என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol packets"

    • ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மது பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சரகத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி நகரம், அம்பலூர், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய் யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ண னுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு போலீசார் நாட்டறம்பள்ளி அருகே கல்லார் கிராமத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள சிக்கன் கடையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்து வந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தை-மகன் கைது
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் கிராமத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கார் மூலம் கடத்தி வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத தனி ஒரு ஷெட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் பால்நாங்குப்பம் பகுதிக்கு சென்று நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது நிலத்தில் உள்ள தனி ஷெட் ஒன்றில் கார் மற்றும் 86 பாக்ஸ்கள் கொண்ட மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதனை யடுத்து போலீசார் காரில் பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 61) மற்றும் அவரது மகன் இளவரசன் (வயது 32) ஆகிய 2 பேரும் கர்நாடக மாநிலத்திலிருந்து 4704 மது பாக்கெட்டுகள் வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதனையெடுத்து போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 30 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • சிறையில் அடைத்தனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டவுன் போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது மது பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த உஷா (வயது 30), ராதிகா (வயது 35) மற்றும் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38), வளர்மதி (வயது 45), ஆகியோரை போலீசார் கைது செய்த அவர்களிடமிருந்து 30 கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும்

    4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 100 பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீசார் மற்றும் தனிப்படையினர் சோமந்தாங்கல் கூட்ரோட்டில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வெட்டியாந் தொழுவம் பகுதியை சேர்ந்த பழனி (வயது 47) என்பதும், இவர் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

    இவரிடம் இருந்து 100 கர்நாடகா மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் பழனி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் உத்தரவின்பேரில், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது துறைமுகம்ஆ ற்றங்கரை வீதியை சேர்ந்த பிரியன் (வயது 30) என்பவர் சுமார் 120 லிட்டர் சாராயம் பாக்கெட்டுகள் வைத்திருந்தார்.

    பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்ததெய்வானை ( 55) என்பவர் சுமார் 70 லிட்டர் சாராயம், தியாகவல்லி அம்பேத்கார் நகரை சேர்ந்த தர்மமூர்த்தி (வயது 31)என்பவர் சுமார் 145 லிட்டர் சாராயம் வைத்திருந்தனர். இவர்களிடம் போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். 

    ×