என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
கடலூர் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
- ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சரவணன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.
கடலூர்:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், நாகராஜன், கருணாகரன், ரூபன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சரவணன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் முன்னாள் மாநில தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
Next Story






