search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புவனகிரி பகுதியில் உள்ள உரக்கடைகளில்  உரம், யூரியா அதிக விலைக்கு விற்பனை
    X

    புவனகிரி பகுதியில் உள்ள உரக்கடைகளில் உரம், யூரியா அதிக விலைக்கு விற்பனை

    • யூரியாவிற்கு கைரேகை மற்றும் ஆதார் அட்டை மூலம் விற்பனை முனையத்தின் படி ரசீது வழங்குவதில்லை.
    • அவர்களது வயிற்றில் பால் பார்க்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    கடலூர்:

    புவனகிரி பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் உரம், யூரியா அரசு நிர்ணயத்தை விலையை விட ரூபாய் 50 முதல் 80 வரை கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு எந்த ஒரு கைரேகை பதிவு செய்து கொடுக்கப்படவில்லை. ஒரு சில கடைகளில் மீறி கேட்டால் உங்களுக்கு உரம், யூரியா போன்ற பொருள்கள் உங்களுக்கு கிடையாது என்று கூறுகின்றனர். விவசாயிகள் தனியார் கடைகளில் வாங்கும் உரம் யூரியாவிற்கு கைரேகை மற்றும் ஆதார் அட்டை மூலம் விற்பனை முனையத்தின்படி ரசீது வழங்குவதில்லை. இதனைப் போக்க மாவட்ட ஆட்சியர்,வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து அதிக விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களது லைசன்ஸை ரத்து செய்து விவசாயிகளுக்கு இதனை வெளிப்படுத்தி அவர்களது வயிற்றில் பால் பார்க்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கடைகளிலும் டி.ஏபி.உரம் , யூரியா, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகியவர்களின் இருப்பு பட்டியல் மற்றும் விலைப்பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி விலைப் பலகையில் எழுதி வெளியில் வைக்க வேண்டும். அதில் முறைகேடுகள் நடந்தால் யாருக்கு புகார் அளிக்க வேண்டும் என்று அந்த தொலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிட வேண்டும். இந்த முறைகேட்டை போக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து உரங்களையும் வரவைத்து விவசாயிகளிடம் ஆதார் அட்டை மற்றும் அடங்களை வாங்கிக் கொண்டு ரொக்க விலைக்கும் விற்பனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கு பலனாகவும் நாட்டில் முதுகெலும்பான விவசாயத்தை முற்றிலும் பாதுகாக்க நேரிடும். இதனை தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்து அனைத்து கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு கொடுத்தால்அரசுக்கு நற்பெயர் உண்டாகும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

    Next Story
    ×