என் மலர்
கடலூர்
- முன்விரோத தகராறு காரணமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது .
- 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் சேர்ந்தவர் அன்பழகன்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வருகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் முன்விரோத தகராறு காரணமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது . இந்த மோதலில் அன்பழகன், புனிதா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் புனிதா, சிவா, நாகராஜ் ஆகியோர் மீதும், புனிதா கொடுத்த புகாரின் பேரில் அன்பழகன், ஆகாஷ் என தனித்தனியாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிவா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- அந்தோணிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
நடுவீரப்பட்டு அடுத்த சிலுவை பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 60). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து அந்தோணிசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அந்தோணிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல்,நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 37). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தன்று தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தராததால் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.
- புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தெற்கு மேம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி.
இவர்களுக்கு பானுஸ்ரீ என்ற 4½ வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இந்த பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் பண்ருட்டி தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பானுஸ்ரீக்கு உடலில் அலர்ச்சி ஏற்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் பண்ருட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பானுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பானுஸ்ரீயின் பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
- மோதலில் ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் நன்னி தெருவை சேர்ந்தவர் முருகன். என்.எல்.சி முதலாவது சுரங்கத்தில் என்.எல்.சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராஜேந்திரன் (வயது 28) இன்ஜினியரிங் முடித்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் நண்பர்களான நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம்குமார், நெய்வேலி 21- வது வட்டத்தை சேர்ந்த ராதா மகன் செல்லப்பா, கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன், கொம்பாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உத்தண்டராஜா ஆகியோருடன் நெய்வேலி 16- வது வட்டத்தில் உள்ள ஓட்டலில் நேற்று மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இந்த மோதலில் ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த செல்லப்பா, ஓட்டலில் இருந்த விறகு கட்டையை எடுத்து ராஜேந்திரனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜேந்திரனின் நண்பர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட செல்லப்பா, உத்தண்டி ஆகியோரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட செல்லப்பா, உத்தண்டராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ராஜேந்திரனை கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு தொடர்புடைய தமிழ்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் நண்பர்களுக்கு மோதல் ஏற்பட்டு ஒருவர் கொலை செய்திருப்பது அந்த பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- சாவு ஒன்றுக்கு பெண்கள் பண்ருட்டிக்கு வந்தனர் .
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( 22),இவர் பண்ருட்டி அம்மாபேட்டை கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.அப்போது விழுப்புரம் மாவட்டம் ஆனவாரி கிராமத்தில் இருந்து பண்ருட்டி அடுத்துள்ள சூரக்குப்பம் கிராமத்தில் சாவு ஒன்றுக்கு பெண்கள் பண்ருட்டிக்கு வந்தனர் ஷேர் ஆட்டோவை ஆனவாரியை சேர்ந்த வீரபாண்டியன் (28) ஒட்டி வந்தார். ஷேர் ஆட்டோ அம்மாபேட்டை அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி ஓடியது இதனால் ஆட்டோவில் வந்த கஸ்தூரி சாந்தி சக்தி உள்பட 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜ்மோகன் என்.எல்.சி. சுரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
- வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார்.
கடலூர்:
நெய்வேலி வட்டம் -2 என்.கே.ஆர். பிள்ளை சாலையில் வசித்து வருபவர் ராஜ்மோகன் (வயது 56). இவர் என்.எல்.சி. சுரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 9-ந் தேதி ராஜ்குமார் தனது உறவினர் திருமணத் திற்காக தனது குடும்பத்தினருடன் திருச்சி சென்றார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்மோகன் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனிப்படை போலீசார் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.
- 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என தெரிய வந்ந்தது
கடலூர்:
சிதம்பரம் நகரில் இரு சக்கர வாகனங்கள் தொடர் திருட்டு போனது. இதை தடுக்க ஏஎஸ்பி ரகுபதி உத்தரவின் பேரில் சிதம்ப ரம் நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் அமைக்கப் பட்ட தனிப்படை போலீசார் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற் கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்து அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என தெரிய வந்ந்தது. இதனை அடுத்து அந்த வாலிபரை போலீசார் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிதம் பரம் அருகே கீழமூங்கிலடி தையாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கேப்டன் பிரபா கரன் (வயது 35) என்றும், மேலும் அவர் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள் களையும் பறி முதல் செய்தனர். இது குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கேப்டன் பிரபாகரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- 25-ந்தேதி தேர் திருவிழா நடக்கிறது.
- ஆனி திருமஞ்சனம் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த 2 விழாக்களின் போது மூலவர் நடராஜர் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இதனால் இந்த இரு விழாக்களும் தனி சிறப்பு பெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நாளை மறுநாள்(சனிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினசரி காலை, மாலையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.
விழாவில் 5-வது நாளான வருகிற 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடை பெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கும், ஆனி திருமஞ்சனம் வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது. 28-ந் தேதி(புதன்கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கீழ சன்னதி முகப்பு வாசல் பகுதியில் பந்தல் போடும் பணிகள் முடிந்து கோவில் அலங்கார பணிகள் நடைபெற்று வருகிறது.
- பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது.
- மக்கள் குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் நகராட்சில் 30 வார்டுகள் உள்ளன. இதில் நெல்லிக்குப்பத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 9-வது வார்டில் கந்தசாமி தெரு, ராமு தெரு, விஜயலட்சுமி நகர், பங்களா தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து குடிநீரை பிடித்த போது கடும் துர்நாற்றம் வீசி வந்தது.
