என் மலர்tooltip icon

    கடலூர்

    • அங்காளம்மன்கோவிலுக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வந்தார்.
    • பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு சிகிச்சை க்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் காட்டுகூடலூர் சாலையில் வார சந்தை உள்ளது. இந்த வார சந்தைக்கு அருகில் அங்காளம்மன்கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலுக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்று கருவறையின் பூட்டை உடைத்தார். அப்போது பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்த ெபாதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது அங்கு கோவில் கருவறையின் பூட்டை உடைத்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு சிகிச்சை க்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் கோவிலின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது. உடனே ேபாலீசார் வழக்குபதிவு செய்து மணியை கைது செய்தனர்.

    • வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதி, வடிகால் வாய்க்கால் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் வண்டிப்பாளையம் சரவணா நகர் இணைப்பு சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று காலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார். ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி பொறியாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் வரவேற்றார்.

    இதில் பகுதி செயலாளர் சலீம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில் முருகன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்டேட் பேங்க் காலனி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து இருந்தது.
    • துணை மேயர் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் ஸ்டேட் பேங்க் காலனி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து இருந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனிடம் பொதுமக்கள் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன்படி பாதாள சாக்கடை மூடி சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனை மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறக்கவில்லை.
    • ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசிய காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். 

    இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 12-ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தமிழக முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 1200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

    இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளியில் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன ங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது.

    பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றதையும் காணமுடி ந்தது. கடலூரில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களு க்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்தும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

    • கோவிந்தம்மாளுக்கும் ராஜ்குமாருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • ராஜ்குமார், கோவிந்தம்மாளை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 56). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் முருகன் மகன் ராஜ்குமார் (35) என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கோவிந்தம்மாள் வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ராஜ்குமார், கோவிந்தம்மாளை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    • இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது.
    • சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.

    கடலூர்:

    மகளிர் போலீஸ் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து கோடியக்கரை வரை மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு போலீஸ் துறையில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட போலீசார் பாய்மர படகில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தக் குழுவினர் சென்னையில் இருந்து கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.

    இப்பயணக்குழு இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாய்மர படகு பயணத்தை கடலூர் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ரோட்டரி சங்க பிறையோன், கருணாகரன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சுந்தர் சீனு ஐ.டி.ஐ. முடித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார்.
    • காதலிப்ப தாகவும், தன்காதலை ஏற்றுக் கொள்ளும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் எஸ்.எரிப்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் சுந்தர் சீனு (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியிடம் சென்று, அவரை காதலிப்ப தாகவும், தன்காதலை ஏற்றுக் கொள்ளும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார். தனக்கு படிப்பில்தான் விருப்பம் இருப்பதாகவும், காதலிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறி காதலை ஏற்க அந்த மாணவி மறுத்துள்ளார்.

    ஆனாலும் சுந்தர் சீனு தொடர்ந்து அந்த மாண வியை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து  வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி, பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர்சீனுவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • குளிர்ந்த காற்று வீசி வருவதால் சற்று பெருமூச்சு விட்டபடி பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.
    • உடல் நிலை பாதிப்படைந்து பொது மக்கள் அவதி அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று கடுமையாக வீசி வருவதால் மதியம் முதல் மாலை வரை பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி இரவு நேரங்களில் கடும்வெயில் காரணமாக புழுக்கம் ஏற்பட்டு பொது மக்களின் இயல்பு நிலையை முற்றிலு மாக சீர்குலைந்து வருகின்றது. இதன் காரண மாக பழச்சாறு, பழ வகைகள், இளநீர், நுங்கு, கரும்பு சாறு, குளிர்பா னங்கள் போன்ற வற்றை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை கடும் வெப்பம் காரணமாக தொடர்ந்து அவதியடைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலத்த இடி மின்னலுடன் திடீர் மழையும் பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சற்று பெருமூச்சு விட்டபடி பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து அதனுடைய தாக்கம் மாலை வரை நீடித்து வந்தது. இதனால் அனல் காற்று வீசி வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 103.64 வெயில் அளவு பதிவாகி இருந்தது. இந்த நிலையில் மாலை முதல் திடீரென்று குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் பலத்த இடி மின்னலுடன் கடலூர், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாச்சலம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, அண்ணா மலை நகர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக கடுமையான வெப்பம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியதால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆங்காங்கே இந்த திடீர் மழை காரணமாக விவ சாய பணிகள் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க தாகும். மேலும் கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் கடுமையான சுட்டெரிக்கும் வெயில் மாலை நேரங்களில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு உடல் நிலை பாதிப்படைந்து பொது மக்கள் அவதி அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லிமீட்டர் அளவில் பின்வருமாறு-

