என் மலர்
கடலூர்
- குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
- தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக் களம், திருவட்டத்துறை பகுதியில் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தது, மின் கம்பங்கள், மின்பாதை சேதம் அடைந்தது. மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர். பொதுமக்கள் 24 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் மின்சாரம் வழங்காத மின்சார வாரியத்தை கண்டித்து நேற்று இரவு திருவட்டத்துறை, கொடிக்க ளம் கிராமமக்கள் விருத்தா சலம்- திட்டக்குடி சாலை யில் கொடிக்களம் பஸ் நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடு பட்டிருந்த பொது மக்களி டம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெரில் பொதுமக்கள் சாலை மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் மற்றும் அதன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் கடந்த ஒரு வார காலமாக தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி உள்ள னர். விழுப்புரம் மாவட் டத்தில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தில் இருக்கும் அரகண்ட நல்லூரில் இது போன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக அரிசி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வியாபார பிரமுகர்களும் தொடர் மின்வெட்டால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரி களிடம் பொதுமக்கள் தரப்பில் காரணம் கேட்கும் பொழுது ஏன் மின்வெட்டு ஏற்படுகின்றது என்கிற காரணம் எங்களுக்கே தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பில் பதில் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அறி விக்கப்படாத மின்வெட்டுக் கான காரணம் என்னதான் என புரியாமல் பொதுமக்கள் குழம்பி உள்ளனர்.
- சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
2023ஆம் ஆண்டிற்கான சுதந்திரதின விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மற்றும் மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவகர்கள் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இவ்விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையளதத்தில் 10.06.2023 வரை பதிவேற்றம் செய்யலாம். மேற்படி அரசாணையின்படி சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மொழி, இனம், பண்பாடு, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரியும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமூக சேவை தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர்.
- உழவர் சந்தை அருகில் சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் கயிறு பதித்தனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், கடலூர் - சிதம்பரம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடலூர் போக்குவரத்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர் சந்தை அருகில் சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் கயிறு பதித்தனர். இன்று காலை உழவர் சந்தைக்கு வந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வாகனங்களை சாலையில் மீண்டும் தாறுமாறாக நிறுத்தினர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, சாலையில் பதிக்கப்பட்டுள்ள கயிறை தாண்டி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் இரும்பு சங்கிலியால் பூட்டு போட்டனர்.
இதற்கிடையே காய்கறி வாங்கிக்கொண்டு வெளியே வந்த பொதுமக்கள், தங்கள் வாகனங்களுக்கு பூட்டு போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் தாங்கள் இனிமேல் வாகனங்களை தாறுமாறாக நிறுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர். அப்போது போலீசார், இனி இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மதிப்பிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
- திட்டங்களை வழி வகுத்து செயல்படுத்தி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறி வருகின்றனர்.
கடலூர்:
காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் மனுநீதினால் முகம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முகாமில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,027 பயனாளிகளுக்கு 5 கோடி 12 லட்சம் மதிப்பிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில்:-
மனுநீதி நாள் முகாம்களில் மக்களின் குறைகளை போக்குவதற்கு அவர்களின் பகுதிகளிலேயே நேரடியாக சென்று அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் மக்கள் நலதிட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு தகுந்த தீர்வு காண்பதற்கு ஏதுவாக இதுபோன்ற குறை தீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மக்களுக்காக பல்வேறு முன்னேற்ற திட்டங்களை வழி வகுத்து செயல்படுத்தி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறி வருகின்றனர். வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் அதிக இலாபம் பெறலாம். இதனை வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மற்றும் விவசாயிகள் இணைந்து செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் நமது பாரம்பரிய சிறுதானிய வகை உணவிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் கேட்டுக்கொண்டார். இதில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ, உதவி ஆட்சியர் (சிதம்பரம்) சுவேதா சுமன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
- ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அருகே தம்பி பேட்டை பாளையம் கிராமம் புற்றுகோவில் ஒன்று உள்ளது. இந்த புற்றுகோயில் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இந்நிலையில் இன்று காலை கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.அங்கு முகம் மற்றும் உடலின் பகுதிகள் சிதைந்து நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த இறந்து கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் இவரை யாரேனும் கொலை செய்து இங்கு போட்டுவிட்டு சென்றனரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிநீர் வசதி கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
- புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி கிரா மத்தில் மேட்டுத்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதி யில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் விருத்தா சலம்- சிதம்பரம் சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் இன்னும் சில நாட்களில், அந்த பகுதியில் புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் விருத்தாசலம்- சிதம்பரம் சாலை யில் போக்குவரத்து சுமார் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது.
- திருமணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி உள்ளார்.
- காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கோ. பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அபிநயா (வயது 22). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 9 மாதத்தில் ஆதித்யா என்கிற ஆண் குழந்தை உள்ளது. ஏழுமலை இலங்கையில் என்ஜினீ யராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், திரும ணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி, வரதட்சணை கேட்டு, அபிநயாவின் கணவர் ஏழுமலை, மாமனார் வீராசாமி, மாமியார் தனக்கொடி, நாத்தனார் சுசிலா ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தியதுடன், இரும்பு பைப்பால் தாக்கி, மண்ணெண்ணையை ஊற்றி அபிநயாவை கொளுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, அபிநயா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் அபிநயா கண வர் ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
- உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
நீர்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட் கலெக்டர் .அருண் தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 -ம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், 100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை கிராமத்தில் மீதிக்குடி வாய்கால் 21.21 கி.மீ நிளத்திற்கு 20.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வரும் பணியினையும், வேளக்குடி கிராமத்தில் கவரப்பட்டு வாய்க்கால் 9 கி.மீ நீளத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும், காட்டுமன்னார்கோயில் கோப்பாடி கிராமத்தில் பழைய கொள்ளிடம் 3.20 கி.மீ நீளத்திற்கு ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், கீழவன்னியூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் 2.50 கி.மீ நீளத்திற்கு ரூ.25லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடி பணிகள் முன்னேற்றம் குறித்தும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின்) வாயிலாக சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பகுதியில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.435 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணி முடிவுற்று அணுகு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- கோவிலில் வருடந்தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஓம் நமசிவாய ஓம் நமசிவாய" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பாடல் பெற்ற ஸ்தலமாக பாடலீஸ்வரர் கோவில் இருந்து வருகின்றது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 25 ந்தேதி கொடியேற்றத்துடன் வைகாசி பிரமோற்சவ விழா விமர்சியாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் சாமி காலை மற்றும் மாலையில் வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. பின்னர் அதிகாரநந்தி கோபுர தரிசனம், மற்றும் நேற்று முன்தினம் மகாமேரு தெருவடைச்சான் விழா விமர்சையாக நடைபெற்றது. இன்று 7-ம் நாள் திருவிழாவின் போது தாயாருடன் பாடலீஸ்வரர் கைலாச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோவில் முன்பு எழுந்தருளி கோபுர தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று இரவு சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளி ரிஷப வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ந்தேதி 9-ம் நாள் திருவிழாவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பாடலீஸ்வரர் எழுந்தருளி கோவில் வளாகத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, திருத்தேரில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சி அளித்து எழுந்த ருளுகிறார்.
பின்னர் அங்கு திரண்டி ருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஓம் நமசிவாய ஓம் நமசிவாய" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய மாடவீதியில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைய உள்ளது. அப்போது வரதராஜபெருமாள் கோவில் சார்பாக பட்டு மற்றும் மாலை சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு தேரிலிருந்து மண்டகப்படி பூஜை மற்றும் பஞ்சமூர்த்திகள் கோவில் வந்தடைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகள் நாகராஜ் குருக்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
- வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
- அணையின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். தற்போது வீராணம் ஏரியில் 41.70 அடி தண்ணீரே உள்ளது.
கடலூர்:
வீராணம் ஏரி வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஏரியை சுற்றி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதியை பெற்று வருகிறது. கோடை வெப்பம் காரணமாக தற்போது வீராணம் ஏரி வறண்டு வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வீராணம் ஏரியில் 41.70 அடி தண்ணீரே உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். அணைக்கு நீர்வரத்து இல்லை.
அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறந்து காவிரியில் தண்ணீர் வந்தால் தான் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும். அல்லது டெல்டா பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே ஏரிக்கு நீர் வரும். ஏரி வறண்டு வருவதால் வெளிநாட்டு பறவைகள் இங்கு அதிகம் வர தொடங்கி உள்ளன. அவைகள் ஏரியில் உள்ள மீன்களை பிடித்து தின்று வருகிறது. வீராணம் ஏரி வறண்டு வருவதால் அப் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
- கடலூர் தானம் நகரை சேர்ந்தவர் ஜோதி. பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.
- தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மீட்டனர்.
கடலூர்:
கடலூர் தானம் நகரை சேர்ந்தவர் ஜோதி. பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பசுமாடு, அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பசுமாட்டை கழிவுநீர் கால்வாய்க்குள் இருந்து மீட்க முயன்றார். ஆனால் பசுமாட்டை மீட்க முடியவில்லை. இது குறித்து கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
- போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லி க்குப்பம் வைடிப்பாக்கம் பகுதியில் நெல்லிக்குப்பம் போலீஸ் சப் - இன்ஸ்பெ க்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அவரை நிறுத்தி சோதனை செய்தபோது, முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை போலீஸ் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலனியை சேர்ந்தவர் சித்தார்த் (வயது 23) என தெரிய வந்தது. மேலும் அவர் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்தார்த்தை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.






