விருத்தாசலம் அருகே கோவில் பூட்டை உடைத்த வாலிபருக்கு தர்ம அடி:போலீசில் ஒப்படைத்தனர்

அங்காளம்மன்கோவிலுக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வந்தார்.பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு சிகிச்சை க்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விருத்தாசலம் அருகே கோவில் பூட்டை உடைத்த வாலிபருக்கு தர்ம அடி:போலீசில் ஒப்படைத்தனர்
Published on

கடலூர்:

விருத்தாசலம் காட்டுகூடலூர் சாலையில் வார சந்தை உள்ளது. இந்த வார சந்தைக்கு அருகில் அங்காளம்மன்கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலுக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்று கருவறையின் பூட்டை உடைத்தார். அப்போது பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்த ெபாதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது அங்கு கோவில் கருவறையின் பூட்டை உடைத்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு சிகிச்சை க்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் கோவிலின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது. உடனே ேபாலீசார் வழக்குபதிவு செய்து மணியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com