    லால்பேட்டை - 30.0 சேத்தியாதோப்பு- 29.0 தொழுதூர் - 27.0 காட்டுமன்னார் கோவில் - 24.0 ஸ்ரீமுஷ்ணம் - 13.3 கொத்தவாச்சேரி - 12.0 வானமாதேவி - 10.25 பெல்லாந்துறை - 9.2 எஸ்.ஆர்.சி குடிதாங்கி - 7.0 புவனகிரி - 7.0 குப்பநத்தம் - 5.2 குறிஞ்சிப்பாடி - 5.0 அண்ணாமலைநகர்- 3.5 கீழ்செருவாய் - 3.0 சிதம்பரம் - 2.4 விருத்தாசலம் - 2.0 லக்கூர் - 2.0 கடலூர் - 0.௨ மாவட்டத்தில் ெமாத்தம் 192.05 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • பண்ருட்டியில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • பழிவாங்கும் நோக்கத்துடன் ரவுடிகள்சுற்றி திரிவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார்(18),சுமன் (24) கொக்குபாளையம் குணா(22) இவர்கள் மூவரும் கொலை வழக்கு ஒன்றில்கைதாகிஜா மீனில் ்வெளிவந்துள்ளனர். நேற்று முன்தினம் ரவுடி வசந்த் என்ற வசந்தகுமாரை கருணா கத்தியால் குத்தினார்.

    இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் ரவுடிகள்சுற்றி திரிவதாகபண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு , தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ரவுடிகள் சுமன் ,குணா இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    • திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீலஸ்ரீசுப்ரமணிய தேசிகர் ஜீவ அதிர்ஷ்டானம் எனும் சித்தர் கோவில் உள்ளது.
    • த்தர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மேற்கு மாட வீதியில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீலஸ்ரீசுப்ரமணிய தேசிகர் ஜீவ அதிர்ஷ்டானம் எனும் சித்தர் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பொரு ட்செலவில் பக்தர்களின் பங்களிப்புடன் மகா மண்டபம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதற்காக நேற்று காலை பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு ஜீவசமாதி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு ஜீவசமாதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.

    ஏராளமான சிவனடியார்கள், சிவ தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இங்கு சுப்ரமணிய தேசிகர் சமாதியும், அதே வளாகத்தில் திருவதிகை குமாரசாமி தம்பிரான் எனும் சடைச்சாமியார் ஜீவசமாதியும் உள்ளது. மேலும் சிவஞான தம்பிரான் சுவாமிகள், குண்டலபரதேசி சுவாமி ஆகிய சித்தர்களின் ஜீவ சமாதிகளும் இங்கு உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு ஜீவசமாதி இருந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்த ஜீவசமாதி எந்த காலத்தை சேர்ந்தது. இங்கு ஜீவ சமாதி நிலையில் உள்ள சித்தர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஜீவசமாதிக்கு கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ய கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க உத்திரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இக்கூட்டத்தில் பட்டா தொடர்பான 132 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 93 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 46 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 44 மனுக்களும், இதர மனுக்கள் 184 ஆக மொத்தம் 531 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக 6 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை யினையும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.22,320 மதிப்பீடிலும், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பாதுகாவலர் சான்று மற்றும் ஒரு பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி ரூ.6,800 மதிப்பீட்டிலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வாயிலாக ஒரு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையை யும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • மனோகரன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
    • 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கடந்த 2002-ம் ஆண்டு பணிபுரிந்த மனோகரன் பண்ருட்டி தனபால் தெருவை சேர்ந்த செந்தில்குமாரிடம் பண்ரு ட்டி நகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலை ப்பள்ளியில் மேல்தளம் அமைக்கும் பணியை முடிந்து அதற்குண்டான காசோலை வழங்குவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

    இவ்வழக்கை விசாரணை செய்த கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிபன்றம் கடந்த 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து மனோகரன் 2015-ம் ஆண்டு சென்னைஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி மனோகரன் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அளித்த தீர்ப்பு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 1 1/2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ.4, ஆயிரம் அபராதமும் விதிக்கபட்டது. இந்த தீர்ப்பின்படி கடலூர் ஊழல் தடுப்பு பிரிவினர் மனோகரளை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×