவில்:

    வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை நீடித்து வருகிறது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    காட்டுமன்னார்கோவில் அருகே எடையார், திருமூஸ் தானம் கிராமத்தை இணைக்கும் மண்வாய்க்கால் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று வரவும் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பாலத்தின் கிழே பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் மண வளி தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது.இதனால் தற்போது பொதுப்பணித் துறையினர் பனைமரத்தினை கொண்டு வழி அமைத்து கொடுக்கும் பணியினை மேற்கொண்டனர். இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே காட்டுமன்னார்கோவிலில் இருந்து கெற்கிருப்பு, அழிச்சமங்கலம் வழி தடங்கள் மூலம் எடையார் வழியாக 10 கிராமங்களுக்கும் பேரக்குவரத்து வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஒரு ஆட்டின் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 6000 ஆடுகள் விற்பனையானது.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது.

    இந்த ஆட்டு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியநெசலூர், குளவாய், காட்டுமயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று நடந்த சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்குவதற்காக திருச்சி, சென்னை தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி சென்றனர்.

    கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.

    ஒரு ஆட்டின் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட விலை 500 முதல் 750 வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்பனையானது. தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 6000 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் உத்தரவின்பேரில், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது துறைமுகம்ஆ ற்றங்கரை வீதியை சேர்ந்த பிரியன் (வயது 30) என்பவர் சுமார் 120 லிட்டர் சாராயம் பாக்கெட்டுகள் வைத்திருந்தார்.

    பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்ததெய்வானை ( 55) என்பவர் சுமார் 70 லிட்டர் சாராயம், தியாகவல்லி அம்பேத்கார் நகரை சேர்ந்த தர்மமூர்த்தி (வயது 31)என்பவர் சுமார் 145 லிட்டர் சாராயம் வைத்திருந்தனர். இவர்களிடம் போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். 

    • ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • போலீசார் ஒவ்வொரு கடையாகசென்று முறையான அனுமதி பெற்றுள்ளனரா என்று விசாரித்தனர்.

    கடலூர்: 

     கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 100-க்கும் மேற்பட்ட தீபாவளி பட்டாசு கடைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது சிவகாசி நேரடி விற்பனை என்ற போர்வையில் ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கடலூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர் நேற்று அதிரடி சோதனை நடத்திவிதிமுறைகள் மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,பயிற்சிசப்-.இன்ஸ்பெக்டர் விஜய்,தலைமைகாவலர்சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஒவ்வொரு கடையாகசென்று முறையான அனுமதி பெற்றுள்ளனரா?   என்றும் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள பட்டாசுகள் தரம்,தயாரிப்பு தேதி ஆகியவை ஆய்வு செய்தனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி ஊர்காவல்படை வீரர் காயமடைந்தார்.
    • பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஏ.மேல் மாம்பட்டு கிராமத்தை ேசர்ந்தவர் செல்வராஜ் (53) இவர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவருடன் பணிபுரியும் முருகன் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்த னர்.இதுகுறித்து பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகமாக வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வடலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
    • ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேலாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    வடலூர் மாருதிநகரை சேர்ந்தவர் விமல் ராஜா. இவரது மனைவி வேளாங்கண்ணி இவரிடம் இவரது பெரியப்பா மகள் எஸ்தர் ராணி கடந்த ஆண்டு வட்டிக்கு ரூ.4,40,000 கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணி கொடுத்த பணத்தை எஸ்தரிடம் கேட்டுள்ளார். அதற்கு எஸ்தரோ பணத்தை க்கேட்டு வேளாங்கண்ணி தன்னை மிரட்டுவதாகவும் அளவுக்கு அதிகமாக வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வடலூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் வடலூர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் வேளாங் கண்ணி் வடலூர் ஆபத்தாரணபுரத்தைச்சேர்ந்த சமூக நல ஆர்வலரார் தனக்கேசவமூர்த்தி (55) கமலநாதன் அறிமுகமானர்கள்.

    இருவரும் வேளாங்கண்ணிக்கு பணத்தை மீட்டு தருவதாகவும், மேலும் போலீஸ் நிலையத்தில் இந்த பிரச்சனையை போலீசாரிடம் பேசி சுமுகமாக தீர்த்து வைப்பதாக கூறி ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேலாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கேசவ மூர்த்தி மற்றும் கமலநாதன் பணத்தை வாங்கி ஏமாற்றி யதை அறிந்த வேளாங்கண்ணி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் இரு வரும் பணத்தை திரும்பிக் கொடுக்க முடியாது என்றும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி வடலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனக்கேசவமூர்த்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான கமல நாதன் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×