search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெய்வேலியில் வாலிபர் கொலையில் 2 நண்பர்கள் அதிரடியாக கைது
    X

    நெய்வேலியில் வாலிபர் கொலையில் 2 நண்பர்கள் அதிரடியாக கைது

    • நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மோதலில் ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் நன்னி தெருவை சேர்ந்தவர் முருகன். என்.எல்.சி முதலாவது சுரங்கத்தில் என்.எல்.சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராஜேந்திரன் (வயது 28) இன்ஜினியரிங் முடித்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் நண்பர்களான நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம்குமார், நெய்வேலி 21- வது வட்டத்தை சேர்ந்த ராதா மகன் செல்லப்பா, கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன், கொம்பாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உத்தண்டராஜா ஆகியோருடன் நெய்வேலி 16- வது வட்டத்தில் உள்ள ஓட்டலில் நேற்று மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இந்த மோதலில் ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த செல்லப்பா, ஓட்டலில் இருந்த விறகு கட்டையை எடுத்து ராஜேந்திரனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜேந்திரனின் நண்பர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட செல்லப்பா, உத்தண்டி ஆகியோரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட செல்லப்பா, உத்தண்டராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ராஜேந்திரனை கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு தொடர்புடைய தமிழ்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் நண்பர்களுக்கு மோதல் ஏற்பட்டு ஒருவர் கொலை செய்திருப்பது அந்த பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×