தொடர்ந்து வார்டு கவுன்சிலர் சத்யா மற்றும் பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடி நீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொது மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற நோய் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக கூறி புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து புகார் அளித்த சிறிது நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் நெல்லிக்குப்பம் பகுதியில் 5 இடங்களில் பள்ளங்கள் தோண்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று சரி செய்யும் பணியினை ஆய்வு செய்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் சரி செய்து சில நாட்களான நிலையில் மீண்டும் விஜயலட்சுமி நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் இதுபோன்று தொடர்ந்து குடிநீர் வந்தால் எப்படி மக்கள் குடிப்பது? இதனை குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர். மேலும் இது சம்பந்தமாக அதிகாரியிடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று அதிகாரிகள் அலட்சியத்தால் கழிவு நீர் கலந்த குடிநீர் வருவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொது மக்கள் தெரி வித்துள்ளனர்.
ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சியில் சில அதிகாரிகள் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் புதிய அதிகாரிகள் நிய மிக்கப்படாததால் இது போன்ற அத்தியாவசிய பணி களை யார் மேற்கொள்வது? என தெரி யாமல் நகரா ட்சி நிர்வாகம் உள்ளது. மேலும் போதுமான பணியாளர்களும் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் சீர்குலைந்து வருகின்றது. இது போன்ற மக்களுக்கு தேவையான அத்தியாவசிய குடிநீர் சரி செய்யாமல் தொடர்ந்து வருவதால் மிகப் பரிய உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்க தாகும். இதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்களா?
- வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது.
- வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது. மேலும் குறிப்பாக இந்த வீராணம் ஏரியிலிருந்து சென்னை வாழ்மக்கள் குடிநீருக்காக தினமும் தண்ணீர் செல்கிறது.
தற்போது கோடை வெயில் முடிந்த நிலையிலும் குறையாத வெப்பத்தின் தாக்கத்தால் வீராணம் ஏரியில் நீர் குறைந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் ஏரியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிருந்து சென்னை குடிநீருக்கு ஒரு நாளைக்கு அதிகமான கனஅடி அளவு தண்ணீர் அனுப்பப்பட்ட நிலையில் தண்ணீர் குறைந்து வரும் காரணத்தால் தற்போது குறைந்த அளவு தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் சென்னைக்கு அனுப்பும் குடிநீர் சுகாதாரமாக அனுப்பப்படுகிறதா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. ஏரியின் கரையோரங்களில் சேரும் சகதியுமாக காணப்பட்டு துர்நாற்றம் வீசிகின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
- தனியார் பஸ்களில் சந்தா பணம் வசூல் செய்வதாக செல்வத்திற்கு தகவல் கிடைத்தது.
- திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்குள் மோதலாக மாறியது.
கடலூர்:
கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தனியார் பஸ் சங்க நிர்வாகியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் 3 பேர் எந்தவித அனுமதியும் இன்றி முறையற்ற வகையில் தனியார் பஸ்களில் சந்தா பணம் வசூல் செய்வதாக செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற செல்வம் 3 பேரிடம் கேட்டபோது, திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்குள் மோதலாக மாறியது.
இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் முருகன் (50), ரவிச்சந்திரன் (55), புருஷோத்தமன் (51) ஆகியோர் மீதும், முருகன் கொடுத்த புகாரின் பேரில் செல்வம் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முருகன், ரவிச்சந்திரன், புருஷோத்தமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- ஆனந்தசபேசன் தனியார் டீத்தூளை சில்லரை விலைக்கும், மொத்த விலைக்கும் விற்பனை செய்து வருகிறார்.
- டீத்தூளில் கலப்படம் இருக்கலாம் என்று அந்த டீத்தூளை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பினர்.
கடலூர்:
சிதம்பரத்தை சேர்ந்தவர் ஆனந்தசபேசன் (வயது 36) இவர் அதே பகுதியில் தனியார் டீத்தூளை சில்லரை விலைக்கும், மொத்த விலைக்கும் விற்பனை செய்து வருகிறார். இவர் சிதம்பரம், சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளான புவனகிரி, வீரப்பாளையம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய கடை மற்றும் பெரிய அளவிளான கடைகளுக்கும் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக இந்த பகுதிகளில் விற்பனை செய்யும் டீத்தூள் மாத விற்பனை குறைந்து வருகிறது.
இதனால் இந்த பகுதியில் விற்கும் டீத்தூளில் கலப்படம் இருக்கலாம் என்று அந்த டீத்தூளை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பினர். இந்த ஆய்வில் போலியான டீத்தூள் என்பது உறுதியானது. இதனையடுத்து புவனகிரி ேபாலீசார் புவனகிரியில் டீத்தூள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களான கோவிந்தராஜன் (58), ராஜா (32), இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் எங்களுக்கு மொத்த விலைக்கு டீத்தூள் இங்கு கிடைக்கவில்லை அதனால் சிதம்பரத்திலுள்ள டீத்தூள் விற்பனை செய்யும் டீலர் ஆனந்தசபேசன் என்பவரிடம் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம் என்று கூறினர்.
இதனால் போலீசார் சிதம்பர த்திற்கு விரைந்தனர். அங்கு போலீசார் டீலர் ஆனந்தசபேசனை பிடித்து விசாரணை செய்ததில் இந்த டீத்தூளை கரூரில் இருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறேன் என்று கூறி யதி ன்பேரில் 3 பேரையும் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகு பதி, சேத்தி யா தோப்பு டி.எஸ்.பி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகி ன்றனர்.






