நெய்வேலி அருகே விபத்து அரசு பஸ்- வேன் மோதல் வியாபாரி உடல் நசுங்கி பலி

தனது வாகனம் மூலம் நெய்வேலிக்கு திரும்பி கொண்டு இருந்தார். டாட்டா ஏசி ஓட்டி வந்த பாரதிராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பலியான பாரதிராஜா
பலியான பாரதிராஜா
Published on

நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சி தில்லை நகர் புறா தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமாரன் .அவரது மகன் பாரதிராஜா (வயது 24). இவர் சொந்தமாக டாட்டா ஏசி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனதுடாட்டா ஏசி வேன் மூலம் காரைக்காலுக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வீட்டு மீண்டும் தனது வாகனம் மூலம் நெய்வேலிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்பொழுது வடக்குத்து போலீஸ் நிலையம் சென்னை - தஞ்சாவூர் சாலையில் வடலூர் நோக்கி வந்த அரசு விரைவு பஸ், டாட்டா ஏ.சி. வேன் மீது அதிவேகமாக மோதியது. இதில் டாட்டா ஏசி ஓட்டி வந்த பாரதிராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து பாரதிராஜா சகோதரர் பிரசாந்த் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com