பண்ருட்டியில் தவறான சிகிச்சையால் பெண் குழந்தை பலி

பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பண்ருட்டியில் தவறான சிகிச்சையால் பெண் குழந்தை பலி
Published on

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தெற்கு மேம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி.

இவர்களுக்கு பானுஸ்ரீ என்ற 4½ வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இந்த பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் பண்ருட்டி தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பானுஸ்ரீக்கு உடலில் அலர்ச்சி ஏற்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் பண்ருட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பானுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பானுஸ்ரீயின் பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com