search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "70 people arrested"

    • அ.தி.மு.க .சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்ததற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
    • ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர்.

    கடலூர்:

    சட்டமன்றத்தி ல்எதிர்கட்சி துணைத்தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரி அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க .சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்ததற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர்சாலை மறியல் செய்தனர்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் 4 முனை சந்திப்பில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், யூனியன் தலைவர் பக்கிரி, பகுதி செயலாளர்கள் மாதவன், பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தஷ்ணா, வினோத், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பி கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அ.தி.மு.க.வினர் தங்கள் போராட்டத்தை கைவிடாததால் போலீசார் 70 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பாக காணப்பட்டது.

    ×