பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஷேர் ஆட்டோ மோதிபெண்கள் உட்பட 12 பேர் காயம்

சாவு ஒன்றுக்கு பெண்கள் பண்ருட்டிக்கு வந்தனர் .மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பண்ருட்டி அருகே  மோட்டார் சைக்கிள் மீது ஷேர் ஆட்டோ மோதிபெண்கள் உட்பட 12 பேர் காயம்
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( 22),இவர் பண்ருட்டி அம்மாபேட்டை கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.அப்போது விழுப்புரம் மாவட்டம் ஆனவாரி கிராமத்தில் இருந்து பண்ருட்டி அடுத்துள்ள சூரக்குப்பம் கிராமத்தில் சாவு ஒன்றுக்கு பெண்கள் பண்ருட்டிக்கு வந்தனர் ஷேர் ஆட்டோவை ஆனவாரியை சேர்ந்த வீரபாண்டியன் (28) ஒட்டி வந்தார். ஷேர் ஆட்டோ அம்மாபேட்டை அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி ஓடியது இதனால் ஆட்டோவில் வந்த கஸ்தூரி சாந்தி சக்தி உள்பட 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com