மோட்டார் சைக்கிள் மோதி ஊர்காவல்படை வீரர் காயம்

மோட்டார் சைக்கிள் மோதி ஊர்காவல்படை வீரர் காயமடைந்தார்.பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
மோட்டார் சைக்கிள் மோதி ஊர்காவல்படை வீரர் காயம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஏ.மேல் மாம்பட்டு கிராமத்தை ேசர்ந்தவர் செல்வராஜ் (53) இவர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவருடன் பணிபுரியும் முருகன் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்த னர்.இதுகுறித்து பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com